சிறகடிக்க ஆசை: போலீஸிடம் சிக்கிய மனோஜ்! மீண்டும் வீட்டுக்கு வந்த ரோகிணி, விஜயாவுக்கு இது தேவைதான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 16ஆம் தேதிக்கான எபிசோடில், ரோகிணி மீண்டும் விஜயா வீட்டுக்கு வந்திருக்கிறார். அதே நேரத்தில் மனோஜ் குடித்துவிட்டு போலீஸிடம் ரகளை செய்திருக்கிறார். கடைசியில் விஜயாவுக்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் குடித்துவிட்டு வந்து காரில் ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய நண்பர் நான் உனக்கு ஆட்டோ புக் பண்றேன், உன்னால கார் ஓட்ட முடியாது என்று சொல்ல அதற்கு இல்லடா நான் ரொம்ப படிச்சவன் எனக்கு தெரியும் நான் கார் ஓட்டிட்டு போயிருவேன் என்று போதையில் புலம்பி கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் போலீஸ் அங்கு வர அதை பார்த்து மனோஜின் பிரண்டு ஓடிப்போய்விடுகிறார். உடனே போலீஸ் மனோஜிடம் வந்து விசாரிக்கின்றனர். அப்போது அங்கிருந்த கான்ஸ்டபில் பெயர் ரோகிணி என்றதும் மனோஜ்க்கு கோபம் வருகிறது. இவ ஏமாத்துவா.. இவளுக்கு ரெண்டு புருஷன் என்று சொல்லி கொண்டே இருக்கிறார்.
இதனால் இன்ஸ்பெக்டர் கோபமாக மனோஜை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போக கிளம்புகிறார். அப்போது முத்து அந்த பக்கமாக வந்து மனோஜை பார்த்ததும் பதறிப்போய் என்னவென்று விசாரிக்க, நடந்த விஷயத்தை இன்ஸ்பெக்டர் சொல்கிறார். உடனே முத்து ரோகிணி என்ற பெயரை கேட்டதும் தான் மனோஜ் இப்படி சொல்லிட்டான் என்று சொல்கிறார்.
அவனுடைய பொண்டாட்டி பெயர் தான் ரோகிணி, அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கு ஆனா அதை மறைத்து இவனை கல்யாணம் பண்ணிட்டா. அந்த உண்மை இப்பதான் தெரிஞ்சது. அதனால அதிர்ச்சியில் தான் இப்படி குடிச்சிட்டு வந்திருக்கான், அதே பெயரை கேட்டதும் தான் இப்படி பேசிட்டான் என்று மன்னிப்பு கேட்டு மனோஜை அங்கிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வருகிறார்.
Pandian Stores: பாண்டியன் எடுத்த நல்ல முடிவு! கண்ணீர்விட்ட ராஜி அம்மா.. சந்தோஷமான செய்தி தான்
மறுபக்கத்தில் சிந்தாமணி விஜயா வீட்டிற்கு வந்து அழுது கொண்டிருக்கிறார். நீங்கள் எவ்வளவு அறிவான ஆளு உங்களையே அந்த பொண்ணு ரோகிணி ஏமாத்திட்டாளா என்று சிந்தாமணி சீன் போட, பின்னாடியே ரோகிணியும் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். ரோகிணியை பார்த்ததும் விஜயா கோபத்தில் வீட்டை விட்டு வெளியே போக சொல்ல, ரோகிணி நான் என்னுடைய பொருட்களை எடுக்க தான் வந்தேன், என் டிரஸை மட்டுமாவது எடுத்துட்டு போயிடுறேன் என்று சொல்ல அதற்கு விஜயா சம்மதிக்காமல் இருக்கிறார்.
அப்போது மீனா இடையில் வந்து இவங்க டிரஸை எடுத்துட்டு போகட்டும். நீங்க இதற்கு விடாம டிரஸ் தூக்கி வெளியே போட்டா நீங்க வீட்டைவிட்டு துரத்துன்னு போல ஆகிடும், வேண்டாம் என்று சொல்ல சிந்தாமணி நாம போட்ட பிளானை இவ தடுக்குறாளே என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் முத்து மனோஜை வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு வருகிறார். ரோகிணி இதை பார்த்ததும் அழுது கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் ரோகிணியை வீட்டை விட்டு போக சொல்லி புலம்புகிறார். அதை பார்த்து விஜயா வருத்தப்படுகிறார். என் பையன் இப்படி குடிக்க ஆரம்பிச்சுட்டானை அதுக்கு நீ தான் காரணம் என்று ரோகிணியை துரத்தி விடுகிறார்.
அதோடு நீதான் இவனுக்கு வாங்கி கொடுத்தியா என்று முத்துவிடம் கேட்க, அதற்கு முத்து அவன் குடிச்சிட்டு ரகளை பண்ணிட்டு இருந்தான். நான் தான் காப்பாத்தி கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறார். ஆனாலும் விஜயா கேட்காமல் என் பையனோட வாழ்க்கையை எல்லாரும் சேர்ந்து சீரழிச்சிட்டாங்க என்று புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் எனக்கு இன்னும் சரக்கு வேண்டும் என்று அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications