அப்பா பற்றி விஜயாவிடம் ரோகிணி சொன்ன வார்த்தை.. உண்மையை கண்டுபிடித்த மீனா.. முத்து இப்படி செஞ்சிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் பத்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ஸ்ருதி மற்றும் ரவி வீட்டிற்கு வராமல் நான் சாப்பிட மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருந்த விஜயாவை சாப்பிட வைப்பதற்காக முத்து முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் விஜயா, ரோகினி இடம் அவருடைய அப்பாவை பற்றி கேட்டு மீண்டும் மிரட்டுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் முத்து டைனிங் டேபிளில் இழையை போட்டு , பிரியாணியை வைத்து சிக்கன் 65, முட்டை, ரைத்தா என எல்லாவற்றையும் பரிமாற வாசனையை பார்த்து மனோஜ் ரோகிணியையும் அம்மாவையும் கூப்பிட ரோகிணி அலையாத என்று திட்டுகிறார். அப்போது விஜயா எனக்கு ஒன்னும் வேண்டாம் என்று வீராப்பாக உட்கார்ந்து இருக்க, முத்து அண்ணாமலையை கண்காட்டி சாப்பிட கூட்டி செல்கிறார்.

Siragadikka aasai serial April 10th promo and episode full update

பிறகு ரோகிணி ஆன்ட்டி பட்டினியா இருந்தா உங்களுக்கு அல்சர் வந்துரும். கிட்னியில் ஸ்டோன் வந்துரும் என்று சொல்லவும் விஜயா அதற்கும் எனக்கு வேண்டாம் என்று வீம்பாக உட்கார்ந்து இருக்கிறார். அதோடு நீங்க வேணா போய் சாப்பிடுங்க என்று விஜயா சொன்னதும் சரி என்று ரோகிணி மனோஜை கூட்டிக்கொண்டு வந்து சாப்பிட உட்காருகிறார். அதற்கு முத்து இது ஒன்னும் சாதாரண பிரியாணி கிடையாது.

பிரசாதம் என்னுடைய முஸ்லிம் பிரண்ட் வீட்டில் நோன்பு இருக்காங்க. அதற்காக சாமிக்கு படையல் வச்சி என்கிட்ட கொடுத்து இருக்காங்க. இதை எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டு ஒரு விஷயத்தை வேண்டுமென்று வேண்டினால் அது கண்டிப்பா நடக்கும். குறிப்பா பிரிஞ்சு போனவங்க திரும்பவும் வீடு வந்து சேர்ந்திடுவாங்கன்னு சொன்னதும் விஜயா சரி என்னுடைய பிள்ளைக்காக நான் இதை சாப்பிட அவன் இந்த வீட்டுக்கு வரணும் என்று சாப்பிட உட்காருகிறார்.

பிறகு பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட அண்ணாமலை அதை பார்த்து கிண்டல் செய்ய அதற்கு விஜயா நான் ஒன்னும் பசிக்காக சாப்பிடல, என் பிள்ளை வரவேண்டும் என்பதற்காகத்தான் சாப்பிடுறேன் என்று சமாளிக்கிறார். பிறகு மனோஜ் பிரியாணி சூப்பரா இருக்கு என்று சொல்ல அதற்கு முத்து இதற்கு தேவையான பொருட்களை எல்லாம் வெளிநாட்டிலிருந்து வர வச்சு செஞ்சிருக்காங்க என்று சொல்ல விஜயாவுக்கு ரோகிணியின் அப்பா ஞாபகம் வருகிறது.

அதோடு ரோகிணியிடம் நான் இந்த பிரச்சனையில் உங்க அப்பாவை மறந்துட்டேன். உங்க அப்பா ஏன் வரல? எங்க இருக்காரு? ஏர்போர்ட்டில் இருந்து இன்னுமா வந்துட்டு இருக்காரு? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, முத்து எனக்கு என்னவோ இதெல்லாம் நம்பற மாதிரி தெரியலையே என்று ஏத்தி விட விஜயா கோபப்படுகிறார். அதற்கு அண்ணாமலை இப்போ எதுக்கு இதெல்லாம் முதல்ல சாப்பிடுங்க என்று சாப்பிட வைக்கிறார்.

பிறகு விஜயா ரோகிணி ரூமுக்கு சென்று உண்மையாவே உங்க அப்பா வருவாரா? வரமாட்டாரா? நீ சொல்ற கதை எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் ஒன்னும் முட்டாள் கிடையாது. உண்மையாவே உனக்கு அப்பா இருக்காரா? இல்ல நீ கற்பனையில் அப்பா இருக்காருன்னு நெனச்சிட்டு இருக்கியா? என்று திட்ட அதற்கு ரோகிணி அப்படி எல்லாம் இல்ல ஆண்டி, எனக்கும் எங்க அப்பா வரணும் அவர்க கிட்ட பேசணும் என்று ஆசை இருக்காதா?

அவர் போனையே எடுக்க மாட்டேங்கிறார் என்று கண்ணீர் விட்டு அழ அதற்கு விஜயா இந்த அழுகை எல்லாம் நான் நம்ப மாட்டேன். உங்க அப்பா இங்க வந்தே ஆகணும் இல்லனா இந்த வீட்டில உனக்கான இடம் எது என்று நீ நான் தேர்வு செய்ய வேண்டியது இருக்கும். மேனேஜ்காக கூட நான் பார்க்க மாட்டேன் என்று வார்னிங் கொடுக்க ரோகிணி அதிர்ந்து போய் நிற்கிறார்.

அடுத்ததாக முத்து ரூமுக்குள் இருக்க மீனா சீரக தண்ணீர் கொடுத்துக்கொண்டு பிரியாணி பற்றி நோண்டி நோண்டி கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு முத்து அம்மாவை சாப்பிட வைக்கணும் என்பதற்காகத்தான் நான் கடையில் பிரியாணி வாங்கிட்டு வந்தேன் என்று உண்மையை ஒத்துக் கொள்கிறார். அதற்கு மீனா உங்க அம்மா உங்களை ஒரு தடவை கூட பிள்ளையா பார்க்கிறதே கிடையாது.

ஆனா நீங்க அவங்கள சாப்பிட வைக்கிறதுக்காக என்னெல்லாம் வேலை பார்த்து இருக்கீங்க என்று சொல்ல, அதற்கு முத்து எனக்கு முதல் வாய் சோறு தந்தது என்னுடைய அம்மா தானே என்று சென்டிமென்டாக பேசுகிறார். அதற்கு மீனா முத்துவை பாராட்ட, அதற்கு முத்து வெறும் பாராட்டு மட்டும்தானா? என்று கன்னத்தில் முத்தம் கேட்க அதற்கு மீனா முத்துவை தள்ளிவிட்டு சவாரி இருக்குன்னு சொன்னீங்களே போயிட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறார். பிறகு முத்து கிளம்பி போக மீனா முத்துவை பார்த்து சிரிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+