வாட்டர் மெலன் திவாகர், ரகசியத்தை உடைத்த சிறகடிக்க ஆசை நடிகர்.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: சோசியல் மீடியாவில் தனக்குத்தானே வாட்டர் மெலன் ஸ்டார் என்று பெயர் வைத்துக்கொண்ட திவாகர் கடந்த வாரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாகாபா, புகழ், கானா வினோத் எல்லோரும் சேர்ந்து என்னை கம்பியால் அடித்து விட்டார்கள் என்று பேட்டிகள் கொடுத்திருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது.
இவர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு மாகாபா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் பழனியப்பன் திவாகர் பற்றி சில தகவல்களை பேசி இருக்கிறார் இது வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி பிரச்சனை
ஏற்கனவே திவாகர் சொன்னதெல்லாம் பொய் என்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த அறந்தாங்கி நிஷா, பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன், சுனிதா போன்ற பலரும் பேட்டி கொடுத்து இருந்தனர். திவாகர் தான் பெண்களிடம் அத்துமீறி தோளில் கைப்போட்டு பேசினார். அவருடைய பேச்சு செயல்பாடுகள் எல்லாமே முகம் சுளிக்கிற மாதிரி இருந்தது. அதனால்தான் கானா வினோத் தட்டி கேட்டார், அதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது என்று விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் பேட்டி
இந்த நிலையில் பழனியப்பன் ஒரு பேட்டியில் பேசும்போது திவாகர் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது திவாகரும் பழனியப்பனும் சில நிகழ்ச்சிக்கு போயிருக்கிறார்களாம். அப்படி ஒரு நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை பற்றிய அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது, நான் ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது என்னுடைய பக்கத்தில் தான் திவாகர் அமர்ந்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வந்து இருந்தார்.
திவாகர் கேட்ட கேள்வி
அப்போது திவாகர் என்னிடம் சார் அது யார் என்று என்கிட்ட கேட்டாரு. அதற்கு நான் அவர்தான் இசையமைப்பாளர் ஸ்ரீதேவா. இசையமைப்பாளர் தேவாவின் மகன் என்று சொன்னேன். நான் இதை சொன்னதும் அவர் ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க அது எனக்கு ஏத்துக்கவே முடியல. அதாவது தேவா என்றால் யார் என்று கேட்டார்.. அங்கதான் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
பாட்ஷா, அண்ணாமலை, அவ்வை சண்முகி என எத்தனை ஹிட் படங்கள் அவர் கொடுத்திருக்கிறார், அவரையே இவருக்கு தெரியவில்லையே இவருக்கு என்ன தான் அப்போ சினிமாவில் தெரியும்? இவருக்கு ஒரு மண்ணும் தெரிய வாய்ப்பே இல்லை என்று எனக்கு அன்னைக்கு தான் புரிந்தது. நான் இந்த அதிர்ச்சியில் இருக்கும் போது இன்னொரு சம்பவம் நடந்தது.
இப்படி ஒரு மாற்றம்
அதாவது மேடைக்கு வந்த திவாகர் தேவா சாரின் மகன் ஸ்ரீகாந்த் தேவா சார் வந்தாரு என்று பேசினார். அதைக் கேட்டு எனக்கு என்ன இவர் இப்படி எல்லாம் பேசுறாரு... இவ்வளவு நேரத்திற்குள் இப்படி மாத்தி பேசுகிறார். கீழே இருக்கும் போது ஸ்ரீதேவா யாருமே தெரியலன்னு சொன்னாரு. நான் சொன்ன தகவல்களை வைத்து அப்படியே மேடையில் போய் இப்படி பேசுறாரே என்று எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது என்று பழனியப்பன் பேசியிருக்கிறார்.
யாருக்கு பொறாமை
மேலும் மாகாபா ஆனந்த், புகழ் போன்றவர்கள் எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நபர்கள் இப்படி ஒன்னுமே தெரியாத ஒருவரை பார்த்து பொறாமைப்படுபவார்களா நீங்களே சொல்லுங்க? நானும் புகழ் கூட ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்தின் படப்பிடிக்கு புதுசா போனதும் புகழைப் பார்த்து வணக்கம் தம்பி என்று சொன்னேன்.
புகழ் செய்த உதவி
உடனே புகழ் எனக்கு வணக்கம் வைத்துவிட்டு, அண்ணே இந்த படத்தில் நான் தான் உங்களுக்கு ரெகமெண்ட் செய்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு நீங்க சரியா இருப்பீங்கன்னு எனக்கு தோன்றியது அதனால் தான் உங்களை சொன்னேன் என்று சொன்னார்கள். ஏன்னா அவருக்கு அவர் கஷ்டப்பட்டு வந்ததால் அடுத்தவர்களுடைய கஷ்டமும் தெரியும்.
நாங்கள் அதற்கு முன்பு பெரிதாக பழக்கம் இல்லை என்றாலும் அவர் எனக்காக அன்னைக்கு பேசியிருக்கிறார். அப்படி கஷ்டப்பட்டு வந்தவரா ஒண்ணுமே தெரியாதவரை பார்த்து பொறாமை படுகிறார்? என்று பழனியப்பன் கேட்டிருக்கிறார். இந்த பேட்டி வைரலாகி வரும் நிலையில் இதற்கும் திவாகர் என்னதான் பதில் சொல்லப் போறாரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.












Click it and Unblock the Notifications