சிறகடிக்க ஆசை: விஜயா சொன்ன வார்த்தை.. மனம் மாறும் அருண்.. முத்துவின் திமிர்.. சீதா எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 29ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி வாங்கி கொடுத்த நகை பற்றி விஜயா பார்வதியிடம் பேசுகிறார். அதே நேரத்தில் முத்துவிற்கு அருணுக்கும் மீண்டும் பிரச்சனை வெடிக்கிறது. இதனால் சீதா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் கார் செட்டில் முதல் செல்வத்திடம் சீதா காதலிக்கும் விஷயத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார். அதோடு அந்த அருணுக்கு நான் சீதாவை கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டேன். அவன் என்னை பழி வாங்கணும்னு நினைச்சுட்டு இருக்கிறேன் அதோடு நான் என்ற திமிரு அவனுக்கு அதிகமா இருக்கு இப்படிப்பட்டவனுக்கு எப்படி சீதாவை கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும்? நான் வேற நல்ல இடமா பார்த்து சீதாவுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

Siragadikka aasai serial vijay tv

வீம்பு பண்ணும் முத்து

மறுபக்கத்தில் முத்து காரில் வந்து கொண்டிருக்கும் போது எதிரில் அருணும் பைக்கில் வருகிறார். இருவரும் நேருக்கு நேர் நிற்க அருண் முத்துவை பின்னால் போக சொல்கிறார். முத்து என்னால் போக முடியாது நீ தான் போகணும் என்று முறைத்துக் கொண்டு நிற்க, கொஞ்ச நேரத்தில் முத்துவின் கார் பின்னால் டிராபிக் ஆகி விடுகிறது. அருண் என்ன நடந்தாலும் நான் போக மாட்டேன் என்று நின்று கொண்டிருக்கிறார். முத்துவும் காரை எடுக்க மாட்டேன் என்று வீம்பு பிடித்துக் கொண்டிருக்கிறார்.

மனம் மாறும் அருண்

அந்த நேரத்தில் அங்கிருந்தவர்கள் எல்லோரும் திட்டி கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஆட்டோவில் அந்த பக்கமாக சீதா வருகிறார். சீதா என்ன நடக்குது என்று இறங்கி பார்க்கும்போது அருண் சீதாவை பார்த்ததும் காருக்கு வழி விட்டு விலகி நிற்கிறார். அப்போது முத்துவும் காரை எடுத்து தனியாக ஒதுக்கி சீதாவிடம் பார்த்தியா இப்படித்தான் நாம முடிவில் உறுதியாய் இருந்தா எதிரில் நிற்கிறவன் ஒதுங்கிப் போவான் என்று சொல்கிறார்.

மீனாவின் அம்மா முடிவு

அடுத்ததாக மீனா தன்னுடைய அம்மாவிடம் சீதாவின் கல்யாணம் பற்றி பேச, அதற்கு அந்த அருமை கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. அப்படி கல்யாணம் பண்ணி வச்சா உன் கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் சீதா கேட்டுக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் விஜயா டான்ஸ் கிளாஸில் இருக்கும்போது அங்கு சிந்தாமணி வருகிறார்.

விஜயாவின் பிளான்

தன்னுடைய பிறந்தநாள் பங்க்ஷன்க்கு நீங்க கண்டிப்பா வரணும் என்று சிந்தாமணி விஜயாவை கூப்பிடுகிறார். முதலில் நீங்கள் எதற்காக இங்கு வந்தீங்க என்று கோபப்படும் விஜயா, சிந்தாமணி ஐஸ் வைத்து பேசியதால் உருகி விடுகிறார். பிறகு சிந்தாமணி போன பிறகு தனக்காக ரோகிணி வாங்கி கொடுத்த நகையை பார்வதியிடம் காட்டுகிறார். என்னை சமாதானப்படுத்துவதற்காக ரோகினி இப்படி நகை வாங்கிட்டு வந்திருக்கிறார் ஆனால் இது கூட நல்ல விஷயம் தான் இனி இப்படியே அவளை மிரட்டி வைக்கணும் என்று தன்னுடைய பிளானை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சீதா எடுத்த முடிவு

கடைசியாக சீதா அருணை சந்தித்து நம்முடைய கல்யாணம் நடக்காது எனக்கு என்னுடைய குடும்பத்தில் நிம்மதி முக்கியம். மாமாவுக்கும் உங்களுக்கும் பிரச்சனை மேல பிரச்சனை வந்துட்டு இருக்கு. எனக்கு என்னுடைய மாமா சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+