Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: விஜயா சிந்தாமணியை கதறவிட்டது இதற்காக தானா? முத்துக்கு தெரிந்த விஷயம், பார்வதி கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 6ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயா சிந்தாமணியிடம் கோபப்படுகிறார். அதோடு இனி டான்ஸ் கிளாஸுக்கு வரக்கூடாது, மீனாவின் வளர்ச்சியை தடுக்க நினைக்க கூடாது என்று மிரட்டி அனுப்பி வைக்கிறார். ஆனால் விஜயா மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்ன என்பது பார்வதிக்கு தெரிய வந்திருக்கிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா அழுது கொண்டிருக்க அதற்கு என்ன காரணம் என்று எல்லோரும் கேட்டதும் மனோஜ் என்னை திட்டிட்டான் ரூமை விட்டு வெளியே போக சொல்லிட்டான் என்று விஜயா குழந்தை போல அழுது கொண்டிருக்கிறார். இதனால் முத்து கடுப்பாகிறார். அம்மா இத்தனை நாளா மனோஜ்க்கு தான் சப்போர்ட் பண்ணிட்டு இருந்தாங்க இப்போ மனோஜ் அம்மாவையே அழ வச்சுட்டான். அவனை வர சொல்லி மன்னிப்பு கேட்க சொல்லுங்க என்று சொன்னது மனோஜ் ரூமில் இருந்து வெளியே வருகிறார்.

Siragadikka aasai serial vijay tv

மனோஜ் மன மாற்றம்

பிறகு நான் ஏதோ கோபத்தில் சொல்லிட்டேன் என்று சொல்ல, அதற்கு விஜயா எதுவும் பேசாமல் அழுது கொண்டே இருக்கிறார். முத்து எத்தனை நாள் என்னை சின்ன வயசுல இப்படி மாட்டிவிட்டு பனிஷ்மென்ட் செய்ய வைத்திருப்ப.. இப்ப முட்டி போடு, நீ முட்டி போட்டால் தான் அம்மா கோபம் குறையும் என்று சொல்ல, எங்க அம்மாவுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் அம்மா மனசு மாற வரைக்கும் நான் எழுந்திருக்க மாட்டேன் என்று மனோஜ் முட்டி போட விஜயா எழுந்திருக்க சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

விஜயாவின் நாடகம்

அதற்கு நீங்கள் சிரிங்க அப்பதான் நான் எழுந்திருப்பேன் என்று மனோஜ் அடம் பிடிக்க விஐயா மனம் மாறி விடுகிறார். இதையெல்லாம் பார்த்து ரோகிணி கடுப்பாகிறார். சின்ன விஷயத்துக்கு இவ்வளவு டிராமா பண்ணுறாங்க என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து முத்து மீனாவிற்கு விஜயா மற்றும் மனோஜ் நடந்துகொள்ளும் விதம் சந்தேகத்தை ஏற்படுகிறது. அம்மா ஏதோ பிளான் பண்ணி தான் வேலை பண்ணிக்கிட்டு இருக்காங்க.

விஜயாவுக்கு அதிர்ச்சி

நேற்று தாயத்து கட்டி விட்டாங்க. இன்னைக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்க. இதுக்கு பின்னாடி ஏதோ இருக்கு என்று முத்து சந்தேகப்படுகிறார். அடுத்த கட்டத்தில் விஜயா பார்வதி வீட்டில் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு சிந்தாமணி வந்து உங்க பையன் இன்கம் டேக்ஸ் ஆபீஸர் போல கெட்டப் போட்டு வந்து எங்க வீட்ல இருந்த பணத்தை எடுத்துட்டு போயிட்டான் என்று சொல்ல பார்வதி அது உங்க வீட்டு பணமா? அவனுடைய பணத்தை எடுத்துட்டு போனான் அவ்வளவுதான். அதை மட்டும் சொல்லுங்க என்று சொல்ல, அதற்கு விஜயா அவன் பொண்டாட்டியோட பணத்தை திருடுனா சும்மா இருப்பானா? அதனால தான் அவன் அப்படி பண்ணி இருக்கான் என்று சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

பார்வதிக்கு இன்ப அதிர்ச்சி

நீங்க தான ஆர்டர் கிடைக்காம பார்த்துக்கன்னு சொன்னீங்க என்று விஜயாவிடம் சிந்தாமணி கேட்டதும், விஜயா கோபமாகி நான் ஆர்டரை தான் கெடுக்க சொன்னேன் ஆனா அவ கிட்ட இருந்து பணத்தை பிடுங்கி கையை உடைக்க சொல்லல. நீங்க தான் ஏதோ பண்ணுனீங்க எங்க வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. அதுவும் இல்லாம என் வீட்டுக்காரர் ரொம்ப திட்டிட்டாரு. இதுக்கு மேல உங்களுக்கு எங்க டான்ஸ் கற்றுக் கொடுக்க முடியாது எங்கிருந்து போங்க என்று சொல்கிறார். அதற்கு சிந்தாமணி என்ன மாஸ்டர் இப்படி சொல்லுறீங்க சலங்கை பூஜை பண்ணலாம்னு இருந்தேன் என்று சொல்ல, இதுக்குள்ள சலங்கை பூஜை எப்படி அவசரமா பண்றது? என்னால சொல்லிக் கொடுக்க முடியாது.

சிந்தாமணி புலம்பல்

மீனா எனக்கு ஆகாத மருமக தான் ஆனா இனிமே அவ தொழிலை கெடுக்கிற மாதிரி எதுவும் பண்ணாதீங்க. அப்புறம் முத்து உங்களை சும்மா விடமாட்டான் என்று சொல்ல சிந்தாமணி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு யாரை நம்புறதுனே தெரியல அவங்க வீட்டுல ஒரு ஆளுக்கு பிரச்சனை என்றதும் இப்படி மாறிட்டாங்க என்று புலம்பி கொண்டு கிளம்புகிறார். இதையெல்லாம் பார்த்து பார்வதி ஆச்சரியப்படுகிறார்.

மீனா கேட்ட கேள்வி

மீனாவுக்கு சப்போர்ட் பண்ணி நீ பேசுவியா என்று விஜயாவிடம் கேட்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. என் வீட்டுக்காரர் எதிரி அதிகமாக இருந்தால் சீக்கிரம் முன்னேறி வருவாங்கன்னு சொல்றாரு. அதனாலதான் மீனாவுக்கு எதிரியே இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அதனாலதான் நான் இவங்கள துரத்தி விட்டேன் என்று சொல்ல, உன் புத்தி மாறுமா என்று பார்வதியை நினைத்துப் பார்க்கிறார். மறுபக்கத்தில் சிட்டி ஜெயிலிலிருந்து வந்துவிட முத்துவை பழிவாங்க வேண்டும் என்று கோபமாக இருக்கிறார் அடுத்ததாக மீனா தன்னுடைய அம்மாவின் பூக்கடைக்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சீதாவிடம் உன்னுடைய காதலரை எப்போ தான் எனக்கு அறிமுகப்படுத்துவ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+