சிறகடிக்க ஆசை: முத்து குடும்பத்துக்கு பிரவுன் மணி போட்ட கண்டிஷன்.. கோபத்தில் கொந்தளித்த விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 17ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவை வேலை செய்ய விடாமல் தடுப்பதற்காக சிந்தாமணி புது பிளான் போட்டு விஜயாவிடம் கோபமூட்டும் வகையில் பேசுகிறார். இது தெரியாத விஜயா சிந்தாமணியின் பிளானில் சிக்கி விடுகிறார். மறுபக்கத்தில் பிரவுன் மணி பரசுராமன் குடும்பத்தை நேரில் வந்து சந்திக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி மனோஜ் உடைய பெயரை தன்னுடைய கையில் டாட்டூ போட்டு இருப்பதை பார்த்து மனோஜ் பெருமையாக பேசுகிறார். அதனால் ரோகிணியை கூப்பிட்டு பாராட்டுகிறார். அதோடு தன்னுடைய மகனுக்காக இப்படியெல்லாம் பண்ணுறாளே என்று விஜயா ஃபீல் பண்ணுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது மீனா நானும் முத்துவின் பெயரை கையில் பச்சை குத்திக் கொள்ளப் போறேன் என்று சொல்ல, அதற்கு பதறி போன முத்து, அதெல்லாம் வேண்டாம் அன்பு மனசில் இருந்தா மட்டும் போதும் வெளியே இப்படி காட்டணும் என்று எந்த கட்டாயமும் கிடையாது என்று சொன்னதும் ஸ்ருதி முத்து சொல்றதுதான் சரி என்று சொல்கிறார்.

பிறகு மனோஜ் ரோகிணிக்கு மட்டும்தான் பாசம் அதிகமாக இருக்கு. மற்ற யாருக்கும் இந்த வீட்டில் கணவர் மீது பாசம் இல்லை என்று சொல்ல அதற்கும் ஸ்ருதி பதிலடி கொடுக்கிறார் பிறகு நாங்க ரூமுக்கு போறோம் மீனாவை சாப்பாடு கொண்டு வர சொல்லுங்க என்று மனோஜ் சொன்னதும் முத்து கோபப்பட்டு திட்டுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அடுத்ததாக முத்துவும் மீனாவும் பரசுவின் மகளை வீட்டுக்கு கூட்டிட்டு வருகின்றனர். அப்போது அவருடைய அம்மா அவரை அடித்து எதற்காக இப்படி பண்ணுன என்று திட்டுகிறார். பிறகு முத்துவும், மீனாவும் அவர்களை சமாதானம் செய்து விட்டு வீட்டிற்கு கிளம்புகிறார்கள். மீனாவும் வீட்டை விட்டு போன அடுத்த நிமிடத்தில் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணி, பரசுராமன் வீட்டிற்கு வருகிறார்.

அவர் கூடிய சீக்கிரமே கல்யாணத்தை பண்ணி வைத்து விடுவோம் என்று பேசி முடிக்கிறார். அப்போது திருமணத்திற்கு வரதட்சணை என்ன கொடுக்க வேண்டும் என்று பரசுராமன் கேட்க, அதற்கு நீங்க தங்கம் போல பொண்ணு பெத்து வச்சிருக்கீங்க அதனால நான் தான் உங்க மகளுக்காக கட்டில், பீரோ எல்லாம் வாங்குவேன் நீங்க எதுவும் பண்ண வேண்டாம் என்று கண்டிஷன் போடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதைத் தொடர்ந்து பார்வதி வீட்டுக்கு வந்த சிந்தாமணி மீனா ஆர்டர் எடுத்து முடித்தது பற்றி கோபமாக பேசுகிறார். அதற்கு பார்வதி மீனா ரொம்ப திறமையான பொண்ணு அவா எந்த விஷயத்தை செய்ய தொடங்கினாலும் அதை பாதியில் விட மாட்டார் என்று பாராட்டி பேசுகிறார். இதனால் சிந்தாமணி கோபமாக இருக்கிறார்.

மொத்தமாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி- பாக்கியா.. பக்கத்தில் யாரு பாருங்க! இது செமையா இருக்கு
அந்த நேரத்தில் விஜயா அங்கு வர அதை பார்த்தும் பார்க்காதது போல கால் மேல் கால் போட்டு திமிராக சிந்தாமணி உட்கார்ந்து இருக்கிறார். இதனால் விஜயா கோபமாக கிளம்ப போகிறார். அப்போது சிந்தாமணி ஊருல யாருலாமோ ஆடிட்டு இருங்காங்க அந்த ஆட்டத்தை விட இதான் முக்கியமா? நீங்க போயிட்டு வாங்க வந்த பிறகு அடிக்கலாம் என்று திமிராக பேச அதற்கு விஜயா நீங்க எதை மனசுல வச்சுட்டு சொல்றீங்கன்னு எனக்கு தெரியுது நான் மீனாவை வேலை செய்ய விடாமல் எவ்வளவோ தடுத்தேன். ஆனா அவ வேலையை செஞ்சு முடிச்சிட்டா அதுக்கு என்ன பண்ணட்டும் என்று கோபப்படுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதற்கு சிந்தாமணி உங்க மருமக வளர்ந்துட்டே போவா ஆனால் உங்களால எதுவும் செய்ய முடியாது என்று மீனாவுக்கு எதிராக தூண்டி விடுவது போலவே பேசுகிறார். அதனால் கோபமான விஜயா நான் மீனாவை பூ வியாபாரம் பண்ண விடாமல் பண்ணுவேன். அவளை வீட்டில் அடக்கி வைப்பேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.

சிறகடிக்க ஆசை: ரோகிணியை மாட்டி விட்ட மனோஜ்.. கறிக்கடைக்காரர் செய்த செயல்.. முத்து பிடித்த பாயிண்ட்
இதை பார்த்து பார்வதி பீல் பண்ணுகிறார். அடுத்ததாக முத்துவும் மீனாவும் கிச்சனில் இருக்கும் போது இருவருக்கும் தும்மல் வருகிறது. அப்போது வீட்டுக்கு வந்த விஜயா அவர்களை தும்ம கூடாது என்று மிரட்டுகிறார். பிறகு அவருக்கே தும்மல் வந்து விடுகிறது. அதனால் அங்கிருந்து ஓடி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+