சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு அடுத்த ஆப்பு! கோபத்தில் விஜயா.. அதிர்ச்சியில் மனோஜ்! மாஸ் காட்டிய முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 4ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து எடுத்த முக்கிய முடிவால் விஜயா ரோகிணியின் அப்பாவிடம் 27 லட்சம் வாங்க வேண்டும் என்று தகராறு செய்கிறார். அதோடு ரோகிணியிடம் சிக்கிக்கொண்டு மனோஜ் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா ரோகிணி மற்றும் மனோஜை மன்னித்ததும் முத்து, ஜட்ஜ் அம்மா ஒரு தீர்ப்பு மட்டும் தப்பா சொல்லிட்டாங்க என்று சொல்கிறார். அதற்கு என்ன விஷயம் என்று மனோஜ் கேட்க, நீ ஒன்னும் உங்க மாமனார் கொடுத்த பணத்தில் ஷோரூம் ஆரம்பிக்கல. அப்பாவோட பணத்துல தான் ஆரம்பிச்சிருக்க.

Siragadikka aasai serial vijay tv

அப்போ அந்த கடைக்கு நீ எப்படி ஓனரா இருக்க முடியும் என்று கேட்டதும், விஜயா அதற்கு இப்ப என்ன பண்ணனும் அதுல உனக்கு காசு பங்கு வேணுமா என்று கேட்க, அதெல்லாம் எனக்கு தேவையில்லை என்று சொல்கிறார். உடனே ரவியிடம் உனக்கு பணம் வேணுமா என்று கேட்க, ஒரு ரவி வேண்டாம் என்று சொன்னதும் இது நீ மட்டும் முடிவு சொல்ல முடியாது பல குரல் கிட்ட கேட்டு முடிவு சொல்லு என்று சொல்ல அதற்கு ஸ்ருதியும் வேண்டாம் என்று சொல்கிறார்.

உடனே மனோஜிடம் எங்க ரெண்டு பேருக்கும் பணம் வேண்டாம் ஆனால் ஓனரை மாத்தணும் என்று சொல்ல, அதற்கு மனோஜ் அப்போ நீ ஓனராக போறியா என்று கேட்க, அதற்கு முத்து நான் தான் ரெண்டு காருக்கு ஓனரா இருக்கேன்னு இந்த ஷோரூம் அப்பா காசில் வாங்கியது அதனால் அப்பா தான் இனி ஓனர் என்று சொன்னதும் மனோஜ், ரோகிணி, விஜயா மூன்று பேரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதற்கு அண்ணாமலை இதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல, இப்படி பண்ணுனா தான் பா கரெக்டா இருக்கும் என்று ரவியும் சொல்கின்றார். அப்போது விஜயா அமைதியாக இருக்க, அம்மாவே அமைதியா இருக்காங்க அப்போ நான் சொல்றது தான் கரெக்ட் என்று முத்துவும் சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அடுத்ததாக ரோகிணியிடம் மனோஜ் மன்னிப்பு கேட்க, அதற்கு ரோகிணி உங்க அம்மா என்னை அவ்வளவு தூரம் அடிக்கும் போதும் திட்டும்போது நீ ஒரு வார்த்தை சொன்னியா? இல்ல அடிக்காதீங்கன்னு சொன்னியா? உனக்காக தானே நான் இவ்வளவும் பண்ணினேன். அந்த காசுல எனக்காக ஏதாவது பண்ணிக்கிட்டேன்னா? ஒரு போன் பண்றதுக்கு கூட உங்க அம்மா கிட்ட கேட்டு தான் எனக்கு பண்ணுற என்கிட்ட பேசாத என்று கோபத்தில் திட்டிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு மனோஜ் நீ மட்டும் இல்லாமல் என்னால் எதுவும் பண்ணிருக்க முடியாது என்று சொல்ல, அன்னைக்கு நானும் இதை தானே சொன்னேன்? அதற்கு நீ எனக்கு சப்போர்ட் பண்ணாம என் மீது கோபப்பட்டு இருந்த, இப்ப நீயே அதை சொல்லிட்டே. என்னால் தான் உனக்கு அந்த ஷோரூம் கிடைத்தது இப்போ முத்து அந்த ஷோரூமல் உன்னை ஓனர் பதவியில் இருந்து வேலைக்காரனா இறக்கிட்டான்.

உன்ன பார்த்து மீனா எப்படி கைதட்டி சிரிச்சா பார்த்தியா? இதுதான் உங்க வீட்ல உன்னுடைய நிலைமை. என்னிடம் பேசாதே என்று கோபத்தில் திட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் மீனாவும் முத்துவும் மொட்டை மாடியில் குச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது முத்து மனோஜ் போலவும், மீனா ரோகிணி போலவும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக மனோஜ் ரூமுக்கு போன விஜயா ரோகிணியிடம் இப்ப வந்த பிரச்சனை எல்லாத்துக்கும் காரணம் அந்த 27 லட்சம் தான். என்னிடம் இந்த விஷயத்தை நீ முன்னாடியே சொல்லி இருந்தா நான் உங்களை அவமானப்படாமல் மறைத்திருப்பேன்.

இப்பொழுது எனக்கும் அவமானம். இது போக வேண்டும் என்றால் உன் அப்பாகிட்ட சொல்லி அந்த காசை அனுப்ப சொல்லு என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார். இறுதியில் மாடியில் முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கும் போது ரோகிணியிடம் நிறைய ரகசியங்கள் இருக்கு. அது ஒன்னு ஒன்னா வெளியே வரும் என்று முத்து மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

பிறகு அடுத்த நாள் முத்து செல்வத்திடம் இரண்டு மாலைகள் வாங்கிட்டு வருமாறு சொல்கிறார். மேலும் இன்னைக்கு பதவி ஏற்பு விழா இருக்கு அதற்கு வா என்றும் கூப்பிடுகிறார். அப்போது அண்ணாமலை இது எல்லாம் வேண்டாம் என்று சொல்ல, மனோஜ் அடிக்கடி ஏமாற்றுகிறான் அதனால் தான் நீங்கள் இருந்தால் தான் சரியாக என்று சொன்னேன் என்று சொல்ல அண்ணாமலையும் முத்து சொல்வது சரி என்று விஜயாவிடம் சொல்லிவிட்டு ரெடியாகுகிறார்.

கேஸ் வெடித்து விபத்து ஆகிடுச்சு! ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை எமோஷனல் வீடியோ
இதனால் ஸ்ருதிக்கும் ரவிக்கும் போன் பண்ணி ஷோரூம் வர சொல்கிறார் மீனா. பிறகு குடும்பத்தினர் எல்லோரும் ஷோரூம் போனதும் மனோஜும் ரோகிணியும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+