சிறகடிக்க ஆசை: முத்து, மீனாவை வீட்டை விட்டு துரத்தும் விஜயா.. அண்ணாமலை இப்படி முடிவெடுத்துட்டாரே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து மற்றும் மீனாவை விஜயா வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அதற்கு முத்துவும் மீனாவும் வீட்டை விட்டு கிளம்ப ரெடி ஆகின்றனர்.
அதே நேரத்தில் வீட்டை விட்டு வெளியே போகும் முத்து தன்னோடு அண்ணாமலையையும் கூப்பிட அதை பார்த்து விஜயா அதிர்ச்சியாகிறார். அதற்கு அண்ணாமலை அதிரடியான பதிலை கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் முத்துவை எப்படியாவது கோபப்படுத்த வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருந்த வாசுதேவன் கண்ணில் மீனா ஸ்ருதி கழட்டி போட்ட மாலையை எடுத்து பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அந்த மாலையோடு ஸ்ருதி தங்க செயினோடு கழட்டி போட்டு இருப்பதால் இது வேறு யாரும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மீனா அந்த மாலையில் இருந்து செயினை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து மீனாதான் அந்த செயினை திருடுவதற்கு முயற்சி செய்தார் நாங்கள் கண்ணால் பார்த்தோம் என்று வாசுதேவனும் சுதாவும் பிரச்சனை செய்கின்றனர்.

ஆனால் இதையெல்லாம் கேட்டு விஜயா எதுவும் சொல்லாமலே வாயை மூடிக்கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் முத்து மீனாவுக்கு ஆதரவாக ஆரம்பித்ததில் அமைதியாக பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் வாசுதேவன் பேசுவதை பொறுக்க முடியாமல் வாசுதேவனை போட்டு அடித்து விடுகிறார். இதனால் கோபமான ஸ்ருதி இனி நான் முத்து இருக்கும் வீட்டிற்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறார். இப்படியாக எபிசோடு இருக்கும் நிலையில் தற்போது வரும் நாட்களுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் வீட்டில் கோபமாக இருக்கும் விஜயா, முத்து மற்றும் மீனா வீட்டிற்குள் வரும்போது இனி இந்த மீனாவும் முத்துவும் வீட்டுக்குள் இருக்கக் கூடாது. இவங்க வீட்டை விட்டு போனாதான் ஸ்ருதியும் ரவியும் வீட்டிற்குள் வருவாங்க. அதனால நீங்க வீட்டை விட்டு வெளியே போங்க என்று கோபமாக பேச அதற்கு முத்து என்ன இப்ப நாங்க இந்த வீட்ல இருக்க கூடாது...

அவ்வளவு தானே? மீனா நம்ம துணிமணிகளை எல்லாம் எடுத்து வை என்று சொல்லியபடியே அப்பா வா நம்ம போகலாம் என்று அண்ணாமலையை கூப்பிட அதற்கு விஜயா நான் உங்கள தான போக சொன்னேன். நீ எதுக்கு இவரை கூப்பிடுற என்று திட்ட அதற்கு முத்து நான் என் அப்பாவை என்கூட தான் கூட்டிட்டு போவேன் என்று சொல்ல,

அதற்கு அண்ணாமலை ஆமா என்னுடைய மகன் எங்க இருக்கிறானோ அங்க தானே நானும் போக முடியும். என் மகன் பேச்சை தான் நான் கேட்பேன்... மீனா என்னுடைய துணிகளையும் சேர்த்து எடுத்து வைம்மா நாம கிளம்புவோம் என்று சொல்ல, அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாகி இருக்கிறார். இதனால் இனி முத்து மற்றும் மீனா வீட்டை விட்டு போகப் போகிறார்களா? அல்லது ஸ்ருதியும் ரவியும் மீண்டும் வீட்டிற்கு எப்படி வரப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications