சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 15 ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜ்க்கும் அமெரிக்க பெண்ணுக்கும் என்கேஜ்மென்ட் நடைபெறுகிறது. அதே நேரத்தில் மனோஜும் விஜயாவும் பெரிய உண்மையை குடும்பத்திடம் மறைக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial April 15, 2026 episode update) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மனோஜ் எங்கேஜ்மென்ட் மோதிரத்தை காணவில்லை என்று சொன்னதும் மொத்த குடும்பமும் பதட்டமாகி தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்போதும் முத்து, அந்த மோதிரத்தை வைத்து என்னவெல்லாம் பண்ணுன எங்க கொண்டுட்டு போனா? என்றெல்லாம் கேட்க மனோஜ் தான் செய்து எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கடைசியில் அவர் பாக்கெட்டில் தான் மோதிரத்தை போட்டார் என்பது தெரியவர, முத்து அதை கண்டு எடுத்து கொடுக்கிறார். அதை பார்த்ததும் மனோஜ் ஐயோ மறந்துட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் புரோகிதர் வருகிறார். அவர் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அமெரிக்க குடும்பத்தினரும் வருகின்றனர்.
மாட்டிவிட்ட ஸ்ருதி
பிறகு எல்லோரும் நலம் விசாரித்து விட்டு மோதிரம் மாற்றி என்கேஜ்மென்ட் செய்கின்றனர். அப்போது எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது விஜயா தன்னுடைய மருமகள்கள் மகன்கள் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதிலும் ஸ்ருதி பற்றி ஓவராக பெருமையாக பேச அதற்கு ஸ்ருதி என்னை விட எங்க மாமியாருக்கு மீனாவை தான் ரொம்ப பிடிக்கும். மீனாவை தான் ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க என்று சொல்கிறார். விஜயா திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார்.
எங்கேஜ்மென்ட் நடந்தாச்சு
பிறகு எங்கேஜ்மென்ட் முடிந்து எல்லோரும் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். கடைசியாக மனோஜ் அமெரிக்க பொண்ணு கூட போட்டோ எடுத்து அவரை வெளியே அனுப்பி வைக்கிறார். அந்த நேரத்தில் மனோஜின் விவாகரத்து வழக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வக்கீல் முத்துக்கு போன் பண்ணுகிறார். ஆனால் அவர் என்ன சொன்னார் என்பது முத்துவுக்கு கேட்கவில்லை இதனால் அவர் பிறகு பேசலாம் என்று முடிவு எடுத்து விடுகிறார்.
அடுத்ததாக குடும்பத்தினர் எல்லோரும் மனோஜின் கவிதையை சொல்லி கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது விஜயா கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை பார்க்க தொடங்கி விடுகிறார். யாருக்கெல்லாம் இன்விடேஷன் கொடுக்க வேண்டும் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஸ்ருதி கேட்ட கேள்வி
அப்போது முத்துவும் மீனாவும் ஏன் இவ்வளவு சீக்கிரமா தொடங்கிட்டீங்க இன்னும் கல்யாண தேதியே பிக்ஸ் பண்ணலையே என்று கேட்க அதற்கு விஜயா, ஏற்கனவே நடந்த கல்யாணம்தான் என் மகன் வாழ்க்கையில் திருஷ்டி போல மாறிடுச்சு இனி நடக்கும் கல்யாணத்தை அவன் வாழ்க்கைக்கு மறக்கவே கூடாது அதனால நான் எல்லா ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஸ்ருதி முறையாக டைவர்ஸ் வாங்குன பிறகு தான் நாம கல்யாணத்தை வச்சுக்கணும் இல்லனா ரோகிணி இன்னும் பல இடங்களில் கம்ப்ளைன்ட் கொடுத்து பெரிய பிரச்சனை பண்ணுவாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
விஜயா சொல்லும் பொய்
ஆனாலும் விஜயா கோர்ட்டில் நடந்த விஷயங்களை சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை வந்து எங்கேஜ்மென்ட் நல்லபடியாக நடந்தது சரிதான். ஆனால் கல்யாணத்திற்கு முன்பு விவாகரத்து முடிந்து விடனும் அப்பதான் கல்யாணத்தை திருப்தியா பண்ண முடியும் என்று சொல்ல, அதற்கு விஜயா நீதிபதி இனி ரோகினியும் மனோஜும் சேர்ந்து வாழ முடியாதுன்னு லெட்டர் குடுத்துட்டாரு. சீக்கிரமா டைவர்ஸ் கிடைச்சிடும் என்று விஜயா பொய் சொல்கிறார். ஆனால் அதைக் கேட்ட மனோஜ் திருதிருவென முழித்து கொண்டு நிற்கிறார். கடைசியில் மனோஜ் உண்மையை சொல்ல வர அதையும் விஜயா தடுத்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications