சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரியான பிரபல காமெடி நடிகர்.. இனி இதுதான் நடக்கப்போகுதா? செம சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில் காமெடி நடிகர் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவரால் கதையில் மாற்றம் ஏற்பட இருக்கிறது என்று தெரிகிறது. ஏற்கனவே ரோகிணி தான் பெரிய பணக்கார வீட்டு பொண்ணு என்றும் தன்னுடைய அப்பா வெளிநாட்டில் இருப்பதாகவும் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதை நம்ப வைப்பதற்காக தன்னுடைய தாய் மாமா என்று புது நடிகரை சீரியலில் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

அவர் வேறு யாரும் இல்லை ஏற்கனவே சன் டிவியில் திருமதி செல்வம் சீரியலில் பூங்காவனம் கேரக்டரில் கதாநாயகனின் அப்பாவாக நடித்த நடிகர் ஜெயமணி தான். தன்னுடைய மாமா வெளிநாட்டில் இருக்கிறார் என்று சீன் போட்டுக் கொண்டிருந்த ரோகிணி அந்த மாமா கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதற்காக இன்று ஜெயமணிக்கு பணம் கொடுத்திருக்கிறார்.

Siragadikka aasai serial in Popular comedy actor jeyamani who entered

சிறகடிக்க ஆசை சிரியலில் கதையில் முக்கியமான திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மனோஜ் வேலைக்கே போகாமல் பார்க்கில் சுற்றி கொண்டு இருந்த விஷயம் இப்போது முத்துவால் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து ரோகிணியும் தான் பணக்கார வீட்டு பெண் என்று விஜயாவிடம் நடித்துக் கொண்டிருக்கும் உண்மை எப்போது தெரியவரும் என்று எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

ரோகிணிக்கு ஏற்கனவே ஒரு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது ஆனால் அதை எல்லாம் மறைத்து தான மனோஜ் திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த உண்மை எப்போது தெரியவரும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் கடந்த வாரத்தில் உண்மை தெரிவது போன்று போக்கு காட்டி கடைசியில் ஏமாற்றம் அடைய வைத்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து இப்போது பொங்கல் செலிப்ரேஷன கிராமத்தில் வைத்த நடைபெற இருக்கிறது. பொங்கல் வாரத்தை மையப்படுத்தி சீரியலிலும் பொங்கல் பிரச்சினையை தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே ஸ்ருதியின் பெற்றோர் அவருக்கு சீர் கொடுத்து விஜயாவை உசுப்பேத்தி விட அதைப் பார்த்து கடுப்பான விஜயா இந்த மருமகளுக்கு மட்டும் செய்கிறார்கள் ஆனால் மீனாவுக்கு எதுவுமே செய்யல என்று இன்னும் பல வார்த்தைகளை பேசி தரக்குறைவாக திட்டி இருந்தார்.

அதைத்தொடர்ந்து விஜயா ரோகினி இடமும் உன்னுடைய அப்பாவோ அல்லது உன்னுடைய தாய் மாமாவோ நம்ம வீட்டுக்கு ஒருமுறை வந்துட்டு போயிட்டா இந்த மீனாவும் அவ புருஷனும் ஒன்னு கேள்வி கேக்குறாங்க என்று சொல்ல அதற்கு வேறு வழி இல்லாமல் ரோகினி மீனாவின் தம்பியின் நண்பர் சிட்டியிடம் ஒரு லட்சம் பணம் கடன் வாங்கி அதை ஒரு கறிக்கடைக்காரரிடம் கொடுத்து அவரை தன்னுடைய தாய் மாமாவாக நடிக்க வைக்கிறார்.

அந்த கறிக்கடைக்காரர் வரும் எபிசோடு இன்று ஒளிபரப்பாகி இருக்கிறது. அவருடைய ஆரம்பக் காட்சிகளே அசத்தலாக இருக்கிறது வெள்ளந்தியாக இவர் பேசும் பேச்சுகள் பலரையும் கவர்ந்திருக்கிறது. அதனாலேயே இவர் யார் என்று தேடிப் பார்க்கையில் அவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய அளவில் ஹிட்டடைந்த திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் அந்த சீரியலிலும் சென்டிமென்ட் காமெடி என அசத்து இருப்பார்.

திருமதி செல்வம் சீரியல் பூங்காவனம் என்ற கேரக்டரில் நடித்திருந்த நிலையில் நடிகர் ஜெயமணி இந்த சீரியலில் இனி எப்படி நடிக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் இனி ஜெயமணியால் தான் ரோகிணி முத்துவிடம் மாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+