சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி தன்னுடைய நகைகளை விற்று பணம் கொடுத்த விஷயத்தை பார்வதி மூலம் மீனா தெரிந்து கொள்கிறார். அதே நேரத்தில் ஸ்ருதி வாழ்க்கையில் புது பிரச்சனை வருகிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் ஷோரூமில் வேலை பார்க்கும் நபர் ஷோரூமில் இருந்தது சாதாரண முட்டை என்று சொன்னதும் வீட்டில் இருப்பவர்கள் மனோஜை அசிங்கப்படுத்தி கிண்டல் செய்கிறார்கள். அதோடு விஜயா மனோஜை திட்டி விட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் மீனா பூ கொடுத்துக்கொண்டிருக்க அங்கு அவரை காதலிக்கும் நபர் மீனாவிடம் முத்து சொன்னது போல சொல்கிறார்.
இதனால் கடுப்பான மீனா முத்துவுக்கு போன் போட்டு ஒரு ஆள் என்னை பாலோ பண்ணிட்டு இருக்கிறான் என்று சொல்ல, நீ பெப்பர் ஸ்ப்ரே வாங்கி வச்சுக்கோ, இன்னொரு வாட்டி வந்தா அடிச்சு விடு என்று நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார். அடுத்ததாக ஸ்ருதி ரவியிடம் இன்னைக்கு நான் டப்பிங் பேசுற ஹீரோயினியோட பர்த்டே என்னை இன்வைட் பண்ணி இருக்காங்க நீயும் வா போயிட்டு வரலாம் என்று கூப்பிட ரவி வரேன் என்று சம்மதிக்கிறார்.
அந்த நேரத்தில் அவருடைய முதலாளியின் பொண்ணு போன் பண்ணுகிறார். அதனால் ரவி எனக்கு வேலை இருக்கு இன்னொரு முறை கண்டிப்பா வரேன் என்று சொல்லிவிடுகிறார். இதனால் ஸ்ருதி கோவப்பட உடனே ரவி நான் வரேன் ஆனால் என்னை வேலையை விட்டு தூக்குனா பரவாயில்லையா? நான் ஹோட்டல் ஹோட்டலா வேலை கேட்டு ஏறி இறங்கிட்டு இருக்கனும் என்று கோபப்பட, ஸ்ருதி இந்த மாதிரி பேசிட்டு என்கூட வர வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்.
பிறகு ஸ்ருதி தனியாக கலந்து கொள்கிறார். அந்த நேரத்தில் ரவி முதலாளி பொண்ணோடு அங்கு வர, ஸ்ருதி நிற்பதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். இதனால் ஸ்ருதி வேகமாக அங்கிருந்து கிளம்பி வெளியே வர ரவியும் வருகிறார். ஸ்ருதியை சமாதானம் செய்வதற்கு ரவி முயற்சி செய்ய போகிறார். ஆனால் ஸ்ருதி கோபமாக இருக்கிறார்.
அப்போது உனக்கு யாருக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்குறதுனு தெரியல என்று சொல்ல, அதற்கு ரவி நான் என்னுடைய ஓனருக்கு முக்கியத்துவம் கொடுக்கல என்னுடைய ஜாப்புக்கு தான் கொடுக்கிறேன் என்று சொல்ல, அப்போ நீ போய் அங்கே நல்லா சாப்பிட்டு வா என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
மறுபக்கத்தில் மீனாவும், பார்வதியும் வீட்டிற்கு பூ கொடுக்க வர பார்வதி விஜயா என்கிட்ட பேசாதது எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கு. விஜயா குணத்துக்கு வேற யாராவது இருந்தா அவளை வேண்டான்னு விரட்டி விட்டிருப்பாங்க. ஆனா அண்ணாமலை அண்ணா அப்படி கிடையாது. அவர் இப்ப வரைக்கும் பொறுத்துக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்காரு.
அவளுக்கு பெத்த பிள்ளைகளே ஒரே மாதிரி பார்க்க தெரியாது. அப்புறம் எப்படி மருமகளை பாப்பா என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு உன்ன மாதிரி தான் ரோகிணியும் ரொம்ப நல்ல பொண்ணு. உன் மேல விஜயா சந்தேகப்பட்டதால, வீட்ல பிரச்சனை என்று அவ கழுத்தில் போட்டிருந்த நகையை விற்று அந்த பணத்தை என்கிட்ட கொடுத்து, எனக்கு மீனாவே பார்க்க பாவமா இருக்கு இத கொடுத்துடுங்கன்னு சொன்னா என்று சொல்ல மீனாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
எனக்காக அவங்க நகையை விற்றாங்களா? என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
Siragadikka aasai serial December 4th episode(சிறகடிக்க ஆசை சீரியல் டிசம்பர் 4ஆம் தேதி எபிசோடு): In the December 4th episode of Siragadikka aasai serial aired on Vijay TV, Meena comes to know from Parvathi about the fact that Rohini sold her jewelry and gave her money, while Shruti faces a new problem in her life.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.