சிறகடிக்க ஆசை சீரியல் கதாநாயகிக்கு அடுத்த ஜாக்பாட்.. சன் டிவி சீரியலில் கிடைத்த வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சால்மாவிற்கு சன் டிவி சீரியலில் வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

எந்த வகையில் இப்போது சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் சீரியலாக சிறகடிக்க ஆசை சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தாலும் இணையத்தில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. காரணம் இந்த சீரியலின் கதை எதார்த்தமாக இருப்பதாகவும்,

Siragadikka aasai serial Actress Salma got an opportunity in the Sun TV serial

அதே நேரத்தில் மற்ற சீரியல்களை காட்டிலும் இதில் காமெடி கலந்த சுவாரஸ்யம் ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போன்றே இருப்பதாலும் இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் முத்து மற்றும் மீனாவிற்க்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். முத்துவின் கேரக்டர் பல மனிதர்களின் இயல்பான கேரக்டரின் அடிப்படையில் இருக்கிறது.

கோபம் மற்றும் பாசம் ஒருங்கே இருப்பதை பார்த்த பலரும் இது நம்முடைய கேரக்டர் போலவே இருக்கிறதே என்று இந்த சீரியலை ஆண்களும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களும் மத்தியில் பிரபலமடைந்திருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த சீரியலில் முத்து மற்றும் மீனாவிற்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதுபோல மனோஜ் மற்றும் ரோகிணிக்கு அதிகமான நெகட்டிவ்வர்ஸ் இருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் தங்களுடைய நடிப்பை தான் காட்டுகிறார்கள் என்பதையும் மறந்து இவர்களை நிஜத்திலும் திட்டிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சல்மா பேசி இருக்கிறார் அதில், நான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட்டுகள் போடும்போது அதிகமாக கமாண்ட் ஆப் பண்ணி விடுவேன். ஏனென்றால் பலர் கமெண்ட்களில் என்னை திட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

Siragadikka aasai serial Actress Salma got an opportunity in the Sun TV serial

அதிலும் நான் முத்து மற்றும் மீனாவை திட்டுவதை பார்த்து பலரும் என்னை திட்டுகிறார்கள். வெளியே செல்வதற்கு கூட சில நேரங்களில் பயமா இருக்குது. அதே நேரத்தில் என்னுடைய கேரக்டர் ரோகினியை போல கிடையாது என்று கூறியிருக்கிறார். சல்மா அருண் சென்னையில் தான் பிறந்து வளர்ந்து இருக்கிறார். ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்த இவருக்கு இவருடைய கணவரின் சப்போர்ட் அதிகமாக இருக்கிறதாம்.

திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகுதான் இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார். அதிலும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஒரு சில காட்சிகளில் வந்திருப்பார். அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் அமுதாவின் அண்ணியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

Siragadikka aasai serial Actress Salma got an opportunity in the Sun TV serial

இந்த நிலையில் இந்த சீரியல் மூலமாக இப்போது சன் டிவியில் தனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக சல்மா கூறியிருக்கிறார். சிறகடிக்க ஆசை சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தாலும் சன் டிவியில் கமிட் ஆகி இருக்கும் சீரியல் ஓரளவுக்கு பாசிட்டிவான கேரக்டராக தான் இருக்கிறது என்று சல்மா கூறியிருக்கிறார். ஆனால் என்ன சீரியல் என்பது குறித்து சல்மா தெரிவிக்கவில்லை. இன்னும் சில நாட்களில் அது தெரியவரும் என்று கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+