சிறகடிக்க ஆசை: ரோகிணியை மாட்டி விட்ட மனோஜ்.. கறிக்கடைக்காரர் செய்த செயல்.. முத்து பிடித்த பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 15ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி செய்த செயலை மனோஜ் வீட்டில் எல்லோரிடமும் போட்டு கொடுக்கிறார். அதே நேரத்தில் முத்து மற்றும் மீனா பரசுராமனின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறார்கள். அப்போது எதிர்பார்க்காத சம்பவம் நடைபெறுகிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் பரசு வீட்டிற்கு வந்து உங்க பொண்ணை பார்த்து பேசிட்டு தான் வரோம். உங்க பொண்ணு தெளிவாக முடிவெடுத்திருக்கா நீங்க சம்மதம் சொன்னா இந்த கல்யாணத்தை நடத்தி முடித்து விடலாம் என்று சொல்ல, முதலில் பரசு தயங்குகிறார். பிறகு சம்மதம் சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது பரசுவின் மனைவி எங்க முதல் பொண்ணை கட்டிக் கொடுத்திருக்கிறது பெரிய இடம். சொந்தக்காரங்க என்ன சொல்லுவாங்களோ பயமா இருக்கு என்று சொல்ல, அதற்கு முத்து சொந்தக்காரங்க அப்படி இப்படி பேசுறாங்க என்றால் அவங்க கிட்ட லட்ச ரூபாய் கடன் கேளுங்க கல்யாணத்துக்கு வராம ஓடிடுவாங்க.

பொண்ணு கல்யாணம் வாழ்க்கை முக்கியமா? இல்ல சொந்தக்காரங்க முக்கியமா? என்று கேட்டதும் அவரும் சம்மதிக்கிறார். அந்த நேரத்தில் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கறிக்கடைக்காரர் மணி இவர்கள் வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டு சார்பாக பேச வருகிறார். ஆனால் கேட்டு திறக்கும் போது நல்ல விஷயம் பேசும்போது கையில் ஸ்வீட் கூட வாங்காமல் எப்படி போவது என்று கடைக்கு கிளம்பி விடுகிறார்.

அந்த நேரத்தில் முத்துவும் மீனாவும் அங்கிருந்து கிளம்பி சென்று விடுகின்றனர். இருவரும் கிளம்பி பழங்களுடன் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து அவர்களுடைய அம்மா அப்பாவிடம் பேசுகிறார்கள். முதலில் மாப்பிள்ளையின் அப்பா திருமணத்திற்கு சம்மதிக்க முடியாது என்று சொல்கிறார். ஆனால் முத்து அவரிடம் தன்மையாக பேசி அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்து விடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அந்த நேரத்தில் கறிக்கடைக்காரர் மணி போன் போட்டு நான் பொண்ணு வீட்ல பேசிட்டேன் எல்லாம் நல்லவங்களா தான் இருக்காங்க பேசி முடிச்சிடலாம் என்று சொல்ல, அதற்கு அவர் இங்க பொண்ணு வீட்டு சார்பாக ரெண்டு பேரு வந்திருக்காங்க அவங்க என்னுடைய மனசை மாத்திட்டாங்க என்று சொல்கிறார்.

கணவரோடு புகைப்படத்தை பதிவிட்ட சிறகடிக்க ஆசை விஜயா.. உருக்கமாக வெளியிட்ட பதிவு! அந்த வார்த்தை சூப்பர்
பிறகு மாப்பிள்ளையின் அப்பா பேசி முடித்ததும் முத்து தட்டை வாங்கிக்கோங்க மாத்திக்கலாம் என்று சொல்கிறார் அப்போது மாப்பிள்ளையின் அப்பா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எங்க மாமா வந்துடுவாரு என்று சொல்ல, இல்லை எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு இன்னொரு வாட்டி பார்த்துக்கொள்ளலாம். நீங்க நல்ல நாள் பார்த்து பரசு மாமா வீட்டுக்கு வாங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து முத்துவும் மீனாவும் கிளம்புகின்றனர்.

Siragadikka aasai serial vijay tv

மறுபக்கத்தில் மனோஜ் ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு நபர் வருகிறார். அவரிடம் நீங்க என்ன பொருள் வாங்க போறீங்க என்று மனோஜ் கேட்க அதற்கு அவர் நான் வாங்க வரல டாட்டூ போட வந்திருக்கிறேன். 500 ரூபா தான் டாட்டூ போடுறீங்களா என்று கேட்க, அதற்கு மனோஜ் வேண்டாம் என்று மறுத்து விடுகிறார்.

மொத்தமாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி- பாக்கியா.. பக்கத்தில் யாரு பாருங்க! இது செமையா இருக்கு
ஆனால் ரோகிணி எனக்கு டாட்டூ போடுங்க என்று கூட்டிக்கொண்டு போகிறார் ஆனால் மனோஜ் வேண்டாம் ரொம்ப வலிக்கும் என்று சொல்ல ரோகிணி அதைக் கேட்காமல் மனோஜ் பெயரை டாட்டூ போட்டு விடுகிறார். அதைத் தொடர்ந்து மனோஜும் ரோகிணியும் வீட்டிற்கு வருகின்றனர்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது மனோஜ் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து ரோகிணி கையில் தன்னுடைய பெயரை டாட்டூ போட்டு இருப்பதை காட்டுகிறார். அப்போது முத்துவும் மீனாவும் இது என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள். அதற்கு ஸ்ருதி மற்றும் ரவி இது தான் டாட்டூ மனோஜ் பெயரை கையிலே போட்டு இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+