சிறகடிக்க ஆசை: ஸ்ருதி அம்மா கேட்ட கேள்வி.. ரோகிணிக்கு வந்த புது பிரச்சனை! முத்து பிடித்த பாயிண்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 30ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணிக்கு ஸ்ருதி அம்மா போன் செய்து சில வார்த்தைகளை கேட்கிறார். இதனால் அண்ணாமலை வீட்டில் புது பிரச்சனை வெடிக்கிறது. அதே நேரத்தில் ரோகிணிக்காக முத்து சப்போர்ட் பண்ணி பேசுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி கோபமாக ரூமுக்குள் இருக்கும்போது ஸ்ருதியின் அம்மா போன் செய்கிறார் .அவர் போன் செய்வதை பார்த்ததும் ரோகிணி இவங்க என்ன நமக்கு போன் பண்றாங்க என்று யோசிக்கிறார். பிறகு என்னவென்று கேட்கும் போது, ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் சம்மந்தி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தான் நீங்க ஷோரூம் திறந்து இருக்கீங்களா?

நான் கூட உங்க அப்பா அனுப்புன பணத்திலிருந்து தான் ஷோரூம் திறந்து இருப்பதா நினைச்சுட்டேன். உங்க மாமியார் நொடிக்கு ஒரு முறை மலேசிய சம்மந்தி என்று பெருமையா பேசிட்டு இருப்பாங்க அப்போ அவங்க பணம் தரலையா என்று நக்கலாக கேட்க, அதற்கு ரோகிணி கோபமாகி என்னுடைய பர்சனல் விஷயத்தில் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது.
நீங்க உங்க பொண்ணு விஷயத்தை மட்டும் தான் பேசணும் என் விஷயத்தை பேசக்கூடாது என்று கோபமாக திட்டி விட்டு போனை வைத்து விடுகிறார். பிறகு ரோகிணி அம்மா போன் செய்யும் போது ரோகிணி மீண்டும் ஸ்ருதியின் அம்மா தான் போன் செய்கிறார் என்று ஆமாம் எங்க அப்பா பணம் அனுப்பல நான் ஏமாற்றி தான் ஷோரூம் திறந்தேன் உங்களுக்கு என்ன என்று கோபப்பட்டு திட்டுகிறார்.

ரோகிணியின் அம்மா என்ன ஆச்சு என்று கேட்கிறார். பிறகு வீட்டில் நடந்த பிரச்சனைகளையும், ஸ்ருதி அம்மா போன் செய்து பேசியதையும் ரோகிணி அவருடைய அம்மாவிடம் சொல்கிறார். அதற்கு ரோகினி அம்மா உன் மாமனார் உனக்கு சப்போர்ட் பண்றாரா? இல்ல எதுவும் சொல்லுறாரா? என்று கேட்க, அவர் இப்போதைக்கு எதுவும் பேசல ஆனா அமைதியா தான் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது விஜயா ரோகிணியின் கதவை வேகமாக தட்டுகிறார். ரோகினி கதவை திறந்ததும், பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க பாரு, சுருதி அம்மா சும்மா ஒன்னும் சொல்லலையே நீ ஏமாற்றிய விஷயத்தை தானே கேட்டாங்க. அதுக்காக என் குடும்ப விஷயத்தில் தலையிடக்கூடாது என்று நீ எப்படி சொல்லலாம் கோபப்பட்டு திட்டிவிட்டு போகிறார்.
அடுத்ததாக ஸ்ருதியிடம் மீனா எதற்காக வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் உங்க அம்மாவிடம் சொன்னீங்க என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி ஸ்ருதியை வந்து திட்டுகிறார். என்னுடைய விஷயத்தில் உங்க அம்மா எப்படி தலையிடலாம்? அதை நான் கேட்டதுக்காக அத்தைக்கு போன் பண்ணி என்னை மீண்டும் மாட்டி கொடுப்பாங்களா?
உங்க அம்மா என் விஷயத்தில் தலையிடக்கூடாது என்று கோபப்பட, சுருதி உங்க ரூமுக்குள் நடந்திருந்தால் அந்த விஷயத்தை பேசியிருக்க மாட்டோம். ஆனால் ஹாலில் தானே நடந்துச்சு. அதனால்தான் நான் எங்க அம்மாவிடம் சும்மா கேஷுவலா பேசும்போது சொன்னேன்.

உங்களுக்கு அத்தை எங்க முன்னாடி உங்கள அடிச்சுட்டாங்களே என்று அவமானமா இருக்கு அதனால்தான் இப்படி கோபப்படுறீங்க என்று சொன்னதும் ரோகிணி மேலும் கோபப்படுகிறார். அப்போது மீனா இருவரையும் சமாதானப்படுத்தி தனித்தனியாக அனுப்பி வைக்கிறார்.
அடுத்ததாக ரோகினி மனோஜ்க்கு போன் செய்து கொண்டே இருக்க மனோஜ் போனை எடுக்காமல் விஜயாவிற்கு போன் போட்டு ரோகிணி ஃபோன் பண்ணிட்டு இருக்கா என்று சொல்கிறார். அதற்கு விஜயா முதலில் போனை எடுக்காத என்று சொல்கிறார். அப்போது மனோஜ் நான் இன்னும் சாப்பிட கூட செய்யலாமா என்று சொல்லவும், சரி அவகிட்டயும் எதுக்காக போன் பண்ணுனா என்று கேளு என்று சொல்கிறார்.
பிறகு மனோஜ் ரோகினி ஹிட் போனை அட்டென்ட் பண்ணி வேலை பார்த்துட்டு இருந்தேன். அதனால்தான் போன எடுக்கல என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி அதான் வேலை பார்க்க ஆளு இருக்காங்களே என்று சொன்னதும் மனோஜ் யாரையும் நம்ப முடியல அதனால்தான் நானே எல்லா வேலையும் பார்க்கத் தொடங்கிட்டேன் என்று சொல்கிறார்.

இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார் அடுத்ததாக இரவு மீனா துணி மடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து வீட்டிற்கு வருகிறார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது உங்க அண்ணன் வீட்டுக்கு வரல, உங்க அம்மா ஏதோ பிளான் பண்றாங்க போல இருக்கு.
ரோகிணியையும் உங்க அண்ணனையும் பேசவிடாமல் தடுக்குறாங்க என்று சொல்ல, அதற்கு முத்து என்ன தப்பு பண்ணி இருந்தாலும் புருஷன் பொண்டாட்டியை பேச விடாம தடுக்கிறது தப்பு. இப்போ ரோகிணியை எங்க அம்மாவுக்கு பிடிக்காமல் போயிடுச்சு அதனாலதான் இப்படி வெறுப்பு காட்டுறாங்க என்று சொல்கிறார்.
சிறகடிக்க ஆசையில் ரோகிணிக்கு அவ்வளவு பிரச்சனை! ஆனால் மீனா எடுத்த புதிய அவதாரம்.. செம முடிவு
அதற்கு மீனா, ரோகிணி இன்னும் சாப்பிடவே இல்ல. நான் வேணா சாப்பாடு எடுத்துட்டு போய் கொடுக்கட்டுமா என்று சொல்ல, அதற்கு முத்து பசியில் இருப்பவர்களுக்குத்தான் அதோட அருமை தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications