சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை.. கோபப்பட்ட ரோகிணி, பாயிண்டை பிடித்த ஸ்ருதி.. சந்தேகத்தில் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 8ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜை ஏமாற்றிய கதிரை முத்து கண்டுபிடிக்கிறார். அதே நேரத்தில் ரோகிணியை சிட்டி பிளாக் மெயில் பண்ணுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சிட்டி ரோகிணிக்கு போன் செய்கிறார். அப்போது எனக்கு ஒரு 15 நிமிஷம் முத்து கார் சாவி தேவைப்படுது நீங்க தான் எனக்கு எடுத்து கொடுக்கணும்னு சொல்ல, ரோகிணி முடியாது ஏற்கனவே போன் எடுத்துக் கொடுத்து பிரச்சினையே பெரிய பிரச்சனையா இருக்கு என்று பயப்படுகிறார். அதற்கு சிட்டி உங்களுடைய பழைய பிஏ உடல்நிலை சரியாகிவிட்டான் அவனால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னா நான் சொன்ன மாதிரி செய்யுங்க ஏற்கனவே உங்களுக்கு முத்துவால் பிரச்சனை என்று கேள்விப்பட்டேன். அவனால உங்க மாமியார் உங்களை அடித்து வீட்டை விட்டு துரத்துனாங்கன்னு எனக்கு தெரியும் என்று ரோகிணியை மிரட்ட ரோகிணி சரி என்று சம்மதிக்கிறார்.

முருகன் சொன்ன விஷயம்
மறுபக்கத்தில் முருகனும் வித்யாவும் பணத்துடன் புது வீட்டுக்கு வருகிறார்கள். முருகன் முத்துக்கு ஃபோன் போட்டு அட்வான்ஸ் கொடுக்க வந்திருக்கிறோம் ஆனால் நீங்க வந்தா தான் நாங்க பணத்தை கொடுப்போம் என்று சொல்ல முத்து சரி என்று சொல்கிறார். மறுபக்கத்தில் வீட்டுக்கு கதிர் வந்ததும் பணத்தை கொடுக்கிறீர்களா என்று கேட்க, இல்லை எனக்கு தெரிஞ்சவங்க இரண்டு பேர் வராங்க அவங்க வரட்டும் அப்புறம் பணத்தை கொடுக்கிறேன் என்று முருகன் சொல்கிறார்.
கதிர் பிளான்
அதனால் கதிர் தன்னுடைய மனைவி இடம் இவங்க பணத்தை கொடுத்தால் உடனே நாம பிளைட்டுக்கு போயிடலாம்னு நெனச்சா இவங்க இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க என்ன பண்ண என்று யோசிக்கிறார். அப்போது அவருடைய மனைவி நாம ரொம்ப அவசரப்பட்டா அவர்களுக்கு சந்தேகம் வந்துரும் அதனால கொஞ்சம் விட்டுக் கொடுப்போம் நாம வெளியில போயிட்டு வரலாம் என்று பிளான் போட கதிரும் சரி என்று அதேபோல முருகனிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
முத்து கண்டுபிடித்த உண்மை
அந்த நேரத்தில் முத்து மீனாவை கூட்டிக்கொண்டு அந்த வீட்டிற்கு வந்து விடுகிறார். பிறகு பணத்தை பார்த்து முத்து பணம் பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கதிரும் அவருடைய மனைவியும் வீட்டிற்கு வர அவர்களை பார்த்ததும் முத்து நீ கதிர் தானே என்று சொல்ல, மீனா ஆமா இவரு தான் உங்க அண்ணன் கிட்ட பணத்தை ஏமாத்திட்டு போனது என்று சொன்னதும் கதிர் அவர்களை தள்ளிவிட்டு வெளியே தப்பித்து ஓடும் முயற்சி செய்யும்போது முத்து கதிரை அடித்து இழுத்து வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு வந்து சட்டையை கழட்டி போட்டு அடிக்கிறார்.
சிக்கிய கதிர்
அப்போது கதிர் பற்றிய உண்மை தெரிந்ததும் முருகன் ரொம்ப நன்றி அண்ணே நீங்க மட்டும் இல்லன்னா இவன் என்கிட்டேயும் பணத்தை ஏமாத்திட்டு போயிருப்பான் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் பணத்தை எங்கடா என்று முத்து கதிரை அடிக்க, அதற்காக முப்பது லட்சம் செலவாகிடுச்சு. நானும் என் பொண்டாட்டியும் சிங்கப்பூருக்கு எல்லாம் போய் சுத்துனோம் அதனால செலவழிச்சு என்று சொல்கிறார்.
சந்தோஷத்தில் விஜயா
ஆனாலும் மீனா முத்து இவனை இப்படி விட்டால் விட்டால் சரிப்பட்டு வர மாட்டான்னு போலீசுக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்கிறார். அதேபோல மனோஜ்க்கு ஃபோன் போட்டு கதிரை பிடித்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்லி லொகேஷன் அனுப்புகிறார். இதனால் மனோஜும் ரோகிணியும் அங்கு வருகிறார்கள். மனோஜூம் ரோகிணியும் வந்ததும் அவர்களும் கதிரையும் அவருடைய மனைவியையும் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோபத்தில் ரோகிணி
அந்த நேரத்தில் சரியாக போலீஸ் அங்கு வந்து விடுகின்றனர், கதிரையும் அவருடைய மனைவியும் கூட்டிக்கொண்டு போகின்றனர். பிறகு மனோஜ் ரோகிணி மீனா முத்து நான்கு பேரும் வீட்டிற்கு மொத்தமாக வர அதை பற்றி ரவி கேட்கும்போது முத்து நடந்த விஷயத்தை சொல்கிறார். அப்போது விஜயா அப்போ பணம் கிடைச்சிடுமா என்று சந்தோசமாக கேட்க அதற்கு ரோகிணி இவங்களால தான் இப்ப பணம் கிடைக்காமல் போயிடுச்சு.
ஸ்ருதி கேள்வி
இவங்க போலீசுக்கு சொல்லாம இருந்திருந்தா நாம அவனை அடிச்சு பணத்தை வாங்கி இருக்கலாம் என்று சொல்ல, நாம என்ன ரவுடிகளா? கட்ட பஞ்சாயத்து பண்ண? போலீஸ் இருக்காங்களே அவங்க கிட்ட சொன்னா கண்டிப்பா வாங்கி கொடுப்பாங்க என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கும்போது ஸ்ருதி ஆமாம் முத்து சொல்றது சரிதான் அவனே பணத்தை செலவழிச்சுட்டேன்னு சொல்லுறான் நாம அடிச்சா மட்டும் கொடுத்துடவா போறான்? ஆனா போலீசிடம் போனா தான் இதுக்கு சரியா இருக்கும். நீங்க ஏன் குறுக்கு வழியில் போறதில்லையே குறியா இருக்கீங்க என்று கேட்க ரோகிணி கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications