சிறகடிக்க ஆசை: பிஏ விஷயத்திலும் முத்துவிடம் மாட்டும் ரோகிணி? அருண் போட்ட கண்டிஷன்.. மகிழ்ச்சியில் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை இரண்டாம் தேதிக்கான எபிசோடில் சீதா மற்றும் அருண் கல்யாணத்திற்கு சம்மதித்ததால் அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். அதே நேரத்தில் அருள் உன்ன கல்யாணத்திற்கு சில கண்டிஷன் போட்டு இருக்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து சீதா அருண் கல்யாணத்திற்கு சம்மதித்ததற்காக குடும்பத்தினர் எல்லாரும் இப்பதான் நீ நல்ல முடிவு எடுத்து இருக்க என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இவன் இன்னும் கொஞ்சம் லேட்டா சொல்லி இருந்தா அவங்க ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணி இருப்பாங்க என்று விஜயா சொல்ல, அது உங்க மூத்த பையன் ஓடுகாளி பண்ற வேலை. சீதா அப்படி பண்ண மாட்டா என்று சொன்னதும் மீனாவின் முகம் மாறுகிறது.

பிறகு நீங்களும் நாளைக்கு வருவீங்களா என்று மீனா கேட்க, எனக்கு அந்த அருணை பிடிக்கலன்னாலும் உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு அதனால வந்து தானே ஆகணும் என்று சொல்கிறார். பிறகு மீனா அண்ணாமலையை கூப்பிடுகிறார். அவர் கண்டிப்பாக வரேன் என்று சொல்ல, விஜயாவை கூப்பிட அவர் வரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார். மறுபக்கத்தில் ரோகிணி ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது மனோஜ் போன் போட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல நான் ஷோரூம் வந்து விடுவேன் என்று சொல்கிறார்.
உடனே ரோகிணி முருகனை சந்தித்து ஒரு லட்சம் பணத்தை கொடுத்து விட்டு வித்யா பற்றி கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு முருகன் பிரண்ட்ஸ்குள்ள சண்டை வருவது இயல்புதான் உங்களுக்குள் எல்லாம் சீக்கிரமா சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு போகிறார். அந்த நேரத்தில் அங்கு வந்து பிஏ நிற்க ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இப்ப எதுக்கு நீ வந்த என்று கேட்க, நீ ரொம்ப பெரிய ஆளுதான் கல்யாணி என்ன கொலை பண்றதுக்கு ஆல்ரெடி பண்றியா? உன் கிட்ட கொஞ்சம் கொஞ்சமா கேட்டு போர் அடிக்குது லைஃப் டைம் செட்டில்மெண்ட் எனக்கு 10 லட்சம் கொடுத்துடு என்று சொன்னதும், அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்? என்று ரோகிணி கேட்க, நீ கொடுக்கலன்னா உன் கொழுந்தனாரு முத்துக்கு போன் பண்ணுவேன் அவன் நம்பரும் என்கிட்ட இருக்கு என்று சொல்லிவிட்டு போகிறார்.
மறுநாள் காலையில் சீதாவைப் பெண் பார்க்க அருண் மற்றும் அவருடைய அம்மா வீட்டிற்கு வருகின்றனர். அப்போது அண்ணாமலை மீனா குடும்பத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கும்போதே எங்களால் 10 சவரன் நகை தான் போட முடியும். கல்யாண வேலையை பார்த்துக்கிறோம் என்று சொல்லிவிட்டு இருக்கிறார். அதோடு நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க என்று அண்ணாமலை கேட்க, அதற்கு அருண் அம்மா சீதா எங்க வீட்டுக்கு வர போற மகாலட்சுமி அது தவிர எங்களுக்கு வேற என்ன வேண்டும் என்று சொல்கிறார்.
அருணிடம் எதிர்பார்ப்பு பற்றி கேட்க, அதற்கு அவர் சீதா தவிர எனக்கு வேறு எதுவும் வேண்டாம். ஆனால் ஒரு ரெக்வஸ்ட் இருக்கு அதாவது இந்த கல்யாணம் எப்பவோ நடந்து இருக்க வேண்டியது. சில சூழ்நிலையால் இவ்வளவு நாள் தள்ளி போயிட்டது. நான் போலீஸ் வேலை பார்க்கிறேன் என்னுடைய கல்யாணத்தில் பல போலீஸ் ஆபீசர்ஸ் வருவாங்க அதனால யாரும் குடிக்க கூடாது என்று சொல்ல, அதற்கு முத்து நாம ஒவ்வொரு வீட்டுக்கும் பத்திரிக்கை வைக்க போகும் போது யாரும் குடிக்க கூடாதுன்னு சொல்லிட்டா வர முடியும்? என்று நக்கல் செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications