சிறகடிக்க ஆசை: மீனா போனில் முத்து பார்த்த விஷயம்.. பஞ்சாயத்து தொடங்கியது, ரோகிணிக்கு தெரிந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 25ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவின் போனில் சீதா மற்றும் அருண் திருமண புகைப்படங்களை மீனா பார்த்துக் கொண்டிருக்கும் போது முத்து வந்து விடுகிறார். அதே நேரத்தில் ரோகிணிக்கு அடுத்த பிரச்சனையும் வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனாவின் அம்மா வசிக்கும் வீட்டின் ஹவுஸ் ஓனர் முத்துவிடம் இப்ப இருக்கிற பொண்ணுங்க எல்லாம் குடும்பத்தை எதிர்த்து காதலிக்கிறவங்களை கல்யாணம் பண்ணிக்கிறாங்க என்று சொல்ல, அதற்கு யார் எப்படியோ அது எனக்கு தெரியாது ஆனால் சீதா நான் சொல்லுற பையனை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்லி சீதாவை கூப்பிட்டு மாமா சொல்லுற பையனை தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லு சீதாவிடம் முத்து சொல்ல, சீதா எதுவும் சொல்ல முடியாமல் அழுதுவிட்டு அங்கிருந்து போய் விடுகிறார்.

அதை பார்த்த மீனா முத்துவிடம் இந்த நேரத்தில் இது என்ன தேவை இல்லாத பேச்சு இதை விடுங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு சீதாவிடம் வந்து மீனா ஆறுதல் சொல்கிறார். மறுபக்கத்தில் ரோகிணி சிட்டியிடம் சென்று நடந்த விஷயங்களை சொல்லி பணத்தை கேட்கிறார். நான் பிரச்சனையை தீர்த்து வைக்க தான் உன்னிடம் இருந்து நகை வாங்கிட்டு போனேன் ஆனால் அதனால எனக்கு இன்னும் அதிகபட்சம் ஆயிடுச்சு. நீ திருட்டு நகையை என்கிட்ட கொடுத்து இருக்க, என் மாமியார் என்கிட்ட ஒரு லட்சம் பணம் கேட்கிறார்கள் தயவுசெய்து அந்த பணத்தை கொடுத்து விடு என்று சொல்கிறார்.
அதற்கு சிட்டி நகையை எடுத்துட்டு வந்தா பணத்தை கொடுக்கிறேன் என்று சொல்ல, அந்த நகையோட சொந்தக்காரங்க கிட்ட போயிடுச்சி என்று சொல்ல, அப்போ எனக்கு ஒரு லட்சம் நஷ்டம் ஆகும் அதனால என்னால் பணம் கொடுக்க முடியாது என்று சிட்டி சொல்லிவிடுகிறார். இதனால் உன்னை நம்பி வந்தது என்னுடைய தப்புதான் என்று கோபமாக திட்டி விட்டு அங்கிருந்து போகிறார். பிறகு வெளியே வந்ததும் சிறிது நேரம் யோசித்து விட்டு முருகனிடம் போன் செய்து ஒரு லட்சம் பணம் கேட்கிறார். அவர் நான் கொஞ்சம் வெளியே வந்திருக்கிறேன் என்று சொல்லி போனை வைத்து விடுகிறார்.
மறுபக்கத்தில் மீனா போனில் இருக்கும் அருண் மற்றும் சீதா திருமண புகைப்படங்களை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து வந்து தண்ணி கேட்கிறார். போனை வைத்துவிட்டு தண்ணீர் எடுப்பதற்காக மீனா போயிருக்கும் நேரத்தில் முத்து சீதாவின் ஃபோனை எடுக்க உடனே வேகமாக வந்த மீனா போனை பிடிங்கி விடுகிறார். எதுக்கு அடுத்தவங்க போனை எடுத்து பார்க்கிறீங்க என்று மீனா கோபப்பட, அதற்கு முத்து ஏதாவது தப்பு பண்ணுனா தான் கோபப்படுவார்கள் நீ எதுக்கு பயப்படுற என்று கேட்க, அப்போ என் மேல சந்தேகப்படுகிறீர்களா? என்று மீனா கோபப்படுகிறார்.
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லிவிட்டு முத்து படுத்து விடுகிறார். பிறகு சிறிது நேரம் கழித்து முத்துவும் மீனாவும் சீதாவின் திருமணம் குறித்து எழுந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வழக்கம் பல முத்துவிடம் அருணுக்கு சீதாவை கல்யாணம் பண்ணி வைப்பது பற்றி மீனா பேச அதற்கு முத்து முடியாது என்று சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்க, அதனால் கோபமான மீண்டும் படுத்து விடுகிறார்.
மறுபக்கத்தில் சீதாவும் அருணும் தங்களுக்கு நடந்த திருமணத்தை நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பிறகு அருண் போனில் பாட்டு வைத்துவிட்டு சந்தோஷத்தில் தூங்க முடியாமல் இருக்கிறார். அதேபோல மீனாவும் வெட்கப்பட்டு சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் ரோகிணி கட்டிலில் வந்த உட்கார மனோஜ் என்ன பண்ணுற என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி என்ன ஆச்சு என்று கேட்க, அம்மா நீ பணத்தை கொடுத்த பிறகுதான் மேல வந்து படுக்கணும்னு சொல்லி இருக்காங்க.
அது வரைக்கும் கட்டிலில் படுக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல, எது கேட்டாலும் அம்மா அம்மா என்று சொல்லாதே மனோஜ். பெட்ரூமில் என்ன நடந்தாலும் கூட உங்க அம்மா தான் முடிவு பண்ணுவாங்களா? நான் ஒன்னும் தெரிஞ்சு அந்த நகையை வாங்கிட்டு வந்து கொடுக்கல. அந்த நகையை கொடுத்தா சந்தோஷப்படுவாங்கன்னு தான் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். அதை திருட்டு நகைனு எனக்கு எப்படி தெரியும் என்று ரோகிணி கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications