சிறகடிக்க ஆசை: முத்து என் மகன், சப்போர்ட் செய்த விஜயா.. ரோகிணி பற்றி தெரிந்த அடுத்த உண்மை.. மனோஜ் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 19ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவின் கார் சாவியை எடுத்து கொடுத்தது ரோகிணி தான் என்று சந்தேகப்படுகிறார். அதே நேரத்தில் விஜயா சொன்ன வார்த்தையை கேட்டு முத்து மிகவும் எமோஷனல் ஆகிவிடுகிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவின் காரில் ஏற்கனவே பிரேக் பிடிக்காமல் தான் இருந்தது, அவருடைய பிரேக் ஆயில் கட் பண்ணி விட்டு இருந்தது என்ற உண்மையை கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறார். அதோடு இந்த உண்மையை வெளியே சொல்ல வேண்டாம் என்று அருண் தான் மிரட்டினார். இந்த முத்துவின் லைசன்ஸ் கேன்சல் பண்ண வைக்க வேண்டும் என்று தான் அருண் இப்படி செய்தார் என்று கான்ஸ்டபிள் சொன்னதும் இன்ஸ்பெக்டர் அருணை திட்டி ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ண போறேன் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மிரட்டிய இன்ஸ்பெக்டர்

அதோடு முத்துவிடம் காரில் நீ வேணுன்னு வந்து மோதலங்குற ஒரே காரணத்துக்காக தான் இப்ப உன்னுடைய காரை தாரேன் ஆனா உன்மேலயும் தப்பு இருக்கு. நீ அருண் வீட்டிற்கு சென்று மிரட்டி இருக்கக் கூடாது என்று திட்டி விட்டு காரை எடுத்துவிட்டு போக சொல்கிறார். அப்போது கான்ஸ்டபிள் மீனாவிடம் உனக்கே ஆயிரம் பிரச்சனை இருந்தது, அந்த பிரச்சனையிலும் நீ கர்ப்பமாக இருக்கிற ஒரு பொண்ணுக்காக உதவுன. அதை பார்த்து எனக்கே மனசு கஷ்டமா இருந்துச்சு.

கான்ஸ்டபிள் பாராட்டு

என் பொண்ணு இப்போ கர்ப்பமாக இருக்கிறா இந்த நேரத்தில் நீ செஞ்சது எனக்கு மனசுக்கு ஒரு மாதிரி இருந்தது. அதனால்தான் நான் உண்மையை சொன்னேன் என்று சொல்கிறார். அடுத்ததாக முத்துவும் மீனாவும் காரை வாங்கிக் கொண்டு வரும்போது கான்ஸ்டபிள் சொன்ன விஷயத்தை சொல்லி மீனாவை முத்து பாராட்டுகிறார். உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு நீ எல்லோருக்கும் உதவி செய்வதால் தான் நமக்கு இன்னைக்கு நல்லது நடந்திருக்கு என்று சொல்லி கொண்டிருக்கிறார்.

முத்து சொன்ன மகிழ்ச்சி செய்தி

அதோடு எனக்கு கார் ஒயரை யார் கட் பண்ணி இருப்பாங்க என்ற சந்தேகம் வருகிறது. இதற்கு நம்ம வீட்டில் இருந்து தான் யாரோ கார் சாவியை எடுத்துருக்காங்க என்று சொல்ல, மீனாவும் அதிர்ச்சி அடைகிறார். அடுத்ததாக முத்து வீட்டிற்கு வந்து அண்ணாமலை உட்பட குடும்பத்தினர் எல்லோரிடமும் தனக்கு கார் கிடைத்துவிட்ட செய்தியை சொல்கிறார். பிறகு தன்னுடைய கார் ஒயர் கட் பண்ணுவதற்கு கார் சாவி இல்லாம பண்ண முடியாது, அப்போ கார் சாவியை யாரோ எடுத்திருக்காங்க என்று சொல்லிக்கொண்டு விஜயாவை பார்க்கிறார்.

மாட்டிக்கொண்ட ரோகிணி

அதனால் பதறிப்போன விஜயா நீ என் மேல சந்தேகப்படுறியா? எந்த ஊர்லயாவது அம்மாவே பிள்ளை உயிருக்கு கேடு நினைப்பாங்களா? என்று சொல்ல முத்து எமோஷனலாகி விடுகிறார். நான் யாரு சொன்னாலும் உங்க மேல சந்தேகப்பட மாட்டேன் என்று சொல்ல, விஜயாவும் பீல் பண்ணுகிறார். அதை தொடர்ந்து ஒவ்வொருவராக இவர்கள் செஞ்சிருக்க மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டுவரும் முத்து ரோகிணியை பார்க்க ரோகிணி அப்ப நான் செஞ்சு இருப்பேன்னு சந்தேகப்படுகிறீங்களா? என்று கோபப்படுகிறார்.

மீனா கேட்ட கேள்வி

அதற்கு மீனா அவர் உங்க மேல சந்தேகம் இருக்குன்னு சொல்லவே இல்லையே என்று சொன்னதும், இவர் பார்க்கிறத பார்த்தா நான் தான் ஆணியில் மாட்டி இருந்த சாவியை எடுத்து இன்னொருத்தருக்கு கொடுத்த மாதிரி பாக்குறாரு என்று சொல்ல, நான் ஆணியில் சாவியை மாட்டியிருந்தேன்னு சொல்லவே இல்லையே என்று சொன்னதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

ஸ்ருதியின் சப்போர்ட்

பிறகு நீங்க எப்பவும் கார் சாவியை ஆணியில் தான மாட்டி வைப்பீங்க அதான் சொன்னேன் என்று சமாளிக்கிறார். அதற்கு முத்து மனோஜிடம் யார் மனசுல என்ன இருக்குன்னு சொல்ல முடியாதுடா மனோஜ் நீ பார்த்து நடந்துக்க. எனக்கு இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு, ஏற்கனவே இவங்களை பத்தி வீட்டில் போட்டுக் கொடுத்தது நான் தான். அதனால எனக்கு ஏதாவது நடக்கணும்னு பிளான் பண்ணி இருக்காங்களோன்னு தோணுது என முத்து சொன்னதும் ஸ்ருதி ஆமா நீங்கதான அவங்க மாமா விஷயத்தை சொன்னீங்க அதனால உங்க மேல கோபம் இருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+