சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி மீனாவுக்கு தெரிந்த உண்மை.. விஜயா செய்த துரோகம்! முத்து கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 25ஆம் தேதிக்கான எபிசோடில் சிந்தாமணி விஜயாவிடம் டான்ஸ் கற்றுக் கொள்ளும் விஷயம் மீனாவிற்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் முத்து பற்றி அருண் சொன்ன வார்த்தையை கேட்டு சீதா கோபப்படுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா காபி குடித்துக் கொண்டிருக்கும் போது மனோஜ் வருகிறார். உங்களுக்கு சொன்ன டயட்டீஷன் வந்திருக்காங்கம்மா என்று சொல்ல, டயட்டீஷியன் பெண் உள்ளே வருகிறார். பிறகு அவர் வீட்டிற்குள் வந்ததும் விஜயா அவரடம் நீங்கள் முதலில் கட் பண்ண வேண்டியது இந்த காபியை தான் என்று ரூல்ஸ் போடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

பிறகு நீங்க வெயிட்டை குறைச்சா 20 வயசு கம்மி ஆயிடுவீங்க என்று சொல்ல, முத்து அப்பா நீங்க ரெண்டு பேரும் வெளியே போகும்போது அப்பா பொண்ணுன்னு சொல்லுவாங்க என்று முத்து கிண்டல் பண்ணுகிறார். பிறகு டயட்டுக்கு தேவையான பொருட்களை நானே வாங்கிட்டு வந்துட்டேன் என்று டயட்டீஷியன் சொல்கிறார்.

அதற்கு முத்து பேஷண்ட் மேல அவ்வளவு அக்கறையா என்று கேட்க, அதற்கு ரோகிணி பேஷண்ட் இல்ல கிளையன்ட் என்று சொல்கிறார். பிறகு டயடீஷியன் பெண் வாராவாரம் நான் உங்களுக்கு என்ன சாப்பிடணும்னு எடுத்துட்டு வந்துருவேன் என்று சொல்லிவிட்டு, இந்த வீட்டில் யாரு சமைப்பாங்க என்று கேட்க, விஜயா இவதான் இங்கு சமையல்காரி என்று மீனாவை பற்றி சொல்ல முத்து கோவப்பட்டு இவ சமையல்காரி இல்லை என் பொண்டாட்டி.

என் பொண்டாட்டி மீனா வீட்டில் சமையல் செஞ்சு கொடுக்கிறா.. அதோட பிசினஸும் செய்றா என்று சொல்கிறார். பிறகு விஜயாவிற்கு என்னவெல்லாம் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று டயட்டீஷியன் சொல்கிறார். தான் வாங்கிட்டு வந்த பொருளுக்கு 3500 என்று வாரம் பீஸ் 4500 என்று சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைகிறார்.

Siragadikka aasai serial vijay tv

ஒரு வாரத்திற்கு 8000 ஆகுதா என்று யோசித்து பிறகு சம்மதம் சொல்கிறார். பிறகு அந்தப் பெண் சென்றுவிட மனோஜ் நானும் டயட்டிருக்க போறேன் எனக்கும் ரோகிணிக்கும் சேர்த்து சமைக்க சொல்லிடுங்கம்மா என்று சொல்ல அதற்கு மீனா போய்க்கொண்டிருந்த டயட்டீஷியன் பெண்ணை நிறுத்தி நீங்க சமைக்கிறதுக்கு எவ்வளவு காசு வாங்குவீங்க என்று கேட்க, நாங்க சமைச்சு தர்றது இல்ல ஆனால் வேற யாரையாவது வச்சு சமைச்சு தரதா இருந்தா 300 ரூபாய் வாங்குவோம் என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து முத்து ரவியிடம் நீங்க எவ்வளவு சமைக்க வாங்குவீங்க என்று கேட்க, நாங்க டயட் சாப்பாட்டுக்கு 2000 வாங்குவோம் என்று சொல்ல மனோஜ் அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்ல, அப்போ உன் பொண்டாட்டியை சமைக்க சொல்லு என்று சொல்கிறார். மறுபக்கத்தில் கான்ஸ்டபிள் அருண் சஸ்பென்ஷன் முடிஞ்சு யூனிபார்ம் போட்டுக்கொண்டு வேலைக்கு கிளம்பி கொண்டிருக்கிறார்.

அப்போது அருண், முத்து கிழித்த சட்டையை ஆங்கரில் தொங்கவிட்டு நடந்ததை நினைத்து பார்த்து கோபப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது சீதா அங்கு பூ கொடுக்க வர அருண் அம்மா அவரை சாப்பிட சொல்கிறார். வேண்டாம் என்று சீதா கிளம்பும்போது பூவுக்கு காசு வாங்கிக்கோமா என்று அருணை கூப்பிட்டு பணம் வாங்கிக் கொடுக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

பிறகு நான் டிரஸ் சோப்பு போட எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அந்த ஆங்கரில் போட்டு இருக்க டிரஸ் மட்டும் எடுக்காத என்று அருண் சொல்ல, என்ன ஆச்சு என்று சீதா விசாரிக்க ஒரு ரவுடி பையன் பிரச்சனை பண்ணிட்டு இருக்கான்னு என்று அருணின் அம்மா சொல்கிறார்.

அதற்கு சீதா ரவுடி பையன் என்று சொல்கிறீர்கள் நீங்கள் போலீஸ் தானே அவனை புடிச்சி ஜெயில்ல போடலாமே என்று கேட்க, அதற்கு அருண் நான் அப்போ சஸ்பென்ஷன்ல இருந்தேன் அதனாலதான் எதுவும் பண்ண முடியல. ஆனா இப்போ என்கிட்ட மாட்டுனா அவ்வளவு தான் என்று கோபமாக சொல்கிறார். அதைத்தொடர்ந்து டான்ஸ் கிளாஸில் விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது எல்லோரும் நல்லா டான்ஸ் ஆடுறீங்க என்று எல்லாரையும் பாராட்டிவிட்டு தான் டயட் இருக்கும் விஷயத்தை சொல்கிறார். எங்க வீட்டுல இருக்குற பூக்காரி எனக்கு சமைச்சு தரப் போறா என்று சொல்ல, அதை கேட்டு சிந்தாமணி பூக்காரியா அது யாரு என்று கேட்க அதற்கு பார்வதி அவள் மருமகளை தான் சொல்லுறா அவ மருமக ஏழை என்பதனால் அவளுக்கு பிடிக்காது என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதற்கு விஜயா அவ ஏழை என்பதால் இல்ல எனக்கு அவளோட திமிரு தான் பிடிக்காது. அவ திமிரா பேசுற என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனா சமையல் செய்து விஜயாவுக்கு கொண்டு வர அங்கு சிந்தாமணி நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு சிந்தாமணி வேணும்னே மீனாவே அவமானப்படுத்துவது போல விஜயாவிடம் பேசுகிறார்.

எனக்கு ஏற்கனவே உங்க மருமகளை தெரியும்‌ என்னோட பிசினஸ் எதிரி என்று சொல்ல, அதற்கு மீனா பிசினஸ் எதிரி என்று சொல்லாதீங்க நான் யாருக்கும் எதிரி கிடையாது பிசினஸ் போட்டி என்று சொல்லுங்கள் என்று சொல்ல, அதற்கு விஜயா நீ எல்லாம் இவங்களுக்கு போட்டியா? அவங்களுடைய வயசு எக்ஸ்பீரியன்ஸ் தெரியுமா?

அவங்க எவ்வளவு பெரிய ஆளு? நீ எல்லாம் அவங்களுக்கு போட்டியா வந்துருவியா? என்று அவமானப்படுத்தி பேசுகிறார். விஜயா பேசுவதை கேட்டு மீனா அதிர்ச்சியில் நிற்கிறார். அதை கேட்டு சிந்தாமணி சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+