ரோகிணிக்கு மாமாவாக நடித்தவரால் விஜயாவுக்கு தெரிய வந்த விஷயம்.. உண்மையை கண்டுபிடித்த மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் பதினொன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணிக்கு மாமாவாக நடித்த கறிக்கடைக்காரர் ரோகிணியின் வீட்டிற்கு மீண்டும் வந்திருக்கிறார். அவர் பேசியதை கேட்டு விஜயா அதிர்ச்சியாகி இருக்கிறார்.
ஏற்கனவே ரோகிணியிடம் அப்பா எங்கே என்று நச்சரித்துக் கொண்டிருக்கும் விஜயா இன்றைய எபிசோடில் உங்க அப்பா உண்மையில் இருக்கிறாரா? இல்லை நீ என்னை ஏமாற்றிக்கிட்டு இருக்கிறியா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அதோடு உங்க அப்பா விஷயத்தில் ஏதாவது என்கிட்ட மறைக்கிறியா? என்று துருவி துருவி கேட்க அதற்கு ரோகிணி அப்படி எல்லாம் இல்ல அத்தை அவர் ஏன் வரலன்னு எனக்கு தெரியல,

அவர் நான் போன் பண்ணுனா எடுக்கவே இல்ல, எனக்கு பயமா இருக்கு எனக்கும் எங்க அப்பா வரணும் அவர்கிட்ட பேசணும் என்று ஆசை இல்லையா? என்று அழுது நடிக்க அதற்கு கொஞ்சம் கூட அசராத விஜயா இந்த அழுகைக்கெல்லாம் நான் மனம் இறங்க மாட்டேன். உண்மையில் உங்க அப்பா இங்கே வந்தே ஆகணும். அப்படி வரலைன்னா நடக்கிறதே வேற... இந்த வீட்டில் இனி நீ எப்படி இருக்கணும் என்ற முடிவை நான் தான் எடுப்பேன்.
அதேபோல மனோஜுக்காக கூட நான் மனம் மாற மாட்டேன் என்று இன்றைய எபிசோடில் மிரட்டி இருக்கிறார். இப்படியான நிலையில் நாளைக்கு என்று வெளியான வீடியோவில் ஏற்கனவே ரோகிணியின் மாமாவாக நடித்த கறிக்கடைக்காரர் விஜயா வீட்டிற்கு வந்து விஜயா மற்றும் அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணியின் அப்பாவை அவருடைய நண்பர்கள் சிலர் சதி வேலை செய்து ஏமாற்றி பிசினஸில் கடனில் முழ்க வச்சுட்டாங்க.
அதனால் ரோகிணியின் அப்பா இப்போ மலேசியா ஜெயிலில் இருக்கிறார்கள் என்று சொல்ல அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாகிறார். அதற்கு முத்து என்னது மலேசிய ஜெயிலில் இருக்காங்களா ?என்று கேட்க ஆமாப்பா அப்படித்தான் சொல்ல சொன்னாங்க என்று கறிக்கடைக்காரர் வாயை விட்டு விடுகிறார். இதை சரியாக பிடித்த மீனா என்னது சொல்ல சொன்னாங்களா? என்று கேள்வி கேட்க, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கறிக்கடைக்காரர் முழித்துக் கொண்டிருக்கிறார்.

இனி கறிக்கடைக்காரரால் ரோகிணி மாட்டப் போகிறாரா? அல்லது கறிக்கடைக்காரர் சொல்லும் பொய்யை விஜயா நம்பி விடுவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அதே நேரத்தில் மீனாவிற்கு ஆரம்பத்தில் இருந்து ரோகிணி நடவடிக்கையில் சின்ன சின்ன சந்தேகங்கள் இருக்கிறது. ஏற்கனவே ரோகிணியை தம்பி வேலை பார்க்கும் சிட்டியிடமும் ரோகிணி கடன் வாங்கி இருக்கிறார்.
அந்த விஷயமும் இனி வீட்டிற்கு எப்போது தெரியவரும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதே நேரத்தில் ரோகிணி இன்னொரு பெரிய பிரான்ச்சில் தன்னுடைய பியூட்டி பார்லரை இணைத்து இருப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் அதை விற்றுவிட்டு அங்கே வேலைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது முத்துவுக்கு தெரியும்.

ஆனால் முத்து அண்ணாமலைக்காக வீட்டில் இப்போதைக்கு அதை மறைத்து வைத்திருக்கிறார். இனி முத்துவும் அதை எல்லார் முன்பும் சொல்வாரா? அப்படி சொன்னால் விஜயா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications