சிறகடிக்க ஆசை: ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்ல! உண்மையை உடைத்த முத்து.. கோபத்தில் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 8ம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி சிட்டியிடம் கடன் வாங்கிய விஷயத்தை பற்றி முத்துவும், மீனாவும் வீட்டில் எல்லோரிடமும் சொல்கின்றனர். இதனால் மனோஜ் மற்றும் ரோகிணி இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜிடம் பணத்தை ஏமாற்றிக் கொண்டு போன நபரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்ல, அதற்காகத்தான் மீனா பூக்கட்டும் வேலையை விட்டுட்டு கூட ரொம்ப ரிஸ்க் எடுத்து அந்த ஆளை தேடிட்டு இருக்கா என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜும் விஜயாவும் திமிராக பேச அதற்கு அண்ணாமலை திட்டி விடுகிறார்.

அடுத்ததாக விஜயா மீனாவை சமையல் செய்ய சொல்கிறார் ஆனால் மீனா நாங்க சாப்பிட்டு வந்துட்டோம் உங்களுக்கும் வாங்கிட்டு வந்தாச்சு என்று சொல்ல, அப்போ மனோஜ்க்கும் ரோகிணிக்கும் சேர்ந்து வாங்கிட்டு வந்து இருக்கலாமே என்று அண்ணாமலை கேட்க, அதற்கு ஏற்கனவே இப்படித்தான் இவன் சாப்பிடாமல் இருக்கான்னு நான் சாப்பாடு வாங்கிட்டு ஷோரூமுக்கு போனதுக்கு நீ ஷோரூமை உன் பேரில் எழுத பாக்குறியான்னு என்கிட்ட கேட்டான்.
அதுபோல பார்லர் அம்மாவும் மீனா சாப்பாடு கொடுத்ததற்கு இப்போ நீங்க ரொம்ப சந்தோஷப்படுறீங்களான்னு கேட்டாங்க. அதனால அவங்களுக்கு தேவையானதை அவங்களே சாப்டட்டும்னு நாங்க விட்டுட்டோம் என்று முத்து சொல்ல, அண்ணாமலை மனோஜிடம் கோபப்படுகிறார்.
அதைத்தொடர்ந்து ஸ்ருதியும் ரவியும் வருகின்றனர். அவர்கள் முத்துவும் மீனாவும் சொன்னதால் நாங்களும் சாப்பிட்டுவிட்டு வந்துட்டோம் என்று சொன்னதும் விஜயா ரோகிணியிடம் கோபப்படுகிறார். நீங்க சீக்கிரமா பணத்தை கொடுக்குற வேலைய பாருங்க இல்லனா இந்த வீட்டில் உங்களுக்கு மரியாதை இருக்காது. உங்களால நானும் அவமானப்படுறேன் என்று திட்டிவிட்டு போய் சமைக்க சொல்கிறார்.
ரோகிணி தோசை சுட தெரியாமல் எல்லாவற்றையும் கருக வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த மீனா ரோகிணிக்கு ஹெல்ப் பண்ணி கொண்டிருக்கிறார். ஸ்ருதியும் அங்கிருந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா ரோகிணியிடம் நீங்க எதுக்காக கடன் வாங்குனீங்க என்று கேட்க, நான் யாருகிட்டயும் கடன் வாங்கலையே என்று ரோகிணி சொல்கிறார்.

அதற்கு நீங்க அந்த ரவுடி சிட்டியிடம் கடன் வாங்கி இருக்கீங்கனு என் தம்பி என்கிட்ட சொன்னான் என்று மீனா சொன்னதும் ரோகிணி அதிர்ச்சியில் நிற்கிறார். அப்போது ஸ்ருதி இப்படி கடன் வாங்குனவங்களை பலர் மிரட்டுறாங்க. அதுவும் ரவுடிங்க ஆள் வச்சு தூக்கிருவாங்க என்று சொல்ல ரோகிணி அப்படி நான் எதுவும் கடன் வாங்கல என்று திட்டி விட்டு அங்கிருந்து போய் விடுகிறார்.
மறுபக்கத்தில் மனோஜும் விஜயாவும் சாப்பாட்டுக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் கருகிய தோசையாக பார்த்ததும் இருவரும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக முத்து ரவி மனோஜ் மூன்று பேரும் பேசுகிறார்கள். அப்போது சிட்டியிடம் ரோகிணி கடன் வாங்கிய விஷயத்தை முத்து சொல்கிறார்.
அதோடு எனக்கு உன் பொண்டாட்டி மேல சந்தேகமா இருக்கு. அவங்க அவ்வளவு பெரிய பணக்கார வீட்டு பொண்ணா இருந்தா எதுக்காக இப்படி கடன் வாங்கிட்டே இருக்காங்க. அதுவும் மூணு முறை கடன் வாங்கி இருக்காங்க. எல்லாம் அது உனக்கு தெரியுமா என்று கேட்க மனோஜ் அப்படி எல்லாம் இருக்காது என்று சொல்லிவிட்டு வருகிறார்.
ஆனால் அதை யோசித்துக் கொண்டே வரும்போது ரோகிணி மீது முட்டி விடுகிறார். அதற்கு ரோகிணியும் திட்டுகிறார் அப்போது ரோகிணியிடம் நீ சிட்டியிடம் கடன் வாங்கி இருக்கியா? அந்த முத்து சொல்லுறான் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அவன் நீ பணக்கார வீட்டு பொண்ணு இல்ல என்று சொல்லுறான் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சியில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications