சிறகடிக்க ஆசை: முத்துவை காலி செய்ய நடந்த சதி.. ஸ்ருதி செயலால் அதிர்ச்சியில் குடும்பம்! அசிங்கப்பட்ட ரோகிணி, இது தேவையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 10ஆம் தேதி எபிசோடில் முத்துவை கொலை செய்வதற்காக சூழ்ச்சி நடக்கிறது. அதே நேரத்தில் மொத்த குடும்பத்திற்கும் ஸ்ருதி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதுபோல திமிராக பேசிய ரோகிணிக்கு அவமானமும் கிடைத்திருக்கிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக சிட்டி செல்வதற்கெல்லாம் ரோகிணி ஆடிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே செல்போனை எடுத்துக் கொடுத்ததால் முத்துவுக்கும் மீனா குடும்பத்திற்கும் பெரிய பிரச்சனை வந்து சேர்ந்தது. அதேபோல இப்போது முத்துவின் கார் சாவியை சிட்டியிடம் எடுத்துக் கொடுத்து இருக்கிறார். இதனால் முத்துவுக்குதான் பிரச்சனை வரப்போகிறது. ஆனாலும் தான் தப்பித்தால் போதும் என்று ரோகிணி இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

விஜயா கொடுத்த பதிலடி

இன்றைய எபிசோடில் முத்து ஆசிரமத்திற்கு துணிகளை எடுத்துக் கொண்டு போவதற்காக கிளம்புகிறார். அப்போது விஜயா என் புடவையை தர முடியாது என்று சொல்கிறார். அவருக்கு சப்போர்ட்டாக ரோகிணி பேச அதற்கு கடுப்பான விஜயா உன்னை எனக்காக பேச சொன்னேனா? உன் வேலையை மட்டும் பாரு எனக்காக பேச தேவையில்லை என்று அசிங்கப்படுத்துகிறார். வழக்கம்போல அவமானப்பட்டு இருக்கும் ரோகிணியிடம் மனோஜும் திமிராக பேசிக் கொண்டிருக்கிறார்.

ரோகிணிக்கு அவமானம்

அடுத்ததாக முத்து நம்ம இன்னொருத்தருடைய உதவியில் தான் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் மூச்சு காத்து கூட மரம் செடி கொடிகளில் இருந்து தானே வருது என்று சென்டிமென்டாக பேசுகிறார். உடனே ஸ்ருதி சரி நானும் என்னுடைய டிரஸ்ஸை எடுத்துட்டு வரேன் என்று கிளம்புகிறார். இதை பார்க்கும் ரோகிணி கடுப்புடன் நின்று கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் சிட்டி தன்னுடைய ஆட்களை அழைத்து நான் சொல்ற மாதிரி செய்யுங்க, முத்து கார் பிரேக் ஒயரை கட் பண்ணிட்டோம். ஆனா ஆயில் ஃபுல்லா இறங்கணும் அப்போ தான் நாம நினைச்சது நடக்கும்.

சிட்டி போட்ட பிளான்

நீங்க என்ன செய்றீங்கனா அவன் வீட்டுக்கு பக்கத்துலயே நில்லுங்க அவன் என்ன செய்கிறான்னு பாருங்க. அவன் கார் கிளம்பியதும் பாலோ செஞ்சு காரை உரசுங்க அப்போ அவன் ஸ்பீடா வருவான், அதனால் பிரேக் பிடிக்காமல் போய் அவன் எதுவும் பண்ணினாலும் சரி, அவனுக்கு எதுவும் ஆனாலும் சரி எது நடந்தாலும் நமக்கு சந்தோசம் தான் என்று பிளான் போட்டு கொடுக்கிறார். மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் துணிகளை கீழே கொண்டு வருகிறார்கள்.

ஸ்ருதியின் சமையல்

இருவரும் கார் டிக்கியில் பொருள்களை வைக்கிறார்கள். இதையெல்லாம் மாடியில் நின்று ரோகிணி பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனாவின் தோழிகள் வர அவர்களுடன் மீனா பேசிக் கொண்டிருக்கிறார். முத்துவும் ஆயில் லீக் ஆவதை பார்க்காமல் பேசிக்கொண்டு இருக்கிறார். பிறகு மாடிக்கு மீனா டிபன் செய்ய வரும்போது அங்கு ஸ்ருதி சமைத்துக் கொண்டிருக்கிறார். என்ன செய்றீங்க என்று மீனா கேட்க சமையல் கத்துக்கிட்டு இருக்கிறேன் என்று சொன்னதும் நான் உங்களுக்கு உதவி செய்யவா என்று மீனா கேட்க, வேண்டாம் என்று ஸ்ருதி மறுத்துவிடுகிறார்.

ஸ்ருதி கொடுத்த அதிர்ச்சி

இதைப்பற்றி மீனா வெளியே வந்து சொன்னதும் ரவி சமையல் அறைக்கு ஓடுகிறார். நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று சொல்ல, வேண்டாம் நீ வெளியே போ நானே செஞ்சுகிறேன் என்று ரவியை வெளியே அனுப்பி வைக்கிறார். வேறு வழியில்லாமல் ரவியும் அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறார். அப்போது அவர் உப்புமா செய்து இருக்கிறார் அதை பாடாய்பட்டு தட்டில் போடும்போது எல்லோருக்கும் பயம் வந்திருக்கிறது.

முத்து அட்வைஸ்

மீனா சாப்பிட்டு பார்த்துவிட்டு நல்லா இருக்கு என்று சொல்லிவிடுகிறார். ஆனால் ரவி உண்மையை சொல்கிறார். அப்போது விஜயா நம்ம செஞ்சதை நம்மளே சாப்பிடணும் என்று சொன்னதும் ரவி ஸ்ருதிக்கு ஊட்டி விட, அதை சாப்பிட்டு ஸ்ருதி முகம் சுளிக்கிறார். பிறகு சரி பொறுமையா சமையல் கத்துக்கோ என்று எல்லோரும் சொல்கிறார்கள். அப்போது விஜயா மீனாவிடம் சமையல் கத்துக்கோ ஆனா அவர்களுக்கு திமிர் ஜாஸ்தி அதை கத்துக்காத என்று சொன்னதும், முத்து சிலரிடம் பொய் பேசும் திறமை இருக்கு அந்தப் பக்கம் போகாத என்று ஜாடை மாடையாக பேசுகிறார்.

மீனாவின் அட்வைஸ்

அந்த நேரத்தில் முத்துவின் கார் மீது முட்டை வியாபாரி மொத்த முட்டையையும் போட்டு உடைத்து விடுகிறார். ஆனால் அவர் மறைக்காமல் முத்துவிடம் வந்து சொல்லி மன்னிப்பு கேட்டதும், முத்து கோபப்படுகிறார். அதற்கு மீனா உங்களுக்கு லேட்டு தான் ஆகுது ஆனா அவருக்கு வருமானமே போச்சு என்று சொன்னதும் முத்து அமைதியாக இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+