சிறகடிக்க ஆசை: உங்களை பற்றி எல்லாமே தெரியும்.. ஸ்ருதி போட்ட குண்டு, அதிர்ச்சியில் ரோகிணி.. வித்யா சொன்ன ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 9ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியிடம் முத்து கண்டுபிடித்த உண்மைகள் பற்றி ஸ்ருதி சொன்னதை கேட்டு ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் மனோஜ் ரோகிணி மீது வெறுப்பை காட்டுகிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் ஸ்ருதி, அப்போ ஃபேவரைட் மருமகள் இப்போ சமைக்கிற மருமகள் ஆகிட்டாங்களா? என்று கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் எழுதின கதை வசனங்கள் எல்லாமே சூப்பர் ரோகிணி. அந்த மண்டபத்தில் தான் நீங்க ஃபுல்லாவே இருந்தீங்க ஆனா மலேசியா மாமாவை நீங்க பார்க்கவே இல்ல. உங்க கண்ணுக்கு அவர் தெரியாம முத்துக்கு தான் தெரிந்திருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

கலாய்த்த ஸ்ருதி

உங்கள் கதைக்கு முத்து ட்விஸ்ட் கொடுத்து இருக்கிறார். நீங்க நல்லா கதை எழுதுறீங்க பேசாம சீரியலுக்கு கதை எழுதுங்க நான் ப்ரொடியூஸ் பண்றேன் என்று கிண்டல் செய்து கொண்டிருக்கும் போது மீனாவும் சேர்ந்து சிரிக்கிறார். அப்போதும் விடாத ஸ்ருதி உங்களுடைய சீரியலுக்கு டைட்டில் கூட வைத்துவிடலாம் மலேசியா மருமகள் எப்படி இருக்கு என்று கேட்க, உங்களுக்கு என்னை பார்த்த காமெடியா தெரியுதா? என் நிலைமை இப்படியே இருந்திடாது என்று ரோகிணி கோபப்படுகிறார்.

ஸ்ருதி உடைத்த ரகசியம்

அதற்கு ஸ்ருதி நீங்க இவ்வளவுதான் உண்மைகள் மறைச்சிருக்கீங்களா இல்லை இன்னும் இருக்கான்னு போக போக தான் தெரியும். உங்க மேல சந்தேகம் இருக்கு. உங்க அம்மா விஷயத்தில் நீங்க ஏதோ மறைக்கிறீங்கன்னு முத்து சொன்னாரு. அது கூட சரியாக இருக்கும் என்று தோணுகிறது. நீங்க மாட்டியதும் மனோஜ் முதலில் இந்த உண்மை எனக்கு தெரியாது என்று ஆர்ப்பாட்டம் செய்தார். பிறகு எனக்கு எல்லாம் தெரியும்னு அப்படியே கதையை மாற்றிவிட்டார்.

ஸ்ருதிக்கு சந்தேகம்

அதற்கு கூட என்ன ரகசியம் இருக்குன்னு தெரியல. எல்லாத்தையும் முத்து கண்டுபிடிப்பாரு என்று சொல்ல, ரோகிணி அங்கிருந்து கோபப்பட்டு கிளம்பி விடுகிறார். பிறகு மீனாவும் ஸ்ருதியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நான் இவ்வளவு நேரம் வெறுப்பேத்துனதுக்கு ஒன்னு அழுது இருப்பாங்க இல்ல காரணத்தை சொல்லி சமாளிக்க பார்த்திருப்பாங்க ஆனா இவங்க எதுவுமே பண்ணல. இதுல ஏதோ ஒன்னு இருக்கு என்று ஸ்ருதி சொல்கிறார்.

அழுது கொண்டிருக்கும் ரோகிணி

ரோகிணி கோபமாக ரூமுக்குள் வரும்போது மனோஜ் படுத்து கொண்டிருக்கிறார். அப்போது மனோஜிடம் தூங்கவில்லையா என்று ரோகிணி கேட்க, மனோஜ் எதுவும் பேசாமல் கோபமாக தலையணை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார். அப்போது எதிரில் வந்த விஜயா எங்கடா போற என்று கேட்க, மாடியில் போய் படுக்க போறேன் என்று சொல்ல, இனி அந்த ரோகிணி பெட்டில் படுக்கக் கூடாது கீழ படுக்க சொல்லு இவ்வளவு நாளா மலேசியா ராணி மாதிரி நம்மளை ஏமாத்திட்டு இருந்தா என்று திட்டி மனோஜை அனுப்ப மனோஜ் எதுவும் சொல்லாமல் கட்டிலில் படுக்க ரோகிணி அழுது கொண்டே இருக்கிறார்.

வித்யா சொன்ன விஷயம்

மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜயா நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா ரோகிணிக்கு சப்போர்ட் செய்து பேச முத்து அவரை திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வித்யா போன் செய்கிறார். தன்னிடம் முருகன் காதலை சொல்லிவிட்டதாகவும் நானும் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டேன் என்று சொல்லிவிட்டு இனி என்ன பண்ணலாம் என்று வித்யா ஐடியா கேட்கிறார்.

மீனா அட்வைஸ்

அதற்கு மீனா அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். அப்போது முத்து மற்றும் மீனாவிற்கு இடையே சின்ன வாக்குவாதம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் ரோகிணிக்கு ஒரு போன் கால் வருகிறது. அப்போது தன்னுடைய பிரண்ட் வீட்டில் பங்க்ஷன் நடக்கிறது அதற்கு மேக்கப் ஆர்டர் ரோகிணி கிட்ட கொடுக்கலாமா வேண்டாமா என்று ரவியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஸ்ருதி வாக்குவாதம்

அப்போது ஸ்ருதியே கேள்வி கேட்டு ஸ்ருதியே அதற்கு பதிலும் சொல்லிக் கொண்டிருக்க அதனால் ரவிக்கும் ஸ்ருதிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பிறகு இருவரும் சமரசம் ஆகிவிடுகிறார்கள் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+