சிறகடிக்க ஆசையில் இன்று நடந்த அதிசயம்.. இது பலருக்கு பாடம்! ரோகிணிக்கு கிடைத்த அவமானம்! சபாஷ் ஸ்ருதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 4ஆம் தேதிக்கான எபிசோடில் ரவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்த ஸ்ருதிக்கு முத்துவும் மீனாவும் சரியான அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். அதோடு சின்ன சின்ன விஷயங்களுக்கும் விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கும் பலருக்கும் இன்றைய எபிசோடு பாடமாக அமைந்தது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் ஸ்ருதியை கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால் ஸ்ருதி நான் ரவியை விவாகரத்து செய்யப் போறேன் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று முத்துவும் மீனாவும் கேட்க, ரவி நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டு ஹோட்டலில் அந்த நீத்துவை தூக்கி சுத்தி விளையாடிட்டு இருக்கிறான்.

நான் தான் அவன் மீது உயிராய் இருக்கிறேனே தவிர அவனுக்கு என் மீது பாசம் இல்ல என்று சொல்ல அதைக் கேட்டு முத்துவும் மீனாவும் சிரிக்கிறார்கள். அதோடு அங்கு என்ன நடந்தது என்று ரவியிடம் விசாரிச்சீங்களா என்று மீனா கேட்க, அதற்கு ஸ்ருதி இல்லை நீத்துவை ரவி தூக்கி வைத்திருப்பதை பார்த்ததும் கோபத்தில் அங்கிருந்து வந்து விட்டேன் என்று சொல்ல, அதற்கு முத்து இதுதான் நீ பண்ணுன தப்பு,
ரவி அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சுருக்கிறான். கீழே விழுந்து காலில் அடிபட்டதில் அந்த பொண்ணால் நடக்க முடியாமல் இருந்திருக்கு. ஒரு பொண்ணுக்கு உதவி செஞ்சிருக்கிறான். அதனை புரிஞ்சுக்காம நீ கோபப்பட்டு வந்திருக்க என்று சொல்கிறார். அதோடு எங்க வீட்டில் நான் இதுவரைக்கும் எத்தனையோ பிரச்சனை செய்திருக்கிறேன். குடிச்சிட்டு வந்து அப்பாவை கஷ்டப்படுத்தி இருக்கிறேன்.
அதுபோல மனோஜால் பல பிரச்சனை வந்திருக்கு. ஆனால் ரவி இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் செய்தது கிடையாது. அப்பா அம்மா பேச்சை மீறி நடந்தது கிடையாது. ஆனால் அவன் செஞ்ச ஒரே தப்பு உன்னை காதலிச்சு வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணது தான். இதுவரைக்கும் எந்த தப்பும் செய்யாமல் இருந்த ரவி உனக்காகத்தான் குடும்பத்தில் எல்லாரையும் எதிர்த்து உன்னை திருமணம் செஞ்சுக்கிட்டான்.
சீரியல் டீச்சரையே நிஜத்தில் திருமணம் செய்த விஜய் டிவி நடிகர்.. மணப்பெண் கூட இந்த சன் டிவி நடிகை தான்
அப்போ உன் மேல அவனுக்கு எவ்வளவு பாசம் இருக்கும்? அவன் எப்படி உன்னை கஷ்டப்படுத்தி இன்னொரு பொண்ணு மீது பாசத்தை காட்டுவான்? அங்கே என்ன நடந்தது என்று நீ ரவியிடம் பேசி இருக்கணும் என்று எடுத்து சொல்கின்றனர். அதைக் கேட்டு ஸ்ருதி ஆமா நான் தான் தப்பு பண்ணிட்டேன் ரவிக்கு என் மேல ரொம்ப பாசம் உண்டு. அதை நான் சரியா புரிஞ்சுக்கல. ரவி என்கிட்ட பேசி இருக்கலாமே என்று சொல்ல, அதற்கு மீனா நீங்க தான் ரவியோட போனை எடுக்காமல் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கீங்களே அவர் எப்படி அவர் தரப்பு நியாயத்தை சொல்லுவாரு என்று கேள்வி கேட்கிறார்.
புது படத்தில் பிக் பாஸ் ஜனனிக்கு ஜோடியாகும் ஜீ தமிழ் சீரியல் ஹீரோ.. இவர் அந்த சீரியல் நடிகையின் கணவர்!
பிறகு ஸ்ருதி தான் செய்த தப்பை உணர்ந்து பங்க்சனுக்கு போக ரெடியாகிறார். உடனே முத்துவும் மீனாவும் நாங்க ரவிக்கு நீ கிடைத்த விஷயத்த சொல்லுறோம் என்று சொல்கின்றனர். அதற்கு ஸ்ருதி, வேண்டாம் அவனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் பிரஷர் கொடுத்து ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று சொல்லிவிடுகிறார். மறுபக்கத்தில் குடும்பத்தினர் எல்லோரும் ரவியிடம் ஸ்ருதி இன்னும் வரலையே என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதோடு உங்கள் இருவருக்கும் ஏதேனும் சண்டையா என்று ஸ்ருதியின் பெற்றோர், விஜயா, அண்ணாமலை என எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஸ்ருதி மணப்பெண் போல உடை அணிந்து மண்டபத்திற்குள் வருகிறார். அவரைப் பார்த்ததும் எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.
அப்போது ஸ்ருதி என்னுடைய காஸ்ட்யூம் வருவதற்கு லேட் ஆகிவிட்டது. அதனால் தான் என்னால் சீக்கிரமா வர முடியல சாரி என்று எல்லாரிடமும் மன்னிப்பு கேட்கிறார். பிறகு ஸ்ருதியும் ரவியும் ஒன்றாக கேக் வெட்டுகிறார்கள். அதற்கு பிறகு இருவரும் தங்களுடைய காதல், திருமண வாழ்க்கை விஷயங்களை அங்கிருக்கும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதோடு தனக்கு ஸ்ருதி கிடைத்ததற்கு முக்கிய காரணம் மீனா அண்ணி தான் என்று ரவி பாராட்டுகிறார். அதுபோல ஸ்ருதியும் நான் தனியா குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் இப்போ இந்த குடும்பத்தில் என்னை எல்லோரும் ஏற்றுக் கொண்டு என் மீது ரொம்ப பாசம் வைக்கிறாங்க. எனக்கு இந்த குடும்பத்தில் ஒரு சகோதரி கிடைத்திருக்காங்க, அது மீனாதான்.
அவங்க என்னுடைய கூட பிறந்த சகோதரியாகத்தான் நான் பார்க்கிறேன். அவர்கள எனக்கு பல விஷயத்தை கைடு பண்ணுறாங்க. இந்த குடும்ப வாழ்க்கையில் எப்படி இருக்கணும் என்று அவங்க சொல்லித்தான் எனக்கே தெரிகிறது என்று சொல்லிக் கொண்டு இருக்க, அதை கேட்டு விஜயா, ரோகிணியின் முகம் மாறுகின்றனர்.
வந்திருக்கும் விருந்தினர்கள் முன்பு அண்ணாமலை குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் ஸ்ருதி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவருடைய பெற்றோர் கோபப்படுகின்றனர். அப்போது ரவி ஸ்ருதி தான் இந்த பங்க்ஷனை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டது. ஸ்ருதிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக ஒரு விஷயம் அரேஞ்ச் பண்ணி இருக்கிறேன் என்று சொல்கிறார்.
பிறகு சிறிது நேரத்தில் அங்கு ஒரு பாடகர் வந்து பாட்டு பாடி அசத்துகிறார். அப்போது முத்துவும் மீனாவும் தங்களுக்குள் இருக்கும் காதலை கண்களால் பரிமாறிக் கொள்கிறார்கள். அதுபோல ரவியும் ஸ்ருதியும் தங்களுடைய காதலை பரிமாறுகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications