சிறகடிக்க ஆசை: முத்து போட்ட புது திட்டம்.. மனோஜ்க்கு வந்த போன் கால்.. மொத்தமாக சிக்கும் ரோகிணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 18ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ்க்கு வந்த போன் காலில் ரோகிணிக்கு புது பிரச்சனை வருகிறது. அதே நேரத்தில் முத்து டிராபிக் போலீஸ் அருணை மாட்ட வைப்பதற்காக திட்டம் போடுகிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவுக்கும், மீனாவிற்கும் ஜலதோஷம் பிடித்து இருப்பதால் அவர்கள் ஆவி பிடிக்கிறார்கள். அந்த நேரத்தில் ரோகிணியும் மனோஜும் ரூமில் இருக்கிறார்கள். அப்போது மனோஜ்க்கு சந்தோஷி சார் ஃபோன் செய்கிறார். அவர் பிசினஸ் பற்றி பேசிவிட்டு தான் மலேசியாவில் புதியதாக பிசினஸ் தொடங்கப் போகிறேன் என்றும் அங்கு உங்களுடைய மாமனார் எப்படி இருக்கிறார் அவரிடம் பிசினஸ் பற்றி பேசலாமா என்று கேட்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

இதனால் அதிர்ச்சியான மனோஜ் அவர் இப்போ வேற நாட்டுக்கு போயிட்டாரு. அங்க இல்ல என்று சமாளிக்கிறார். உடனே ரோகிணி என்னாச்சு என்று கேட்க, சந்தோஷி சார் உங்க அப்பா பற்றி பேசுறாரு என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி அவரிடம் உண்மையை சொல்ல வேண்டியது தானே என்று கேட்க, இப்போ அவரிடம் சொன்னால் சரிப்பட்டு வராது ஏற்கனவே நாம ஏமாந்து போயிருக்கிறோம் என்பது தெரிந்திருக்கும். இப்போ உங்க அப்பா ஜெயிலில் இருந்து இறந்தார் என்று தெரிந்தால் நம்ம மேல அவருக்கு பிளாக் மார்க் வந்திரும்.

கணவரோடு புகைப்படத்தை பதிவிட்ட சிறகடிக்க ஆசை விஜயா.. உருக்கமாக வெளியிட்ட பதிவு! அந்த வார்த்தை சூப்பர்
அதற்காகத்தான் நாம் சமாளிச்சேன் என்று சொல்ல, நல்லவேளை சமாளிச்ச இல்லன்னா நானும் மாட்டியிருப்பேன் என்று ரோகிணி உளறி விடுகிறார். இதனால் என்னது மாட்டிருப்பாயா என்று மனோஜ் கேட்க, அது நீ சமாளிக்கவில்லை என்றால் நம்ம மீது அவருக்கு தப்பான அபிப்பிராயம் வந்திருக்கும் அதை சொன்னேன் என்று ரோகிணி சமாளிக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அடுத்ததாக மீனாவும் முத்துவும் ஹாலில் போர்வையை போத்தி ஆவி பிடிப்பதை பார்த்து தப்பாக நினைத்துக் கொள்ளும் விஜயா கத்தி திட்டுகிறார். பிறகு ஆவி பிடிக்கிறார்கள் என்று தெரிந்ததும் இங்கு இருந்து எதற்கு பிடிக்கிறீங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் போனை பார்த்துக்கொண்டே வேகமாக வந்து ஆவி பிடித்த பாத்திரத்தை தட்டி வழுக்கி விழுகிறார்.

சிறகடிக்க ஆசை: முத்து குடும்பத்துக்கு பிரவுன் மணி போட்ட கண்டிஷன்.. கோபத்தில் கொந்தளித்த விஜயா
இதனால் அவருடைய டிரஸ் எல்லாம் ஈரமாகி விடுகிறது. அதனால் என் மேல வேணும்னு வெந்நீரை கொட்டிட்டாங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதி முத்துவுக்கு மீனாவுக்கும்தான் தனி ரூம் இல்லையே அவர்கள் ரூம் இருந்தா அவங்களுடைய ரூமில் வைத்து ஆவி பிடிச்சி இருப்பாங்க நீங்கதான் இந்த வீட்டில் பார்த்து நடக்கணும் என்று சொன்னதும் மனோஜ் எல்லாரும் என் மேல தான் தப்பு சொல்லுவீங்க என்று கோபப்பட்டு அங்கிருந்து போகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதை தொடர்ந்து ரவியும் ஸ்ருதியும் ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஸ்ருதி வேலை பார்ப்பதை பார்த்து விட்டு பாராட்டுகிறார். பிறகு ஒரு கஸ்டமர் அட்டென்ட் பண்ணும் போது அவருக்கு சரியான நேரத்தில் சாப்பாடு செய்யவில்லை என்று கேட்க ரவி அதற்கு திமிராக பதில் சொல்கிறார்.

பிறகு இதுவரைக்கும் என்னை எவ்வளவு டார்ச்சர் பண்ணி இருக்கிற இப்போ உன்னை நான் இங்க வச்சு டார்ச்சர் பண்ணுகிறேன் என்று ரவி மனதிற்குள் பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக முத்துவும் செல்வமும் ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பக்கமாக போலீஸ் ஆபீஸர் அருண் பைக்கில் ஹெல்மெட் போடாமல் போனை பேசிக்கொண்டே வேகமாக வருகிறார்.

Siragadikka aasai serial vijay tv

பிறகு பைக்கை நோ பார்க்கிங்ல விட்டு விட்டு அருண் கடைக்குள் போகிறார். அப்போது முத்து அந்த வண்டிக்கு பூட்டு போட்டு விடுகிறார். இதனால் அருணுக்கும் முத்துக்கு வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது முத்து நாங்க தப்பு பண்ணுனா மட்டும் ரூல்ஸ் பேசுறீங்க இப்போ நீங்க மட்டும் தப்பு பண்ணலாமா என்று சொல்ல, அதற்கு அருண் எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல அதுக்காக மருந்து வாங்க வந்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு முத்து திட்டி விட்டு பூட்டை திறந்து விடுகிறார். ஆனால் இவனை சும்மா விடக்கூடாது ஏதாவது பண்ணனும் என்று செல்வத்திடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+