சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு தெரியாமல் மீனாவிடம் வித்யா சொன்ன விஷயம்.. முத்துக்கு சர்ப்ரைஸ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 6ம் தேதிக்கான எபிசோடில் மீனாவுக்கு பெரிய ஆர்டர் கிடைக்கிறது. அதே நேரத்தில் முத்து டிராபிக் போலீஸ் அருணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயாவும் ரோகிணியும் வண்டியில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது வித்யா வண்டியை நிறுத்தி அந்த சிட்டிக்கு எவ்வளவு திமிரு இருந்தா என்ன அக்கவுண்ட்ஸ் வேலை பார்க்க கூப்பிடுவான் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு ரோகிணி பார்ட் டைம் ஜாப் மாதிரி நல்ல விஷயம் தானே பாரு என்று சொல்ல, அப்புறம் என்னை தூக்கி ஜெயில்ல உட்கார வைக்கவா என்று வித்யா திட்டுகிறார்.

அதோடு அந்த சிட்டி மூளை இல்லாதவன் ஆனால் முத்து சீக்கிரமாக சிட்டியை ஏதாவது செய்வான் என்று எனக்கு தோன்றுகிறது. முத்து திறமைசாலி என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார். அதனால் ரோகிணி கோபப்படுகிறார். அந்த நேரத்தில் மீனா வண்டியில் போக அதை பார்த்ததும் வித்யா மீனாவை நிறுத்தி ஓடி வந்து பேசுகிறார்.
லைப் பார்ட்னர் தேர்ந்தெடுப்பது பற்றி சொன்னீங்க, அவர்கிட்ட இருந்து நான் எப்படி போனை வாங்குவது என்று கேட்க, அதற்கு மீனா இன்னொருவாட்டி அவர் உங்களை பார்க்க வந்தால் எதுக்கு பார்க்க வர்றீங்கன்னு கேளுங்க. உங்கள புடிச்சிருக்குன்னு சொல்லுவாரு. அப்போ நான் உங்களை பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்று சொல்லி போன் வாங்கிடுங்க என்று சொல்ல, வித்யா ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்கிறார்.
பிறகு ரோகிணி என்ன நீங்க ரெண்டு பேரும் பேசினீங்க என்று கேட்க அதற்கு உண்மையை சொல்லாமல் வித்யா சமாளிக்கிறார். மறுபக்கத்தில் முத்துவும் செல்வமும் ஹோட்டலுக்கு சாப்பிட வருகின்றனர். அங்கு டிராபிக் கான்ஸ்டபிள் அருணும் அதே கடைக்கு சாப்பிட வருகிறார். முத்து அவரை கவனித்ததும் அவரை வம்பு இழுப்பது போன்று பேசிக் கொண்டிருக்கிறார்.
செல்வத்திடம் தேவையில்லாமல் கேஸ் போடுவாங்க... கேஸ் கிடைக்கலைன்னா என்ன பண்றது என்று பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து அருண் வெறுப்பாகி முத்துவிடம் சண்டை போடுகிறார். அப்போது முத்து இது பப்ளிக் ஏரியா இந்த இடத்தில் என்னை அடிக்க வந்தா இங்க இருக்கிறவங்க யாராவது வீடியோ எடுத்து அதை ட்ரெண்ட் பண்ணிருவாங்க என்று சொன்னதும் முத்து சட்டையில் இருந்து கையை எடுத்துவிட்டு உன்னை சும்மா விட மாட்டேன் என்று மிரட்டி விட்டு போகிறார்.

அவர் போன பிறகு செல்வம் யார் என்று கேட்க அது டிராபிக் போலீஸ்காரர். இவர்தான் செருப்பு தைக்கும் பாட்டியை கீழே தள்ளிவிட்டது என்று சொல்ல அதற்கு செல்வம் பயந்து போய் ஏன்டா இப்படி போலீஸ்காரங்க கிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்க என்று அட்வைஸ் பண்ணுகிறார். உடனே செல்வத்திற்கு சவாரி வந்து விட அவரும் கிளம்புகிறார்.
புது படத்தில் பிக் பாஸ் ஜனனிக்கு ஜோடியாகும் ஜீ தமிழ் சீரியல் ஹீரோ.. இவர் அந்த சீரியல் நடிகையின் கணவர்!
முத்து சாப்பிட்டு கொண்டு இருக்க செல்வம் காரை எடுக்க வெளியே வந்து எடுக்கும்போது கான்ஸ்டபிள் அருண் கார் நம்பரை பார்த்துக் கொள்கிறார். மறுபக்கத்தில் மீனா அம்மாவின் பூக்கடைக்கு வர அதுக்கு சீதாவும் அம்மாவும் இருக்கின்றனர். சீதா பூவை வாங்கி வைத்துவிட்டு நான் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா போகணும் என்று சொல்ல, அப்போது என்ன விஷயம் என்று மீனா விசாரிக்கிறார்.
அதற்கு ஹாஸ்பிடலில் ஒரு அம்மாவை அட்மிட் பண்ணி இருக்காங்க. நான்தான் அவங்கள பாத்துக்கணும் வேற யாரும் ஆள் இல்லைன்னு சொன்னாங்க. சரி பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு மீனாவும் அவருடைய அம்மாவும் சீதாவை பாராட்டுகின்றனர். சத்யா வந்து உனக்கு ஒரு ஆர்டர் கிடைச்சிருக்கு அக்கா எங்க ப்ரொபசர் வீட்டில் பங்க்ஷன் நடக்கிறது.
அதற்கு தான் உனக்கு ஆர்டர் தர சம்மதிச்சு இருக்காங்க என்று சொன்னதும் மீனா அவரிடம் பேசி ஆர்டரை கன்பார்ம் செய்கிறார். பிறகு மீனா வீட்டில் உட்கார்ந்து கொண்டு எப்படி செய்வது என்று பேப்பரில் வரைந்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து வருகிறார். அவரிடம் தனக்கு கிடைத்த பெரிய ஆர்டர் பற்றி சொன்னதும் முத்து சந்தோஷப்படுகிறார்.
ஆனால் இந்த ஆர்டருக்கு காசு கொஞ்சம் அதிகமாக செலவாகும் அதற்கு என்ன பண்ணலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க ரவி ஸ்ருதியிடம் கேட்கலாம் என்று முத்துவும் மீனாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் ரவியும் ஸ்ருதியும் வழக்கம் போல சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications