சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி ஹவுஸ் ஓனர் சொன்ன ரகசியம்.. கடும் கோபத்தில் மனோஜ்.. உடைபட்ட உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 17ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் அம்மா வாடகைக்கு இருக்கும் ஹவுஸ் ஓனர் மனோஜுக்கு போன் செய்து விடுகிறார். இதனால் ரோகிணிக்கு புது பிரச்சனை வருகிறது.

சிறக்கடிக்க ஆசை சீரியலில் இன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் நடைபெற்றது. அதாவது ரோகிணிக்கு பிரச்சனை கொடுக்கும் விதமாக இன்று ஒரு போன் கால் வந்திருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம். இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து மீனாவிடம் நண்பன் பார்ட்டியில் குடிப்பதற்கு அனுமதி கேட்க, அதற்கு மீனா பெர்மிஷன் கொடுக்க மாட்டேன் என்கிறார்.

siragadikka aasai serial vijay tv

ஆனாலும் முத்து போனை வைத்ததும் தன்னுடைய நண்பர்களிடம் மீனா சம்மதம் சொல்லிவிட்டால் என்று சொல்கிறார். அதை செல்வம் கண்டுபிடித்துவிட அவ அப்படித்தான் சொல்வா.. குடிச்சிட்டு போகலாம் வாடா என்ஜாய் பண்ணுவோம் என்று போய் விடுகிறார். மறுபக்கத்தில் மீனாவின் தோழிகள் உன் புருஷன் உன்கிட்ட அனுமதி கேட்பது சந்தோஷம்.

எங்க வீட்டில் எல்லாம் இப்படி கேட்க மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பெண் மட்டும் முத்து அனுமதி கேட்டுட்டு குடிச்சிட்டு வந்தா விட்டுறாதே என்று ஏத்தி விடுகிறார். மறுபக்கத்தில் ரோகிணி பாத்ரூமில் இருக்கும்போது அவருக்கு போன் வருகிறது. அதை மனோஜ் அட்டென்ட் பண்ணுகிறார்.

அப்போது எதிர்பக்கத்தில் ஹவுஸ் ஓனர் பேசுகிறேன் நீங்க இன்னும் வாடகை போட்டு விடல என்று சொல்ல, மனோஜுக்கு குழப்பமாக இருக்கிறது. எந்த ஹவுஸ் ஓனர் என்று கேட்டதும் ரோகிணியின் அம்மா வாடகைக்கு இருக்கும் ஹவுஸ் ஓனர் என்று சொல்ல மனோஜ் குழப்பத்தில் இருக்கிறார். அப்போது ரோகிணி வந்து போனை வாங்கி வாடகை போடுறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு வைத்துவிடுகிறார்.

siragadikka aasai serial vijay tv

மனோஜ் யார் வீட்டுக்கு வாடகை என்று கேட்க அது என்னுடைய பிரண்டு ஒருத்திக்கு நான் தான் வாடகை கொடுக்கிறேன். ஆரம்பத்தில் ரொம்ப ஹெல்ப் பண்ணியிருக்கா, அதுக்காக நான் இப்போ பண்ணுகிறேன் என்று சொல்ல, அதற்கு மனோஜ் இதை ஏன் என்கிட்ட இவ்வளவு நாளா சொல்லல? உன் கிட்ட இன்னும் நிறைய ரகசியம் இருக்கும் போல.

எனக்கு உன்னை பத்தி எதுவுமே தெரிய மாட்டேங்குது. ஒன்னு ஒன்னா தான் வெளியே வருது என்று சொல்ல ரோகிணி கோபப்பட்டு மனோஜை திட்டுகிறார். நீ என் போனை அட்டென்ட் பண்ணுனது தப்பு நீ தான் என்னிடம் மன்னிப்பு கேட்கணும் சென்று சொன்னதும் மனோஜும் கோபப்படுகிறார். இவர்களுக்குள் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

மறுபக்கத்தில் முத்து குடித்துவிட்டு வீட்டிற்குள் வர மீனா முத்து மீது கோபப்பட்டு திட்டுகிறார். முதலில் முத்து நான் குடிக்கவே இல்லை என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். பிறகு மீனா முத்துவின் நண்பர்களை திட்டியதும் நீ என்னை என்ன வேணாலும் சொல்லு ஆனா என்னுடைய நண்பர்களை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேளு என்று சொல்ல, அதற்கு மீனா முடியாது என்று சொன்னதும் பாயை எடுத்துக்கொண்டு மாடிக்கு கிளம்புகிறார்.

siragadikka aasai serial vijay tv

அடுத்ததாக ரவிக்கும் ஸ்ருதிக்கும் சண்டை வருகிறது. நான் என்ன சொன்னாலும் நீ இப்போ எனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று ஸ்ருதி சொல்கிறார். அத்தனை முறை போன் பண்ணின பிறகு நீ ஏன் அட்டென்ட் பண்ணல என்று கேட்க, ரவி மீட்டங்கில் இருந்தேன். பிறகு மறந்துட்டேன் என்று சொல்லி சமாளிக்கிறார். ஆனாலும் ஸ்ருதி கோபப்படுவதால் ரவியும் அங்கிருந்து கிளம்பி மாடிக்கு வருகிறார்.

அடுத்ததாக மனோஜ் அங்கு வருகிறார். பிறகு முத்து, ரவி, மனோஜ் மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+