சிறகடிக்க ஆசையில் முத்துவின் ஃப்ளாஷ் பேக் இதுதானா? மனோஜால் விழுந்த பழி? அண்ணாமலை செய்த தப்பு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. கிராமத்தில் பொங்கல் பங்க்ஷன் கொண்டாடும்போது ரோகிணியின் மாமா ஊருக்கு வந்திருப்பதால் ரோகிணி பற்றிய உண்மைதான் எல்லோருக்கும் தெரியவரும் என்ற எதிர்பார்ப்பில் எல்லோரும் இருந்தனர்.
ஆனால் அப்படி நடக்காமல் ரோகினி தப்பித்து விட்டார். ஆனால் முத்துவிற்கு ஒரு பிளாஸ் பேக் இருப்பது இப்போது தெரியவந்து இருக்கிறது. அதுவும் முத்துவை விஜயா இந்த அளவிற்கு வெறுப்பதற்கான காரணம் இனி வர இருக்கிறது. அதோடு முத்து தான் செய்யாத தப்பை தன்னுடைய குடும்பத்திற்காக சுமந்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போயிட்டு வந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

இந்த நிலையில் முத்து எதற்காக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போயிட்டு வந்தார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் நிலையில் ஒரு சில ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களை கொட்டி வருகிறார்கள். அதோடு இந்த சீரியலில் நடந்த நிகழ்வுகளை பற்றியும் நாம் கொஞ்சம் அலசி பார்க்கலாம். அதாவது ஆரம்பத்தில் இருந்தே விஜயாவுக்கு முத்துவை பிடிக்கவில்லை.
அதுபோல முத்துவும் படிக்காமல் இருக்கிறார். கிராமத்தில் பாட்டி வீட்டில் முத்து மட்டும் வளர்ந்திருக்கிறார். இது எதற்காக தான் இருக்கும் என்ற கேள்வி எல்லோருக்கும் மனதிற்குள் எழுந்து வந்தது. ஆனால் இது பற்றி நாம் இதற்கு முன்பு வெளிவந்த எபிசோடுகளில் சின்ன சின்ன இடங்களில் கொடுத்த க்ளூவை வைத்து தான் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது இருக்கிறது.
அதாவது முத்து அண்ணாமலை மற்றும் விஜயாவோடு அந்த வீட்டில் ஒன்றாக வளர்ந்தால் குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று ஜோதிடர் ஏற்கனவே சொல்லி இருந்ததாகவும் அதனால்தான் அண்ணாமலையும் விஜயாவும் முத்துவை கொண்டு பாட்டி வீட்டில் விட்டு விட்டு போனதாக ஒரு எபிசோடில் ஏற்கனவே சொல்லி இருப்பார்கள். அதுபோல அண்ணாமலையின் ரிட்டையர்டுமெண்ட் பணம் விஷயத்தில் ஸ்ருதியின் அப்பாவுக்கு அண்ணாமலைக்கும் சண்டை வரும்போது முத்து அடிக்கப் போகும்போது அவர் நீ ஏற்கனவே ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தானடா என்று திட்டி இருப்பார்.

அதுபோல இன்று வெளியான எபிசோடில் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் என்றால் என்னவென்று கேட்டதற்கு முத்து இதே பொங்கல் நாளில் தானே அம்மாவும் அப்பாவும் என்னை கொண்டு இங்க வந்து விட்டுட்டு போனாங்க. ஆனா அது எதுக்குன்னு எனக்கு அப்பவும் தெரியல, இப்பவும் தெரியல. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் நான் செய்யாத தப்புக்கு... என்று எதையோ சொல்ல வர அப்போது அண்ணாமலை நெஞ்சை பிடித்துக் கொண்டு நெஞ்சு வலி வந்தது போல நடித்து உண்மையை சொல்லாதே என்று சைகை காட்டி இருப்பார்.
இப்படியான நிலையில் தான் மனோஜின் முகமும் அதிர்ச்சி அடைந்து இருந்தது. அதனால் முத்து மனோஜ் செய்த ஏதோ ஒரு தப்புக்காக பழியை தான் அனுபவித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்திருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல ஒரு எபிசோடில் கூட நீ செஞ்ச தப்பால என் வாழ்க்கையே போயிடுச்சுன்னு முத்து மனோஜிடம் பேசி இருப்பார் அதுவும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ரசிகர்கள் இதுதான் நடந்திருக்கும் என்று சில கதைகளை பரப்பி வருகிறார்கள். அந்த கதையை பற்றியும் ஒரு அலசல் செய்யலாம், அதாவது ஒரு ரசிகர் சொல்லி இருக்கிறார் அண்ணாமலையும் விஜயாவும் பாட்டி வீட்டில் வந்து முத்துவை விட்டுவிட்டு போன பிறகு மனோஜ் பாட்டி வீட்டுக்கு லீவுக்கு வந்திருந்த போது கிராமத்தில் குளத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு பொண்ணா தள்ளிவிட்டுருவாரு.

அந்த பழியை முத்து ஏத்துக்கிட்டாரு அதனால் தான் அவர் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்திருக்கிறார். இந்த உண்மையான அண்ணாமலைக்கு தெரியும். அதனால் தான் அவர் உண்மையை தெரிஞ்சா இந்த குடும்பம் தாங்காது என்று சொல்லி இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல இன்னொரு ரசிகர் முத்துவுக்கு ஒரு சகோதரி இருந்திருக்கணும்,
அவரை எப்படியோ மனோஜ் தள்ளிவிட்டதுனால அந்த பொண்ணு இறந்து போய் இருக்கும் அந்த பழியை முத்து ஏத்துக்கிட்டாரு. அதனால்தான் விஜயா முத்துமேல கோபமா இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார். இப்படியாக பல கதைகள் குவிந்து வருகிறது. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை கமெண்டில் சொல்லிட்டு போங்க.












Click it and Unblock the Notifications