சிறகடிக்க ஆசை: விஜயாவை அழ வைத்த ரோகிணி.. முத்து பாயிண்டை பிடிச்சிட்டாரு! மீனாவுக்கு வந்த சந்தேகம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகிணி ஏற்கனவே கர்ப்பமாக இருந்த விஷயம் மீனா மூலமாக வீட்டிற்கு தெரிய வந்திருக்கும் நிலையில் வழக்கம்போல ரோகிணி அழுது நடித்து ஏமாற்றி விடுகிறார். ஆனால் மொத்த பழியும் மீனா மீது விழுகிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி எனக்கு குழந்தை அபார்ஷன் ஆன விஷயம் உங்களுக்கு தெரிஞ்சா நீங்க உடைஞ்சு போயிருவீங்கன்னு தான் ஆண்ட்டி உங்ககிட்ட சொல்லல மத்தபடி உங்களை ஏமாற்றனும் என்று நான் நினைக்கவே இல்லை என்று நாடகமாட அதை விஜயாவும் நம்பிவிடுகிறார்.

அதோடு விஜயாவும் அழுது கொண்டு நான் உன்னை ஏன் சந்தேகப்படுகிறேன். உன் மீது எனக்கு கோபம் இல்ல. ஆனா நீயும் மனோஜூம் சந்தோஷமா வாழ வேண்டும் என்று தான் எனக்கு ஆசை என்று சொல்லி இந்த விஷயத்தை யார் சொன்னது என்று கேள்வி ஆரம்பிக்கிறது. அண்ணாமலை முத்துவை சொல்ல, முத்து எனக்கு ரவி தான் சொன்னான் என்று சொல்ல, ரவி எனக்கு ஸ்ருதி சொன்னதை சொல்ல, அதற்கு ஸ்ருதி எனக்கு எப்படி தெரியும் என்று கேட்காதீங்க மீனாதான் சொன்னாங்க என்று மீனாவை காட்டி கொடுத்து விடுகிறார்.
உடனே விஜயா மீனாவிடம் கோபமாக பேச அதற்கு ரோகிணி என்னோட பர்சனல் விஷயத்துல தலையிடாதீங்கனு உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன். உங்களுக்கு அசிங்கமா இல்லையா? என்னை வேவு பார்க்கிறதுதான் உங்களுடைய வேலையா? என்று கோபமாக பேச அதற்கு முத்து மீனா ஒன்னும் தப்பா சொல்லலையே... இல்லாததை சொல்லல.. நீங்க மறச்ச விஷயத்தை தானே சொல்லி இருக்கா. அவளுக்கு தெரிய வந்த விஷயத்த சொல்லி இருக்கா இதுல என்ன தப்பு இருக்கு என்று மீனாவுக்காக பேசுகிறார்.

அதற்கு விஜயா உன்கிட்ட வந்து யாராவது ரோகிணி பற்றி சொன்னாங்களா என்று கேட்க இல்ல நான் ஹாஸ்பிடலுக்கு போன இடத்தில விசாரிச்சேன் என்று சொல்ல அதற்கு ரோகிணி என்ன பற்றி நீங்க எதற்கு விசாரிக்கீங்க? உங்க விஷயத்தில் நான் தலையிடுறேன்னா? என்று கோபப்பட அதற்கு அண்ணாமலை கூட்டு குடும்பம் என்றால் அப்படித்தான் இருக்கும் எந்த விஷயத்தையும் மறைக்க முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
பிறகு முத்து மீனாவுக்கு ஆறுதல் சொல்கிறார். அதற்கு மீனா எனக்கு என்ன இருந்தாலும் ரோகிணி மேல ஒரு சந்தேகம் இருக்கு. அவங்க வாழ்க்கையில் என்னமோ நடந்து இருக்குன்னு எனக்கு தோணுது என்று சொல்ல அதற்கு முத்து அந்த பார்லர் அம்மா கேடினு ஏற்கனவே தெரியும் என்று சொல்ல, இதை எல்லாம் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். பிறகு இந்த வீட்டில் நம்ம இருந்தா இனி சரிப்பட்டு வராது என்று யோசித்து விஜயாவிடம் வந்து எனக்கு இங்க பிரைவசி இல்ல நானும் மனோஜும் வீட்டை விட்டு போக போறோம் என்று சொல்கிறார்.
அதற்கு விஜயா நீங்க ஏன் போகணும்? அந்த பூ கட்டுரவளை எப்படி இங்க இருந்து அனுப்பனும்னு எனக்கு தெரியும் நீ போ நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிடுகிறார். அதோடு நீயும் மனோஜ், ஸ்ருதி, ரவி மட்டும் தான் இந்த வீட்டில் இருக்கணும். மீனாவையும் முத்துவையும் இங்கிருந்து வெளியே அனுப்பிடலாம் என்று சொல்கிறார். பிறகு மனோஜ் ரோகிணிடம் வந்து நடந்ததை பற்றி யோசிக்க வேண்டாம் என்று சொல்ல அதற்கு ரோகிணி என்னை எல்லாரும் கஷ்டப்படுத்துறாங்க நாம இந்த வீட்டை விட்டு போயிடலாம் என்று சொல்கிறார்.

அதற்கு மனோஜ் நான் இல்லாமல் அம்மா இங்கே இருக்க மாட்டாங்க. அம்மாவை நாம கூட்டிட்டு போக முடியாது அதனால நாம இந்த வீட்டை விட்டு போக முடியாது என்று சொல்லிவிடுகிறார். அதற்கு ரோகிணி முத்து படிக்கல ஆனாலும் அவர் இந்த வீட்டில் அதிகாரம் பண்ணிட்டு இருக்கிறார். அதுபோல மீனாவும் இந்த குடும்பத்தில் அதிகாரம் பண்ணிட்டு இருக்கிறாங்க. நம்மளுடைய விஷயத்தில் அடிக்கடி தலையிடுறாங்க என்று சொல்ல,
அதற்கு மனோஜ் அவங்களை பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு எனக்கு உனக்கு ஒரு குழந்தை உண்டானது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்ல, அதற்கு ரோகிணி அந்த குழந்தை தான் நமக்கு இல்லாம போயிடுச்சு என்று சொல்ல அது போனாலும் பரவாயில்லை. இன்னொரு குழந்தை உண்டாகுமே நீ ஏற்கனவே எனக்கு ஏதாவது குறையா இருக்குமோன்னு கேட்டியே அது என் மனசுக்குள்ள உறுத்திக்கிட்டே இருந்தது.
ஆனால் இப்போ நமக்கு ஒரு குழந்தை உருவாகி இருக்கு என்று தெரியும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு. அப்போ உனக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லன்னு தானே அர்த்தம். அந்த குழந்தை இப்போ இருந்திருந்தால் நாம ஹாஸ்பிடலுக்கு போய் இருப்போமில்ல என்று குழந்தையை பற்றியே பேசிக்கொண்டு இருக்க ரோகிணி அதிர்ச்சியில் மனோஜ் நெஞ்சில் சாய்ந்து அழுகிறார். அதோடு சாரி மனோஜ் நான் உன்கிட்ட நிறைய பொய் சொல்லிட்டேன் என்ன மன்னிச்சிடு என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications