சிறகடிக்க ஆசை: சீதா விஷயத்தில் மனோஜ் சொன்ன வார்த்தை.. விழுந்த அடி.. ரோகிணிக்கு வரும் அடுத்த சிக்கல்.. பாவம் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் நான்காம் தேதிக்கான எபிசோடில் முத்து குடித்துவிட்டு வீட்டில் வந்து அலப்பறை செய்கிறார். அதே நேரத்தில் விஜயா மீது தனக்கு இருக்கும் பாசத்தையும் காட்டுகிறார். அதுபோல சீதா திருமண விஷயத்தில் மனோஜ் சொன்ன வார்த்தையால் முத்து அவரை அடித்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் ரோகிணி பார்ட்டிக்கு போவதாக கிளம்ப, எங்க போற என்று மனோஜ் கேட்டதும் நான் எங்க போனா உனக்கு என்ன? எதுக்காக கேட்கிற என்று ரோகிணி கேட்டதும், அம்மா கேட்டா சொல்லணுமே என்று மனோஜ் சமாளிக்கிறார். அதற்கு நீ ரொம்ப அம்மா பையனா இருக்காத என்று சொல்லிவிட்டு ரோகிணி கிளம்புகிறார். அதோடு நான் எங்கே போறேன் என்பது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மனோஜுக்கு சந்தேகம்
ரோகிணி ஏற்கனவே பெரிய பணக்காரி என்று ஏமாத்தி இருக்குறா. அது போல இப்போ கூட எதுவும் ஏமாத்துறாளோ இதை கண்டுபிடிக்கணும் என்று மனோஜ் பிளான் போடுகிறார். பிறந்தநாள் பங்க்ஷன் என்றால் எப்படியும் கேக் வாங்குவா... அப்போ அதை கண்டுபிடிக்கணும் என்று ரோகிணியை மனோஜ் ஃபாலோ செய்கிறார். ரோகிணியும் ஒரு கடையில் கேக் வாங்கி கொண்டு கிளம்புகிறார். அவர் போனதும் மனோஜ் அந்த கடைக்கு வந்து ரோகிணி கேக்கில் போடப்பட்ட பெயர் என்ன என்பதை தெரிந்து கொள்ள பிளான் போட்டு கடைசியில் அது மகேஷ் என்று தெரிந்ததும் மனோஜ் அதிர்ச்சி ஆகிறார்.
முத்துவின் அட்ராசிட்டி
மறுபக்கத்தில் முத்து வீட்டிற்கு குடித்து விட்டு வர, அதைப் பார்த்து விஜயா கடுப்பாகி மறுபடியும் ஆரம்பிச்சுட்டானா? என்று திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் முத்து அம்மா மீது தனக்கு இருக்கும் பாசத்தை எல்லாம் சொல்லி புலம்புகிறார். அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாகுகிறார். ஆனாலும் தன்னுடைய கெத்து குறையாமல் திமிராகவே பேசிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து முத்து அம்மா பற்றியே பேசிக்கொண்டு அவரை துரத்த ஒரு கட்டத்தில் விஜயாவின் மடியில் படுத்து கொள்கிறார்.
அதிர்ச்சியில் விஜயா
ஆனால் விஜயா ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்து விட்டு பிறகு எழுந்து செல்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை வர அவரிடம் முத்து செய்த அட்ராசிட்டி பற்றி விஜயா புலம்புகிறார். அவருக்கு முத்து குடித்திருப்பது தெரிகிறது. அவரிடமும் முத்து புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை ஏன்டா இப்படி குடிச்சு உடம்பை கெடுக்கிற என்று திட்டுகிறார். அதற்கு முத்து மீனாவை பார்த்து பொண்டாட்டி புருஷனோட பேச்சை கேக்காததால நான் குடிச்சேன் என்று சொல்கிறார்.
மனோஜுக்கு விழுந்த அடி
அப்போது மனோஜ், "முத்துவை பார்த்து அந்த காலத்து ஆட்கள் மாதிரி உனக்கும் பொண்டாட்டியோட தங்கச்சியை கல்யாணம் செய்கிற பிளான் இருக்கோ" என்று கேட்டதும் முத்து கோபமாகி மனோஜ் மூக்கில் குத்துகிறார். அதனால் மனோஜ் விழுந்து விடுகிறார். பிறகு காலையில் அண்ணாமலை முத்து திடீரென இப்படி எதற்காக குடித்தான் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனா உண்மையை சொல்ல வருகிறார். ஆனால் எதுவாக இருந்தாலும் உங்க குடும்ப விஷயம் அதில் நான் தலையிடக்கூடாது, அவனுக்கு நல்ல புத்தி மட்டும் சொல்லணும் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications