சிறகடிக்க ஆசை: சத்யாவோடு முத்து போட்ட பிளான்.. சிட்டியால் வசமாக சிக்கும் ரோகிணி! எதிர்பாராத திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 10ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி மற்றும் சிட்டி பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முத்து சத்யாவோடு சேர்ந்து புது பிளான் போடுகிறார்.

இன்றைய எபிசோடில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆரம்பத்தில் மனோஜ் மற்றும் ரோகிணியிடம் இருந்து 30 லட்சம் ஏமாற்றி போன கதிர் பற்றிய விபரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அவருடைய போட்டோ வேண்டும், அதற்கு ரோகிணியும் மனோஜும் அட்வான்ஸ் கொடுத்தது கோவிலில் தானே அப்போ கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவில் போட்டோ இருக்கும் என்று முத்துவும் மீனாவும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

television siragadikka aasai serial vijay tv

உடனே ரோகிணி இதுவரைக்கும் எங்களுக்கு செஞ்ச உதவி போதும் இனிமே நாங்களே கண்டுபிடிச்சுக்கிறோம். உங்க வேலையை விட்டுட்டு எங்களுக்காக அலைய வேண்டாம் நீங்கள் கண்டுபிடிச்சா கடைசி வரைக்கும் இதை சொல்லி காமிச்சிட்டே இருப்பீங்க. அதனால நாங்களே பாத்துக்குறோம் என்று ரோகிணி சொல்லிவிடுகிறார்.

இது அவர்களுடைய பணம் அவங்களே கண்டுபிடிக்கட்டும் என்று அண்ணாமலையும் சொல்கிறார். அதுபோல விஜயாவும் ரோகிணியும் மனோஜும் கண்டுபிடிச்சுக்குவாங்க என்று சொல்கிறார். அடுத்ததாக முத்துவும் மீனாவும் ரொமான்ஸ் ஆக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது முத்துவிற்கு ஒரு போன் வருகிறது அவர்கள் இரண்டு நாளைக்கு சவாரி இருப்பதாக சொல்கிறார்கள். பிறகு மறுநாள் காலையில் விஜி ரோகிணியின் பிரண்டு வித்யா வீட்டிற்கு மீனாவை சைட் அடித்த முருகன் வருகிறார். வித்யா மீது பைக்கை மோதியதால் அதை சர்வீஸ் விட்டு பெட்ரோல் போட்டுவிட்டேன் என்று சொல்லிவிட்டு சாவியை கொடுக்கிறார்.

வித்யா பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டேன் என்று வலிந்து கொண்டு போகிறார். அவர் போனதும் அவருடைய பெயரை சொல்லி வித்யா சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ரோகிணி முத்துவும், மீனாவும் கொடுத்த ஐடியா பற்றியும்... அவர்களை கதிரை தேட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்பது பற்றியும் சொல்கிறார்.

அதோடு கதிரை கண்டுபிடிப்பதற்கு சிட்டி இடம் தான் உதவி கேட்கணும் என்று ரோகிணி சொல்கிறார். பிறகு சிட்டியை பார்ப்பதற்காக ரோகிணியும், வித்யாவும் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் முத்து சத்யா மீனா மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சத்யா வீடியோவை உங்க போனிலிருந்து லீக் செய்தது அந்த சிட்டியா தான் இருக்கும் என்று எனக்கு சந்தேகமா இருக்கு என்று மீனா சொல்கிறார்.

அதற்கு சத்யா சந்தேகமே இல்ல கண்டிப்பா அவன் தான் செய்து இருப்பான். என்கிட்டயே ஜாடையா சொன்னான் என்று சொல்லுகிறார். அதற்கு முத்து போன் என்கிட்ட இருந்து எப்படி அந்த சிட்டியிடம் போச்சு? இதுதான் தெரியல.. அதை முதல்ல கண்டுபிடிக்கணும். உனக்கு தெரிஞ்ச நண்பர்கள் மூலமா சிட்டி தான் இந்த வீடியோவை ரிலீஸ் பண்ணி பண்ணுனா என்று கண்டுபிடி.

television siragadikka aasai serial vijay tv

அப்புறம் சிட்டிக்கு யாரு செல்போனை எடுத்து கொடுத்திருப்பா என்று கண்டுபிடிக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ரோகிணி இடம் சிட்டி வந்து பேசுகிறார். அப்போது கதிரை கண்டுபிடிக்க வேண்டிய விஷயத்தை பற்றி ரோகிணி சொல்கிறார்.

மீனா அம்மா பூக்கட்டும் கோவிலில் இருக்கும் சிசிடிவி புட்டேஜை எப்படியாவது வாங்கிவிட்டு வந்துடுங்க. அதில் அந்த கதிர் போட்டோ இருக்கு அதை வச்சு அவரை கண்டுபிடிக்கலாம் என்று ரோகிணி ஐடியா கொடுக்கிறார். அதோடு நீங்க கேட்கிற பணத்தை நான் தரேன் என்று டீல் பேசியிருக்கிறார்.

இறுதியாக முத்து கார் ஓட்டிக்கொண்டு வருகிறார் அப்போது அவருடைய காரில் ஒரு வயதான தம்பதி வருகிறார்கள். அவர்கள் சென்னையை பார்த்து ஆச்சரியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் முத்து நீங்க இப்பதான் சென்னைக்கு வருகிறீர்களா? என்று கேட்க, இல்லை நாங்க சின்ன வயசுலயே இங்க இருந்து மலேசியாவுக்கு போயிட்டோம். ரொம்ப வருஷம் கழிச்சு இப்பதான் சென்னைக்கு வரோம். அதனால இந்த இடம் எல்லாம் மாறி போயிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+