Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: வசமாக சிக்கிய மனோஜ், வீட்டை விட்டு போகும் அண்ணாமலை.. மீனா செய்த செயல், விஜயா மனமாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial Feb 27 Episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 27ஆம் தேதிக்கான இன்றைய எபிசோடில், எத்தனை முறை பட்டாலும் மீண்டும் மீண்டும் மனோஜ் ரோகிணி இடமே ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் விஜயாவிற்கும் சரியான பதிலடி கிடைத்திருக்கிறது என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில், சிந்தாமணி அனுப்பிய பெண் சாமியார் விஜயாவின் வீட்டிற்கு வந்து பூஜை நடத்தி, இந்த வீட்டிற்கு மீனாவால் ஆபத்து வரப்போகிறது என்றும், மீனா வீட்டில் இருந்தால் விஜயாவின் கணவர் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறியிருந்தார். இதனால் மீனாவை எப்படியாவது வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என முடிவு செய்து விஜயா பார்வதியை பார்க்கப் போகிறார்.

பார்வதி கொடுத்த பதிலடி

(Siragadikka Aasai serial today episode) அந்த நேரத்தில் பார்வதி மற்றும் சிவன் தங்களது யூடியூப் சேனலுக்காக மூடநம்பிக்கைக்கு எதிரான ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்த விஜயா, பெண் சாமியார் கூறிய விஷயங்களை எல்லாம் பார்வதியிடம் சொல்லி, நீ தான் மீனாவிடம் பேசி வீட்டை விட்டு அனுப்பணும் என உதவி கேட்கிறார். ஆனால், இப்போதுதான் மூடநம்பிக்கைக்கு எதிராக கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன், இப்படிப்பட்ட விஷயங்களை நான் நம்ப மாட்டேன், நீ சொல்வது போல வந்து பேச முடியாது என பார்வதி மறுத்து வடுகிறார். அதனால் விரக்தியுடன் விஜயா அங்கிருந்து கிளம்புகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

மீனா செய்த பரிகாரம்

வீட்டிற்கு திரும்பிய விஜயா, வீடு முழுவதும் விளக்கேற்றி வைத்து பரிகாரம் செய்து கொண்டிருக்கும் மீனாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதை பார்த்த அண்ணாமலை, இது என்ன என்று கேட்க, அப்போது முத்து, மீனா ஒரு ஜோதிடரை பார்த்ததாகவும், அவர் வில்வ இலை கொண்டு விளக்கு ஏற்றினால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு நல்லது என கூறியதால் தான் இப்படி செய்கிறாள் என விளக்குகிறார்.

அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி

அந்த நேரத்தில் மீண்டும் பெண் சாமியாரை பார்த்ததாகவும், அவர் சொன்னதெல்லாம் பலிக்கிறது என்றும் கூறும் விஜயா, மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சொல்லுகிறார். ஆனால் உடனே அண்ணாமலை, மீனா இந்த வீட்டை விட்டு போனால் நானும் அவளுடன் போய்விடுவேன் என கூறிவிடுகிறார். இதை கேட்ட விஜயா அதிர்ச்சி அடைந்து அமைதியாகி விடுகிறார்.

வசமாக சிக்கிய மனோஜ்

மறுபுறம், ரோகிணி கூப்பிட்டதால் மனோஜ் அவர் சொன்ன இடத்திற்கு போகிறார். அங்கு ரோகிணி, நீ கேட்டபடி டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு தருகிறேன், ஆனால் அதற்குப் பிறகு இங்க இருக்கும் ஃபேனில் தூக்கிட்டு நான் செத்துடுவேன் என மிரட்டுகிறார். இதைக் கேட்டு மனோஜ் பதறி, நான் என்ன செய்யணும் என கேட்கிறார்.

ரோகினியின் மாஸ்டர் பிளான்

உடனே ரோகிணி தனது ஃபைலில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டுகிறார். அந்த பேப்பரில், நான் ரோகிணியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதில் கையெழுத்து போடாவிட்டால் நான் செத்துவிடுவேன் என ரோகிணி மனோஜை பிளாக்மெயில் செய்கிறார்.

கோபத்தில் விஜயா

என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் மனோஜ், பாத்ரூமுக்குள் சென்று தனது அம்மா விஜயாவுக்கு போன் செய்து, ரோகிணி தன்னை மிரட்டிக் கொண்டிருப்பதை கூறுகிறார். அதைக் கேட்டு கோபமடைந்த விஜயா, அவள் கூப்பிட்டதுக்கே நீ ஏன் போனாய் என மனோஜை திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+