சிறகடிக்க ஆசை: அருணை பழிவாங்க முத்து செய்த தவறான செயல்.. நறுக்குன்னு மீனா கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 19ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா மண்டபத்திற்கு காசு கொடுக்க வேண்டும் என்று கஷ்டத்தில் இருந்தபோது அவருக்கு பணம் கிடைக்கிறது. அதே நேரத்தில் அருணால் முத்து அடுத்த பிரச்சனையில் சிக்குகிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து காரை நிறுத்தி அருண் மெஷின் கொண்டு வந்து நீ குடித்திருக்கியா இல்லையா என்று ஊது என்று சொல்ல, அதற்கு முத்து அவரிடம் திமிராக பேசிக் கொண்டிருக்கிறார். நான் குடிக்கவில்லை அதனால் நான் ஊத மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு இன்னொரு கான்ஸ்டபிள் வந்து என்ன பிரச்சனை நீங்க ரெண்டு பேரும் எதற்காக மீண்டும் மீண்டும் பிரச்சனை செய்றீங்க என்று கேட்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

வாக்குவாதம்

அப்போது முத்து நான் குடிக்கவே இல்ல ஆனால் இவர் என்னை ஊத சொல்லுறாரு. உங்களை மாதிரி நல்லவங்க சொன்னா நான் செய்வேன் என்று சொல்ல அவர் ஊது என்று சொல்கிறார். பிறகு முத்து ஊதி காட்டிவிட்டு குடிக்கவில்லை என்றதும் அந்த போலீஸ்காரர் போக சொல்கிறார். ஆனால் முத்து அருண் பிரச்சனை செய்வது போல பேசி விட்டு போகிறார்.

மீனாவின் வருத்தம்

மறுபக்கத்தில் மீனா சந்திராவை சந்தித்து ஆர்டர் விஷயம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். தனக்கு பணம் தேவைப்படுவதை பற்றி அவர் சொன்னதும் மாப்பிள்ளையிடம் பணம் இருக்கா சந்திரா என்று கேக்க, அதற்கு அவருடைய கையில் இல்லாம வீட்ல கேட்க போகும்போது அத்தை பிரச்னை பண்ணுனாங்க என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனாவின் அம்மா சந்திரா சரி நான் ஏதாவது ரெடி பண்ண முடியுதா என்று பாக்குறேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சீதாவின் நல்ல குணம்

அந்த நேரத்தில் சீதா வருகிறார் என்ன விஷயம்கா என்று அவர் கேட்டதும் நடந்த விஷயத்தை சொல்கிறார். அதற்கு சீதா ஒரு லட்சம் ரூபாய் சீட்டு போட்டு வச்சிருக்கிறேன். 40 ஆயிரம் சேவிங்கில் இருக்கு நான் கொடுக்கிறேன் என்று சொன்னதும் சீதா வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு நீ எவ்வளவோ செஞ்சிருக்க இத கண்டிப்பா நீ வாங்கி தான் ஆகணும் உன் தங்கச்சி கொடுத்தா நீ வாங்க மாட்டியா என்று சென்டிமண்டாக பேசியதும் சரி என்று வாங்கிவிட்டு கிளம்புகிறார்.

முத்துவின் திமிர் செயல்

மறுபக்கத்தில் முத்து செல்வத்துக்கு போன் போட்டு பாருக்கு வர சொல்கிறார். அங்கு முத்து குடித்து கொண்டிருப்பதை பார்த்து கொஞ்ச நாளா இந்த பழக்கத்தை விட்டு இருந்தா இப்போ எதுக்கு இதை திரும்ப பண்ணுற என்று கேட்க, அந்த போலீஸ்காரர் என்கிட்ட டென்ஷன் பண்ணிட்டு இருக்காரு அவனை ஏதாவது பண்ணனும். உன்னை இப்போ எதுக்கு வர சொன்னேனா நான் இப்போ ஃபுல்லா குடிச்சிருக்கேன் திருப்பி அந்த இடத்துக்கு போகணும் ஆனா வண்டி நீதான் ஓட்டணும் என்று சொல்கிறார்.

கடுப்பாகும் அருண்

முத்து பேசியதை பார்த்து கடுப்பான செல்வம் எதுக்குடா தேவையில்லாத வம்பு இழுக்குற என்று கேட்க, வம்பு இழுப்போம் நல்லா தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு காரில் கிளம்புகிறார்கள். செல்வம் கார் ஓட்டிக்கொண்டு அருண் இருக்கும் இடத்திற்கு வந்து நிறுத்துகிறார். அப்போது அருண் செல்வத்தை குடித்திருக்கியா என்று கேட்க, அதற்கு முத்து அவன் குடிக்கல நான் தான் குடித்து இருக்கிறேன் என்று முத்து அலப்பறை செய்ய அருண் ஒரு கட்டத்தில் கடுப்பாகி கோபப்படுகிறார்.

கோபப்படும் மீனா

அந்த நேரத்தில் இன்னொரு போலீஸ் வந்து செல்வத்தை கார் எடுக்கும்படி சொல்ல அருண் முத்துவை கோபமாக பார்க்கிறார். அடுத்ததாக மீனா பூ கட்டி கொண்டிருக்கும் போது அண்ணாமலை முத்து இன்னும் வரலையா என்று கேட்க, சவாரி போயிருப்பார் வந்துருவார் மாமா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து வீட்டுக்கு வர முத்து குடித்திருப்பதை பார்த்து மீனா கோபப்படுகிறார்.

மீனா கேட்ட கேள்வி

அப்போது டிராபிக் போலீஸ் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி முத்து சொல்லிக்கொண்டிருக்க அதற்கு மீனா அவர் அவருடைய வேலையை தானே பார்த்தாரு. நீங்க குடிக்கலன்னா ஊதிட்டு போக வேண்டியது தானே எதுக்காக அவர் கிட்ட திமிரா பேசுனீங்க? அதோட குடிச்சிட்டு வந்து இப்படி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

முத்துவின் தவறான செயல்

அடுத்தவங்களுக்காக நீங்க எதுக்கு குடிக்கிறீங்க? உங்க மேல இருக்கிற தப்பை மறைக்கிறதுக்காக தான் நீங்க இப்படி எல்லாம் நடந்து இருக்கீங்க என்று கோபப்பட்டு பேச அதற்கு கடைசியில் முத்து நீ சம்பாதிக்கிற திமிரில பேசுற அதனால் தான் இப்படி எல்லாம் புருசனையை எதிர்த்து பேசுற என்று தன்னுடைய பாக்கெட்டில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து போட்டுவிட்டு அங்கு படுத்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+