சிறகடிக்க ஆசை: தற்கொலை முயற்சி செய்த ரோகிணி! முத்துவிடம் உண்மையை சொன்ன மீனா! கோபத்தில் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 30ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி பற்றிய உண்மைகளை மீனா சொல்கிறார். ஆனால் அதற்கு ரோகிணி தற்கொலை நாடகம் போட்டு மொத்த குடும்பத்தையும் ஏமாற்றுகிறார். அதே நேரத்தில் ரோகிணிக்கு மற்றொரு பிரச்சனையும் வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கடன் பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். அதற்காக அண்ணாமலை சாட்சி கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறார். இதனால் மனோஜ் தன்னுடைய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக சொத்தை பிரித்து கேட்டிருக்கிறார். இதற்காக வீட்டிற்குள் பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலை தன்னுடைய சொத்தை பிரிப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார். இதே நேரத்தில் இன்று என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், மீனா பார்வதி வீட்டிற்கு பூ கொடுக்க போயிருக்கிறார். அப்போது பார்வதி கதை சொல்லி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் ரோகிணி பார்வதியிடம் தனக்கு 5 லட்சம் கடன் தருமாறு கேட்கிறார். அப்போது பார்வதியும் சிவனிடம் சென்று இது பற்றி பேசுகிறார். அதற்கு அவர் இந்த பொண்ணை நம்பி 5 லட்சம் கொடுக்க முடியாது, ஆனால் மீனா சாட்சி கையெழுத்து போட்டா கொடுக்கலாம் என்று சொல்கிறார்.
உடனே பார்வதி ரோகிணியிடம் வந்து இந்த விஷயத்தை சொல்கிறார். பிறகு ரோகிணி மீனாவை தனியாக கூட்டிட்டு போய் தனக்கு சாட்சி கையெழுத்து போடும்படி கெஞ்சி கேட்கிறார். ஆனால் அதற்கு மீனா மறுத்து விடுகிறார். ஏற்கனவே உனக்காக உண்மையை சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறேன் இப்போ இந்த விஷயத்திலும் என் புருஷனுக்கு தெரியாமல் உனக்கு உதவ முடியாது என்று சொல்லி விடுகிறார்.
பிறகு இரவு கிரிஷ் முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய ஸ்கூலில் பேச்சு போட்டி நடக்கிறது என்றும் அதற்கு பேசுவதற்கு என்ன தலைப்பில் பேசலாம் என்று கிரிஷ் கேட்க, முத்து உண்மையை யாரிடமும் மறைக்கக்கூடாது என்ற தலைப்பில் பேச சொல்லிக் கொடுக்கிறார். அதைக் கேட்டு மீனா ரொம்பவும் பீல் பண்ணுகிறார்.
பிறகு ரோகிணி பற்றிய மொத்த உண்மைகளையும் சொல்கிறார். ஆனால் கட்டிலில் அவர் திரும்பி படித்துக் கொண்டு செல்லி கொண்டு இருக்கும்போது, நீ நான் சொல்வதை கவனிக்காமல் முத்து போய் விடுகிறார். மீனா சொன்னது எதையுமே அவர் கேட்கவில்லை. அந்த நேரத்தில் ரோகிணி வந்து பக்கத்தில் நின்று மீனா சொன்னதை கேட்டு அதிர்ச்சி ஆகிறார்.
நீங்க உண்மைய சொல்ல ரெடியாகிட்ட பிறகு இனி நான் உயிரோடு இருந்து பிரயோஜனமே இல்லை என்று கிச்சனுக்கு சென்ற ரோகிணி கத்தியை எடுத்து கையை அறுக்க முயற்சி செய்கிறார். அப்போது மீனா தடுத்து நிறுத்தி திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சத்தம் கேட்டு முத்து வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, அதற்கு ரோகிணி மொத்த உண்மைகளையும் மறைத்து பார்வதியிடம் கடன் கேட்டதற்கு அவர் சாட்சி கையெழுத்து போட சொன்னது பற்றி சொல்கிறார்.
Singapenne Serial: சிங்க பெண்ணே சீரியல் அன்புக்கு கல்யாணம்! மனைவி யார் தெரியுமா? இந்த விஜய் டிவி நடிகை தான்!
அதற்கு முத்து மீனா சாட்சி கையெழுத்து போட்டால் சரிப்பட்டு வராது நீங்க வேற ஏதாவது யோசிச்சுக்கோ என்று சொல்லி அங்கிருந்து போய் விடுகிறார். மறுநாள் காலையில் அண்ணாமலை தன்னுடைய சொத்தை பிரிப்பதற்கு ஆட்களை கூட்டிக்கொண்டு வருகிறார். அதற்கு ரவியும் முத்துவும் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் மனோஜ் அப்பா எடுத்தது நல்ல முடிவு தான் என்று சொல்கிறார்.
மனோஜ் இப்படி பேசுவதற்கு காரணம் ரோகிணிதானா என்று முத்து கேட்டதும், விஜயாவும் ரோகிணி மீது கோபப்படுகிறார். ரோகிணி சொல்லிக் கொடுத்துதான் மனோஜ் இப்படி எல்லாம் சொத்து பிரிக்க சொல்லுகிறான் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications