சிறகடிக்க ஆசை: நீ உண்மைய சொல்லிடு.. மிரட்டிய மீனா அம்மா ரோகிணி! விஜயா கேட்ட கேள்வி, கோபத்தில் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் மீனாவின் அம்மா தன்னுடைய மகளிடம் உனக்கு தெரிஞ்ச உண்மைகளை சொல்லிடு, யாருக்காகவும் நீ பொய் சொல்லி நடிச்சிக்கிட்டு இருக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். இதனால் மீனா ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணிக்கு புது பிரச்சனையும் வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாமா?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை குடும்பத்திற்கு எப்போது தெரியவரும் என்று எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் கிடைத்தது. ரோகிணி பற்றிய உண்மை மீனாவிற்கு மட்டும் தெரிந்திருக்கிறது. ஆனால் மீனா தியாகி மாதிரி தான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறார். தனக்கு தெரிந்த உண்மையை குடும்பத்தில் சொன்னால் ரோகிணி தற்கொலை செஞ்சு விடுவாரே அதனால் கிரிஷ் நிலைமை என்ன ஆகும்? என்ற பயத்தோடு உண்மைகளை மறைத்துக் கொண்டிருக்கிறார். இதை ரோகிணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜின் ஷோரூமில் வேலை பார்க்கும் பிஏ கல்யாண சீர்வரிசை கொடுக்கும் பேக்கேஜ் பற்றி சொன்னதும் மனோஜ், ரோகிணி சரி என்று சொல்கிறார்கள். உடனே ஒரு மாடலை வைத்து விளம்பர சூட்டிங் செய்யலாம் என்று சொன்னதும் அந்த பிஏ நீங்க ரெண்டு பேருமே ஹீரோ மாதிரி இருக்கீங்க அதனால மனோஜ் சாரும், ரோகிணியும் விளம்பரத்தில் நடிக்கலாம் நானே சூட் பண்றேன் என்று வீடியோ எடுக்கிறார்.
அந்த விளம்பர வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டதும் அதற்கு அதிகமான வியூஸ் வருகிறது. அப்போது அந்த வீடியோவை பார்த்ததும் ஒரு போன் வர உடனே மனோஜ் கஸ்டமர் தான் கால் பண்ணுகிறார்கள் என்று ஆர்வத்தோடு இருக்கும்போது ரோகிணியின் பழைய பிஏ ரோகிணிக்கு கால் பண்ணுகிறார். அவருடைய குரலை கேட்டதும் ரோகிணி பயந்து போய் தனியாக சென்று பேசுகிறார்.
அப்போது பிஏ மிரட்டுற மாதிரியே பேசுகிறார். நீ ரொம்ப சந்தோசமாக இருக்க போல, உன் புருஷன் கூட வீடியோ போட்டு இருக்கே... நான் பார்த்தேன். எனக்கு கல்யாணத்துக்கு சீர்வரிசை பேக்கேஜ் வேணும். இல்லனா பணம் கொடு எங்க வந்து வாங்கணும் என்று சொல்லு என சொன்னதும் ரோகிணி கோபத்தில் கடுப்பாகி போனை வைக்கிறார்.
மறுபக்கத்தில் முத்து சபரிமலை கோவிலுக்கு போயிட்டு வீட்டிற்கு வர அங்கு மீனா இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். அப்போது விஜயா இதே மாதிரி எப்போதும் இருக்கணுமே மாசத்துல பாதி நாள் குடிச்சிட்டு தானே வரான் என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை இவன் இப்படி ஆனதுக்கு காரணமே நீதான்.. மனோஜ், ரவி இரண்டு பேரு மீதும் நீ காட்டுற அதே பாசத்தை முத்து மீது காட்டி இருந்தா அவனும் நல்லா இருந்திருப்பான் என்று சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.
பிறகு மனோஜ் முத்துவை அசிங்கப்படுத்தி பேச, அதற்கு ஸ்ருதி சிலர் நாங்க குடிக்கவே மாட்டோம்ன்னு சொல்லுவாங்க ஆனா மொட்ட மாடியில் குடிப்பாங்க. இப்ப எல்லாம் குடிக்கிறது பெரிய விஷயமே இல்ல என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை எப்போதுமே நாம குடிக்கிறவர்களை என்கரேஜ் பண்ண கூடாது அது தப்புதான் என்று அட்வைஸ் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பிறகு முத்துவும் மீனாவும் பேசும்போது மீனா திரும்பி வந்ததற்காக முத்து நன்றி சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு மீனா நீங்க இனி குடிக்க மாட்டீங்களா என்று கேட்க, நான் நல்ல நாள் மட்டும் குடிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக மீனா தன்னுடைய அம்மா வீட்டுக்கு வரும்போது அங்கு அவருடைய தங்கை சீதாவும் வருகிறார்.
சீதா பேசிக் கொண்டிருக்கும்போது மீனா உனக்கு ஏதோ பிரச்சனைன்னு சொன்னியே என்ன ஆச்சு சரியாயிடுச்சா என்று கேட்டதும், மீனாவின் அம்மா என்ன பிரச்சனை என்று பதறிப் போய் கேட்கிறார். அதற்கு சீதா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, என்னுடைய ஹாஸ்பிடலில் வேலை பார்க்கிற ஒரு அக்கா அவங்க பொண்ணுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்னு பயணம் கேட்டாங்க, என்கிட்ட பணம் இல்லை என்று சொல்லிவிட்டேன்.
பிறகு அவங்க ஹாஸ்பிடல் பணத்தையிலிருந்து ஸ்கூல் பீஸ் கட்டிட்டாங்க. அந்த உண்மை எனக்கு தெரிஞ்சிடுச்சு, இப்போ என் கைய புடிச்சு அழுறாங்க. இந்த விஷயத்தை சொல்லிடாதன்னு சொல்லுறாங்க அதான் என்ன பண்ணனும் தெரியல என்று சொல்ல, மீனாவின் அம்மா உண்மையை சொல்லிரு தப்பு யார் செஞ்சாலும் தப்புதான். அவங்களுக்கு வேணும்னா பணம் கொடு என்று சொல்கிறார்.
இதைக் கேட்டதும் மீனாவுக்கு ரோகிணி பற்றிய உண்மையை மறைத்துக் கொண்டிருப்பது உறுத்துகிறது. உடனே ரோகிணிக்கு போன் செய்து உன்கிட்ட பேசணும் என்று சொல்ல, மகேஸ்வரி வீட்டுக்கு வா என்று ரோகிணி சொல்கிறார். பிறகு அங்கு மீனா போய் ரோகிணியிடம் சண்டை இடுகிறார். உன்னால நான் தான் உண்மையை சொல்ல முடியாம தவிச்சிட்டு இருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு ரோகிணியின் அம்மா மீனா விட மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications