சிறகடிக்க ஆசை: ரோகிணி மாட்டியும், எதிர்பாராத சம்பவம்.. முத்து எடுத்த முடிவு! கடைசியில் இப்படி ஆகிடுச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 29ஆம் தேதிக்கான எபிசோடில் குடித்துவிட்டு ரகளை செய்த மனோஜை பார்த்து அண்ணாமலை விபரீத முடிவு எடுக்கிறார். அதே நேரத்தில் சீதாவிடம் போலீஸ்காரர் அருண் பேசும்போது எதிர்பாராத சம்பவம் நடக்கிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் என் தம்பி யார் தெரியுமா? அவன் வந்தான்னா இங்க நடக்கிறதே வேற என்று பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அங்கு அண்ணாமலையும் முத்துவும் வருகிறார்கள். அப்போது டிராபிக் போலீஸ் அருணிடம் முத்து என் மேல இருக்கிற கோபத்தை என் அண்ணன் கிட்ட காட்டிட்டு இருக்கியா என்று கேட்க, அதற்கு அருண் இவன் உன் அண்ணனு இப்பதான் தெரியும் என்று சொல்கிறார்.

அண்ணாமலை வருத்தம்
அதோட அண்ணாமலையிடம் நீ ரவுடியாகவும், குடிகாரனாகவும் இப்படித்தான் பசங்கள வளர்ப்பீங்களா என்று அண்ணாமலையை கேட்க அண்ணாமலை எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். அதற்கு முத்து அவனை விட்டுடு என்று சொல்ல, அதெல்லாம் முடியாது கேஸ் பைல் பண்ணியாச்சு கோர்ட்டில் வந்து பார்த்துக்கோங்க என்று அருண் உட்கார்ந்து விடுகிறார்.
அருண் செய்த செயல்
அப்போது அண்ணாமலை முத்துவிடம் நீ கொஞ்ச நேரம் வெளியே இரு முத்து என்று சொல்லி அனுப்பிவிட்டு அருணிடம் ஏதோ தெரியாம பண்ணிட்டான். குடும்பத்தில் இருக்கிற பிரச்சினையால் இப்படி குடிச்சிட்டான். இல்லன்னா அவன் குடிக்கிற ஆள் கிடையாது என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறார். அதற்கு அருண் எஸ்ஐ வருவாங்க அவங்க கிட்ட பேசிக்கோங்க என்று சொல்கிறார்.
போலீஸின் பெருந்தன்மை
அந்த நேரத்தில் எஸ்ஐ வந்தவுடன் அண்ணாமலை நடந்த விஷயத்தை சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்க, அவர் அருணை கூப்பிட்டு ஏதோ குடிச்சிட்டு தப்பா பேசிட்டான் ஒரு அப்பாவோட பாசம் அவருடைய கண்ணுல தெரியுது அவரை அனுப்பிவிடு என்று மனோஜ் சட்டையை கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். அண்ணாமலை மனோஜ் நிலைமையை பார்த்து வருத்தத்தில் இருக்கிறார்.
மனோஜ் செய்த அலப்பறை
எல்லோரும் காரில் வீட்டில் போய் இறங்கியதும் வீட்டிற்கு வந்த மனோஜ் ரோகிணி என்னை ஏமாத்திட்டா, என் பொண்டாட்டி பொய் சொல்லிட்டா என்று புலம்பிக் கொண்டே இருக்க முத்து அவரை ரூமில் படுக்க வைக்கிறார். அண்ணாமலை உடைந்து போய் உட்கார்ந்து இருக்கிறார். நான் கஷ்டப்பட்டு மூன்று பேரையும் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்னு நினைச்சேன் ஆனா நான் வளர்த்தது தான் தப்பு என்று கண் கலங்கி கொண்டிருக்கிறார்.
அண்ணாமலை எடுத்த முடிவு
எனக்கு நிம்மதியே இல்ல ஒரேயடியாக கண்ணை மூடுனா தான் நிம்மதியா இருக்கும் என்று ஃபீல் பண்ணி பேச, முத்து அவருக்கு சமாதானம் சொல்கிறார். அப்போது அண்ணாமலை இதையெல்லாம் சரி செய்யனும்னா நான் போய் அம்மாவை கூட்டிட்டு வரேன் என்று கிளம்ப, நானும் இதே முடிவு தான் எடுத்திருந்தேன் நானும் வரேன் என்று சொல்ல, வேண்டாம் என்று சொல்லிவிட்டு நான் பஸ்ஸிலேயே போறேன் என அண்ணாமலை சொல்கிறார்.
அருண் கேட்ட கேள்வி
மறுபக்கத்தில் அருண் பைக்கில் போக அப்போது சீதா பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கிறார். கொஞ்ச தூரம் சென்று பைக்கை நிறுத்திவிட்டு சீதாவிற்கு ஃபோன் பண்ணி பேசுகிறார். அப்போது நான் இன்னும் எவ்வளவு நாள் தான் வெயிட் பண்றது? என்ன புடிச்சிருக்கா இல்லையா? என் மேல உனக்கு காதல் இருக்கா இல்லையா? என்று கேட்க அதற்கு சீதா இப்போதைக்கு என்னுடைய குடும்பம் என்ன நம்பி தான் இருக்கிறது என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சீதா எடுத்த முடிவு
அதற்கு அருண் நான் இப்போ பக்கத்தில் வந்து வண்டியை நிறுத்துவேன் வண்டியில் ஏறினால் லவ் சம்மதம்னு எடுத்துக்குறேன் இல்லன்னா.. என்று போனை வைத்துவிட்டு சீதா பக்கத்தில் வண்டியை வந்து நிறுத்துகிறார். அந்த நேரத்தில் சீதா பக்கத்தில் இருக்கும் ஒரு நபர் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் உனக்கு புடிச்சிருக்கு என்றால் தைரியமாக காதலை சொல்லிடுமா, எல்லாருக்கும் நல்லபடியா காதல் அமையாது இன்னொரு பெண்ணுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். அதை கேட்டு சீதா யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications