சிறகடிக்க ஆசை: நடுத்தெருவுக்கு வரும் ரோகிணி.. மீனா பேச்சை கேட்கும் மனோஜ்.. இனி விஜயா நிலைமை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 14ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகிணி புது வீடு வாங்க போகும் விஷயத்தை சொல்லும்போது அபசகுனமாக சில செயல்கள் நடக்கிறது. அதே நேரத்தில் மீனா சொன்ன வார்த்தையை முதல் முறையாக மனோஜ் கேட்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் அதிகாலையே எழுந்து சாமிக்கு பூஜை பண்ணுகிறார். இதை பார்த்ததும் எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர். அப்போது தாங்கள் புதியதாக வாங்கப்போகும் வீட்டிற்கு இன்றைக்கு அட்வான்ஸ் கொடுக்கப் போகிறோம் என்று மனோஜும் ரோகிணியும் சொல்கின்றனர்.

television siragadikka aasai serial vijay tv

அதோடு தாங்கள் வாங்கப் போகும் வீடு 5 கோடி ஆனால் மூன்று கோடிக்கு நாங்க அதை வாங்க போகிறோம் என்று சொன்னதும் அது எப்படி இவ்வளவு கம்மியா தருவாங்க என்று முத்துவும், ரவியும் கேள்வி கேட்கின்றனர். அதற்கு முத்து ஒரு வேலை அது பேய் வீடா இருக்குமோ என்று சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அப்போது விஜயா மனோஜை புகழ்ந்து பேசுகிறார். ரோகிணியை கல்யாணம் பண்ணுன அப்புறம் தான் வாழ்க்கை உனக்கு நல்லா இருக்கு என்று சொல்ல வரும்போது முத்து ஏழரை புடிச்சிருக்கு என்று சொன்னதும் ரோகிணி முறைக்கிறார். பிறகு இப்போ அட்வான்ஸ் கொடுக்க பணம் எப்படி கிடைத்தது? ரோகினியின் அப்பா ஜெயலில் இருந்து வந்துட்டாரா என்று முத்து கேட்டதும் விஜயா அப்படியா என்று சந்தோஷப்படுகிறார்.

அதற்கு ரோகினி அப்படியெல்லாம் இல்லை என்று சொல்கிறார். அதற்கு மனோஜ் எனக்கு பிசினஸ் இல் சந்தோஷ் சார் கொடுத்த 10 லட்சம் இருக்கிறது. இன்னமும் பார்ட்னர் பணம் தரேன்னு சொல்லி இருக்காங்க அதை வாங்கிக் கொடுக்கணும். இப்போதைக்கு இன்னைக்கு அஞ்சு லட்சம் அட்வான்ஸ் கொடுக்க போகிறேன் என்று சொல்கிறார்.

அதோடு அந்த வீட்டில் எல்லோரும் இரண்டு நாள் வந்து தங்கி விட்டு போகும்படி மனோஜ் சொல்ல, ஸ்ருதியும் ரவியும் எங்களுக்கு வேலை இருக்கு அவ்வளவு தூரத்தில் இருந்து வேலைக்கு கிளம்பி வர முடியாது என்று சொல்கின்றனர். அதற்கு முத்துவும் மீனாவும் அவர்களிடம் தனித்தனியாக பேசி சம்மதிக்க வைக்கின்றனர்.

television siragadikka aasai serial vijay tv

அதைத் தொடர்ந்து மீனா கோவிலுக்கு சென்று அங்கு தனக்கு கிடைத்த முதல் சம்பளத்தை தன்னுடைய அம்மாவுக்கும் கொடுக்கிறார். அப்போது ரோகிணி அங்கு வர மீனாவின் அம்மா ரோகினியிடம் எங்க கடையிலே நீங்க மாலை வாங்கி இருக்கலாமே என்று சொன்னதும் சாமிக்கு போடுற மாலை காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் என்று அவர்களின் முகத்தில் அடித்தது போல பதில் சொல்லிவிட்டு போகிறார்.

ரோகிணி சாமி கும்பிட போகும்போது அங்குள்ள குடம் தடுக்கி கீழே விழுகிறது. இதனால் இது அபசகுணம் என்று மீனாவின் அம்மா சொல்கிறார். உடனே மீனா இதை ரோகிணியிடம் சொல்ல போறேன் என்று சொன்னதுக்கு மீனாவின் அம்மா வேண்டாம் நீ இப்ப சொன்னா பொறாமையில் சொல்வதாக நினைப்பாங்க அதனால் அவர்கள் போன பிறகு கோவிலுக்கு ஒரு தேங்காய் உடைச்சிரு என்று சொல்கிறார்கள்.

அப்போது மனோஜிடம் வீட்டை விற்பவர்கள் அங்கு வர ரோகிணியும் மனோஜும் அவர்களிடம் பணத்தை கொடுக்கப் போகிறார்கள். அப்போது மீனா ரோகிணியிடம் இன்றைக்கு காசு கொடுக்காதீங்க அபசகுணமா இருக்கு என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் மனோஜும் தனக்கும் ஒரு மாதிரி தான் இருக்கு நாளைக்கு காசு கொடுப்போம் என்று சொல்ல, மீனா படிக்காதவங்க அப்படித்தான் சொல்லுவாங்க என்று ரோகினி சொல்கிறார். அதோடு வீட்டை விற்பதாக ஏமாற்ற வந்தவர்களும் நாம நல்லா இருக்கிறது சொந்தக்காரங்களுக்கு பிடிக்காது.

அதனால் கூட இப்படி எல்லாம் பேசுவாங்க உங்களுக்கு வேண்டாம்னா எங்களுக்கு வேற பார்ட்டி இருக்காங்க அவங்களுக்கு கொடுத்துருவோம் என்று சொன்னதும், ரோகிணி வேண்டாம் இன்னைக்கு செட்டில்மெண்ட் பண்ணிடலாம் என்று டாக்குமெண்டில் கையெழுத்து போட்டு காசை கொடுத்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+