சிறகடிக்க ஆசை: தியாகியான முத்துவுக்கு விழுந்த செருப்படி.. மனோஜ் சொன்ன வார்த்தை! கலங்கிய குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் கண்ணில் கண்ணாடி குத்தியதால் மொத்த குடும்பத்தினரும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து மனோஜுக்காக செய்த செயலால் அவருக்கே பிரச்சனை வருகிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா, ஸ்ருதியிடம் அவர் யாரையோ துரத்திகிட்டு போயிருக்காரு. அப்போ நிறைய பேரை தள்ளிவிட்டு போயிருக்காரு. அவங்களுக்கு அடிபட்டு அப்புறம் தான் வண்டியில் மோதி இருக்காரு என்று சொல்ல, இது வேறயா என்று ஸ்ருதி அதிர்ச்சி ஆகிறார். நாங்கள் இப்பதான் அவங்களுக்கு காசு கொடுத்துட்டு வந்தோம் என்று மீனா சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மனோஜ் நிலைமை கஷ்டம்

பிறகு மனோஜ்க்கு கண்ணு சரி ஆயிடுமா என்று கேட்க கிரிட்டிக்கல் தான் என்னவென்று பார்க்கலாம் என்று ஸ்ருதி சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் டாக்டர் வெளியே வர விஜயா என் பையனுக்கு என்ன ஆச்சு சார் கண்ணு தெரியாதா? என்று கேட்கிறார். அதற்கு டாக்டர் ஆபரேஷன் முடிஞ்சு இப்பதான் வந்திருக்கிறார் டிஸ்டர்ப் பண்ணாம போய் பாருங்க அவர் எமோஷனலாக கூடாது என்று சொல்கிறார்.

கதறி அழும் குடும்பம்

உடனே குடும்பத்தினர் எல்லாரும் மனோஜை வந்து பார்க்க வருகிறார்கள். பிறகு எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள். அப்போது மனோஜ் அம்மா நீ என்னை சின்ன வயசுல கண்ணு என்று தானே கொஞ்சுவே... ஆனா இப்போ அந்த கண்ணாலே உன்னை பார்க்க முடியவில்லையே என்று சென்டிமென்டாக பேசி அழுது கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலையும் கலங்க அவருக்கு முத்து ஆறுதல் சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

திட்டிய ஸ்ருதி

அந்த நேரத்தில் ஸ்ருதி எல்லாரையும் திட்டுகிறார். இப்படி அழுதுகிட்டு இருந்தா மனோஜ்க்கு பயம் அதிகமாகிடும் என்று சொல்ல, ரோகிணி நான் என்னோட கண்ணை கொடுத்துக் கூட இந்த உலகத்தில் உன்னை பார்க்க வைப்பேன் மனோஜ் என்று பேசுகிறார். பிறகு டாக்டர் வந்து எல்லாரையும் வெளியே வெயிட் பண்ண சொல்கிறார்.

பரிதாபப்படும் முத்து

அப்போது மனோஜ் ஏற்கனவே ரொம்ப பயந்தவன் இப்போ ரொம்ப பதறி போய் இருக்கார் என்று சொல்ல, மீனா பக்கத்தில் இருக்கிற விநாயகர் கோயிலுக்கு போயிட்டு வரலாம் என்று முடிவெடுக்கிறார். பிறகு இருவரும் கோவிலுக்கு போக கீழே வரும்போது அங்கு மனோஜ் தலையில் கல்லை வைத்து அடித்த டிராபிக் போலீஸ் கட்டு போட்டுக்கொண்டு இருக்கிறார்.

போலீஸ் விசாரணை

பிறகு சில போலீஸ் வந்து மனோஜ் பற்றி விசாரிக்கிறார்கள். அப்போது அவர்களிடம் எங்க அண்ணன்தான் மனோஜ் என்னவென்று முத்து கேட்கிறார். அதற்கு அவரிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கணும் என்று போலீஸ் சொல்கிறார்கள். சரி வாங்க என்று போலீசை முத்து கூட்டிக்கொண்டு வருகிறார். பிறகு போலீஸ் நீ யாரை துரத்திட்டு போன கேட்க கதிர் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மனோஜ் சொன்ன விஷயம்

அப்போது அண்ணாமலை உன்ன பணம் வாங்கி ஏமாற்றுனவனா என்று கேட்க ஆமாம் அவன் தான் என்று சொல்கிறார். அப்போது போலீஸ் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் முத்து கேட்கிறார். நம்பர் பிளேட் பார்த்தியா? அவன் கூட வேற யாராவது இருந்தாங்களா? என்று கேட்டுக்கொண்டே இருக்க போலீஸ் டென்ஷனாகி முத்துவை அமைதியாக இருக்க சொல்கிறார்.

பிறகு மனோஜிடம் அந்த நபரை எப்போ பார்த்தீங்க எந்த ஏரியா என்று விசாரித்துவிட்டு நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். பிறகு டாக்டர் மனோஜ்க்கு ஆபரேஷன் பண்ண 75 ஆயிரம் பணம் கட்டுமாறு சொல்கின்றனர். அதனால் முத்துவும் மீனாவும் என்ன செய்வது என்று தெரியாமல் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் போன் போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பணக்கஷ்டம்

அவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் கிடைக்கிறது அப்போது அண்ணாமலை வந்து பணம் பத்தலையா? நான் ஏதாவது கொடுக்கவா என்று கேட்க, அதற்கு முத்துவும் மீனாவும் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். அதைத் தொடர்ந்து முத்துவும், மீனாவும் மீதம் வாங்கிவிட்டு வருவதற்காக வெளியே போயிருக்கிறார்கள்.

திட்டும் விஜயா

அந்த நேரத்தில் விஜயா வீட்டிற்கு வந்து இந்த மீனா இன்னைக்கு கூட பூ கட்ட போயிட்டாளா? அங்கே மனோஜ் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருக்கான். அவனுக்கு சமைச்சு கொடுக்க வேண்டாமா? நாம யாரும் சாப்பிட வேண்டாமா? என்று திட்டிக் கொண்டே இருக்க, அண்ணாமலை எதுவும் பேசாமல் விஜயாவை முறைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+