சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் மீனா கேட்ட கேள்வி.. அண்ணாமலை சொன்ன ரகசியம்! முத்து பிடித்த பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 13ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா சோகமாக இருப்பதை பார்த்து விஜயா ஓவராக பேசிக் கொண்டிருக்க, அதனால் கோபமான மீனா விஜயாவிற்கு பதிலடி கொடுக்கிறார். அதே நேரத்தில் பணத்தை ஏமாந்து நிற்கும் மீனாவிற்கு அண்ணாமலை புது ப்ளான் போட்டு கொடுக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனாவிற்கு முத்து போன் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா நடந்த விஷயங்களை மறைக்கிறார். அப்போது முத்து காசு வந்துடுச்சா எல்லாருக்கும் கொடுத்துட்டியா என்று கேட்க இன்னும் வரலங்க நாளைக்கு கொடுக்கிறேன் நீங்க வேலைய பாருங்க என்று வைத்து விடுகிறார். பிறகு கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

வருத்தத்தில் மீனா குடும்பம்

மறுநாள் காலையில் மீனா அம்மா வீட்டுக்கு சென்று நடந்த விஷயங்களை பற்றி சொல்லி அழுது கொண்டு இருக்க, உனக்குன்னு ஏன் இப்படி வருதுன்னு தெரியல என்று அம்மாவும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதற்கு மீனா நான் பேசாம பூக்கட்டி கொடுத்துட்டு இருந்திருக்கணும் போல நானும் டெக்கரேஷன் வேலை எல்லாம் செஞ்சிருக்க கூடாது என்று சொல்ல, மீனாவின் அம்மா நாம முன்னேறவே கூடாதா? அப்படியே தான் இருக்கணுமா? என்று பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

அப்போது சீதா பத்திரத்தை படித்து தெளிவாக ஏமாற்ற பிளான் பண்ணி இருக்காங்க அக்கா என்று சொல்கிறார். அப்போது மீனா எனக்கு என்ன பண்ணனும்னு தெரியல மண்டப ஓனர் கிட்ட கூட பேசிட்டேன் அவரும் கண்டுக்கல என்று ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கும் போது, மீனாவின் அம்மா நீ பூ கொடுக்கும் இன்ஸ்பெக்டரின் மனைவி உனக்கு நல்லா பழக்கம் தானே இன்ஸ்பெக்டரிடம் இதைப் பற்றி பேசி பார்க்கலாம் என்று சொல்ல சரி என்று மீனாவும் சத்யாவும் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு போகிறார்கள்.

இன்ஸ்பெக்டர் அட்வைஸ்

அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் உன்னுடைய புருஷன் முரட்டுத்தனம் தான் ஆனால் நீ நல்லபடியாக பிசினஸ் பார்த்துட்டு இருக்கிறே என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் இப்படி ஏமாந்துட்டு வந்து நிக்கிறியேமா? எந்த பத்திரம் என்றாலும் கையெழுத்து போடும்போது கடைசி வரைக்கும் எழுதி இருக்கா என்று பார்க்கணும் இல்லன்னா எது வேணாலும் எழுதிக்குவாங்க உஷாரா இருக்கணும் என்று சொல்லிவிட்டு, நான் அன் அபிஷியலா விசாரித்து பார்க்கிறேன்.

புலம்பும் மீனா

இதில் கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்கிறார். இதனால் வெளியே வந்த மீனா சத்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நான் எவ்வளவு முட்டாளா இருந்திருக்கிறேன் என்று அழுது கொண்டிருக்க முத்து போன் போட்டு மீனாவிடம் பேசுகிறார். அப்போது எல்லாருக்கும் பணம் வாங்கி கொடுத்து விட்டாயா என்று கேட்க, மீனா நாளைக்கு தரேன்னு சொல்லி இருக்காங்க என்று சொன்னதும் முதலிலேயே எப்போதுமே படத்தை கொடுத்துடுவாங்களே ஏன் இவங்க இப்படி பண்றாங்க நீ பணம் விஷயத்தில் கவனமாய் இரு என்று அட்வைஸ் சொல்கிறார்.

முத்து கேட்ட கேள்வி

பிறகு மீனாவின் குரல் சரியில்லாமல் இருப்பதை புரிந்து கொண்டு ஏன் உன் குரல் சரியில்லை என்று கேட்க, உடம்பு டயர்டா இருக்கு என்று சமாளிக்கிறார். சரி உடம்பை பாத்துக்க நான் நாளைக்கு வந்து விடுவேன் என்று முத்து சொல்லி விட்டு போனை வைக்கிறார். அப்பொழுது சத்யா மாமா கிட்ட சொல்லி இருக்கலாம் என்று சொல்ல, வேண்டாம் போய் அந்த மேனேஜரை போட்டு அடிப்பாரு.

அது தேவையில்லாத பிரச்சனை தான் என்று மீனா சொல்லிக் கொண்டு சரி டைம் ஆகிறது நான் வீட்டுக்கு போய் சமைக்க போறேன் என்று சொல்ல, சத்யா நீ ஏன் இப்படி அடுத்தவங்களுக்காக யோசித்துக்கொண்டே இருக்க? இந்த பணத்தை எப்படி நம்ம வாங்குறதுன்னு யோசி என்று சொல்லிவிட்டு போகிறார்.

உண்மையை மறைக்கும் மீனா

பிறகு மீனா வீட்டிற்கு வந்ததும் விஜயா சமைக்காம எங்க போய் சுத்திட்டு வர என்று திட்ட அதற்கு மீனா நான் மாமாவுக்கு சமைக்கிறதை இன்னைக்கு நீங்களும் சாப்பிடுங்க என்னால தனியா சமைக்க முடியாது, எனக்கு மனசு சரியில்லை என்று சொல்ல, என்ன மனசுக்கு சரியில்ல என்று கத்தி பேசுகிறார். அதற்கு ஏன் உங்களுக்கு தெரியாதா? என்று மீனா பதிலடி கொடுக்கிறார்.

விஜயாவுக்கு பதிலடி

அதற்கு எனக்கு எப்படி தெரியும் என்று விஜயா கேட்க, அதான் நான் அழிஞ்சு போயிடும்னு வெளியே இருக்காங்களே அவங்க உங்ககிட்ட சொல்லி இருப்பாங்க என்று சொன்னதும் விஜயா திருத்திருவென முழிக்கிறார். பிறகு யாரும் என்கிட்ட எதுவும் சொல்லவில்லை என்று சொல்ல சிந்தாமணி கிட்ட போன் பண்ணி கேளுங்க சந்தோஷமா சொல்லுவாங்க என்று சொல்ல சொல்லிக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை மீனா என்று கூப்பிட்டபடி வீட்டிற்குள் வருகிறார்.

அண்ணாமலையின் அட்வைஸ்

அண்ணாமலை கையில் பிரட்டுடன் வருவதை பார்த்து என்ன மாமா பிரட் வாங்கிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்க, நம்ம தெருவில் இருக்கும் கடைக்காரர் கிட்ட நாம எத்தனை வருஷமா பொருள் வாங்குகிறோம் அந்த நம்பிக்கையில் அன்னைக்கே பொருள் வாங்கும் போது அவர் கொடுத்த பணத்தை சரியா பாக்காம கொண்டு வந்து விட்டேன் வீட்ல வந்து பார்க்கும்போது அதில் ஒரு தாள் கிழிந்து இருந்தது.

ஏமாற்றத்துக்கு பதிலடி

அதைப்பற்றி அடுத்த நாள் நான் போய் கேட்கும் போது அவர் நான் இந்த பணத்தை தரவே இல்லை என்று சொல்லிட்டான். அதனால் நான் ஒரு பிளான் பண்ணுனேன் வீட்டுக்கு வந்து அதை ஒட்டி அடுத்த நாள் அவன் கையில் கொடுத்து எனக்கு பொருளும் தந்து சில்லறையும் தந்துட்டான் என்று சொல்ல விஜயா நீங்களா இப்படி எல்லாம் பண்ணுனீங்க? நீங்க நேர்மையை பற்றி பேசுவிங்களே என்று சொல்ல, நேர்மை இருக்க வேண்டியவங்க கிட்ட இருக்கணும்.

மீனாவுக்கு கிடைத்த ஐடியா

நம்மளை ஏமாத்தணும்னு நினைக்கிறவங்களுக்கு இப்படித்தான் பதில் கொடுக்கணும். அப்பதான் இனி அடுத்தவங்களையும் இதுபோல ஏமாத்த மாட்டாங்க என்று சொன்னதும் இதுதான் நல்ல பிளான் என்று மீனாவும் சொல்லி கொண்டிருக்கிறார். பிறகு மீனாவிற்கு கடன் கொடுத்த பைனான்ஸ் காரர் போன் பண்ணி பணம் வந்ததும் தரேன்னா இன்னும் கொண்டு வரல என்று கேட்க, மீனா இன்னைக்கும் கொண்டு வந்துருவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+