க்ரிஷை தத்தெடுப்பது பற்றி ரோகிணி சொன்ன வார்த்தை.. சந்தோஷத்தில் மீனா.. முத்துவின் அடுத்த பிளான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 6-ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் க்ரிஷை தத்தெடுக்க போவது பற்றி முத்துவும் மீனாவும் வீட்டில் பேசி இருந்த நிலையில் ரோகிணி அதற்கு எதிர்பாராத வார்த்தை சொல்கிறார். அதே நேரத்தில் மீனாவிற்கும், முத்துவிற்கும் சந்தோஷமான செய்தி ஒன்றும் வந்திருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் க்ரிஷை தத்தெடுப்பது பற்றி முத்துவும் மீனாவும் பேச விஜயா கோபப்படுகிறார். இந்த பையனோட அம்மாக்காரியே அந்த பையன் விட்டுட்டு போயிட்டா உங்களுக்கு என்ன அக்கறை என்று கேட்க, அந்தப் பாட்டிக்கு பிறகு க்ரிஷ் அனாதையா மாறிடுவா யாரும் இல்லாமல் தனியா வளருது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தான் தெரியும் என்று முத்து கோபப்படுகிறார். அதைத் தொடர்ந்து மீனா, அதுக்கு தான் கோவிலில் சீட்டு போட்டு பார்த்தோம். அதில் தத்தெடுக்க வேண்டாம்னு வந்துடுச்சு என்று உண்மையை உளறி விடுகிறார்.

அந்த நேரத்தில் எல்லாவற்றையும் முன் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ரோகிணி பிறகு வீட்டிற்குள் வந்து எதுவும் தெரியாதது போல என்ன ஆன்ட்டி பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க, ரோகிணி நீயே கேளு நம்ம வீட்டுக்கு தலையில் கட்டு போட்டுட்டு ஒரு பையன் வந்தானே அந்த பையனை இவங்க தத்தெடுக்க போறாங்களாம் என்று விஜயா சொல்ல, அதற்கு மனோஜ் ஆமா அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா அவன் ஏதாவது திருடிட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவது என்று சொல்ல, அதற்கு முத்து எல்லாரும் உன்னை மாதிரி இருந்துடுவாங்களா என்று பதிலடி கொடுக்கிறார்.

அதோடு நீங்க சொல்றதை எல்லாம் நான் கேட்க முடியாது. நான் அப்பா சொல்றதை மட்டும் தான் கேட்பேன் என்று முத்து எல்லோருக்கும் ஷாக் கொடுக்கிறார். பிறகு இது பற்றி அண்ணாமலையும், முத்துவும் மீனாவும் எடுத்துருக்க முடிவு நல்ல விஷயம் தான். அதிலும் அவங்க பாட்டியோட சம்பந்தமும் அந்த பையனோட விருப்பமும் ரொம்ப முக்கியம். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என்று அவரும் சொல்ல அதைத்தொடர்ந்து ரவியும், ஸ்ருதியும் தத்தெடுப்பது நல்ல விஷயம் தான் என்று சொல்கின்றனர்.
பிறகு முத்து மீனாவிடம் சொல்லி ரோகிணி அம்மாவிற்கு போன் போட அவர் போட எடுக்கவில்லை அதற்கு மீனா கொஞ்சம் பொறுமையாக இந்த முடிவை எடுக்கலாம் என்று முத்துவிடம் சொல்ல என் பொண்டாட்டிக்கு எவ்வளவு அறிவு என்று முத்து கொஞ்சுகிறார். அந்த நேரத்தில் ரோகிணி தன்னுடைய ரூமிருக்கு சென்று தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் போட க்ரிஷ் போனை எடுத்து பேசுகிறார். பிறகு பாட்டி இடம் போனை கொடு என்று சொன்னதும் க்ரிஷ் போனை பாட்டி இடம் கொடுத்ததும் ரோகிணி அம்மாவை திட்டுகிறார்.
இதற்கு தான் நான் அந்த மீனா கூட உன்னை பழக கூடாதுன்னு சொன்னேன். இப்போ அவங்க க்ரிஷை தத்தெடுக்க போறேன்னு என் முன்னாடியே சொல்றாங்க. அவன் என்ன அனாதையா? நான் இருக்கும்போது அவங்க எப்படி தத்தெடுக்க முடியும்? என்று சொல்ல, அதற்கு ரோகிணியின் அம்மா இந்த முடிவு கூட நல்லது தானே அப்படி அவங்க தத்தெடுத்தாங்கன்னா உன்கூட வளருவானே என்று சொல்ல நான் பெத்த புள்ள அவகிட்ட வளரணுமா ஒன்னும் வேண்டாம்,

நீ மீனா போன் பண்ணுனா எடுக்க கூடாது என்று சொல்ல, அவங்களுக்கு தான் வீடு தெரியுமே நேரடியா வீட்டுக்கே வந்துருவாங்களே என்று சொல்ல அதற்கு நான் ஒரு முடிவு எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ரோகிணி போனை வைத்து விடுகிறார். பிறகு தன்னுடைய தோழியை சந்தித்து நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி க்ரிஷையும் அம்மாவையும் சென்னையிலே தங்க வைக்க போவதாக சொல்கிறார்.
கோலங்கள் சீரியல் பாடலுக்காக அந்த நடிகர் கூப்பிட்டு சொன்ன வார்த்தை! மறக்க முடியாது.. இமான் ஓபன்
பிறகு எத்தனை நாளைக்கு இதை மறைத்து வைக்க முடியும் என்று ரோகிணியின் தோழி வித்யா கேட்க எனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் அது நடந்தால் மீதி உள்ளதை எல்லாம் சமாளித்து விடுவேன் என்று ரோகிணி கூறுகிறார்.

மீனாவின் தங்கை சீதா போன் போட்டு தான் காலேஜில் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகி விட்டேன் என்று சொல்ல, மீனா சந்தோஷத்தில் கண்கலங்குகிறார். அடுத்ததாக முத்துவும் வந்து இதைக்கேட்டு சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications