சிறகடிக்க ஆசை: மீனா பிளானை கண்டுபிடித்த ஸ்ருதி.. கோபத்தில் கொந்தளித்த விஜயா.. முத்துவுக்கு தெரிந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயா ரோகினியிடம் கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார். அதோடு ரோகிணியிடம் இருந்து மனோஜை பிரித்து கூட்டிக்கொண்டு போகிறார். அதுபோல முத்துவுக்கு சில உண்மைகள் தெரிய வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா தண்ணீர் எடுக்க வரும்போது ரோகிணி கட்டிலில் உட்கார்ந்திருக்க, மனோஜ் தரையில் அமர்ந்து இருப்பதை பார்த்து விடுகிறார். உடனே ரூமுக்குள் வந்து இவ பெரிய கோடிஸ்வரின்னு சொல்லி எல்லாம் என்னை ஏமாத்திட்டு இப்ப திருட்டு நகை கொண்டு வந்து கொடுக்கிற, நீ இங்க ராணி மாதிரி கட்டிலில் உக்காந்திருக்க என் பையன் கீழே உட்கார்ந்து இருக்கணுமா? என்று கோபப்பட ரோகிணி சமாளிக்க பார்க்கிறார்.

அதிர்ச்சியில் ரோகிணி
ஆனாலும் விஜயா கேட்காமல் மனோஜை தன்னுடைய அறையில் படுக்குமாறு கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சி ஆகி அழுது கொண்டிருக்கிறார். அதை அடுத்து ஸ்ருதி ரவியிடம் ரெஸ்டாரண்டுக்கான கலர் செலக்ட் பண்ண சொல்ல, அதற்கு ரவி எனக்கு இதில் விருப்பமில்லை என்று சொல்லிவிடுகிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் வந்து சண்டை வருகிறது.
முத்துவின் முடிவு
பிறகு இருவரும் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது இருவரும் ஒரே போல சைகை செய்வதை வைத்து ஒரே பாட்டை இருவரும் கேட்பது தெரிந்ததும் ஸ்ருதியும் ரவியும் சமாதானம் ஆகின்றனர். அடுத்ததாக முத்து சீதாவுக்காக மாப்பிள்ளை பார்க்க ஜோதிடரிடம் போய் கேட்கிறார். அப்போது முத்துவுடன் செல்வமும் கூட வந்திருக்கிறார். அவர் உனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லையே இப்ப என்ன இங்க வந்து நிற்கிற என்று கேட்க, சீதாவின் வாழ்க்கைக்காக நான் பார்த்து பார்த்து எல்லாமே பண்ணிட்டு இருக்கிறேன் என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கோபத்தில் முத்து
ஜோதிடர் சீதா என்ற வரனுக்கு அம்சமான ஒரு ஜாதகம் வந்து இருக்கிறது என்று சொன்னதும் முத்து சந்தோஷமாகி டீடெயில்ஸ் விசாரித்துக் கொண்டிருக்கும் போது அருண் ஜாதகத்தை ஜோதிடர் சொல்கிறார். அந்த நேரத்தில் அருணுடைய அம்மாவும் அங்கு வந்து நிற்க இதனால் கோபமாகும் முத்து இந்த கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். பிறகு ஜோதிடர் அருணுடைய அம்மாவிடம் ஏன் இவர் இப்படி சொல்லுறாரு என்று கேட்க அதற்கு அருண் அம்மா இவங்க வீட்டு பொண்ணை தான் என்னுடைய பையன் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டான் ஆனால் இவருக்கும் என் பையனுக்கும் பிடிக்கல அதனால் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லாமல் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மிரட்டும் விஜயா
இதை அடுத்து ரவி ரெஸ்டாரன்ட் கலர் செலக்ட் பண்ணாதது குறித்து மீனாவிடம் ஸ்ருதி சொல்கிறார். உடனே மீனா இதற்கு ஏதாவது வழி செய்யலாம் என்று ரவி சாப்பிட வரும்போது அவரிடம் அவருக்கு பிடித்த கலர் என்ன என்பது பற்றி நைசாக பேசி தெரிந்து கொள்கிறார். பிறகு விஜயா ரோகிணியிடம் ஒரு லட்சம் பணத்தை எப்போ தரப்போற என்று மிரட்டுகிறார். அதற்கு ரோகிணி இந்த வாரத்துக்குள்ள பணம் வந்துரும் தருகிறேன் என்று சொல்கிறார்.












Click it and Unblock the Notifications