Pandian Stores: பாண்டியன் எடுத்த நல்ல முடிவு! கண்ணீர்விட்ட ராஜி அம்மா.. சந்தோஷமான செய்தி தான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2026 ஜனவரி 16ஆம் தேதி அன்று பாண்டியன் தன்னுடைய குடும்பத்திற்காக ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் ராஜியின் அம்மா கண்கலங்கி அழுது இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நகை பற்றிய உண்மை தெரிந்ததும் மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் பாக்கியம் எப்படியாவது எண்பது பவுன் நகையை வைத்து பிரச்சனை செய்ய வேண்டும் என்று நினைத்த நேரத்தில், மீனா வீடியோ ஆதாரம் இருக்கு என்று சொன்னதும் மயில் நகை விஷயத்தில் உண்மையை சொல்லிவிட்டார். இதனால் பாண்டியர் குடும்பத்தினர் ஜெயிலில் இருந்து வெளியே வந்திருந்தனர்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், பழனி ஸ்டேஷனில் நடந்த விஷயத்தை பற்றி தன்னுடைய அம்மா, அண்ணிமார்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது காந்திமதி உண்மையிலே அந்த பொண்ணு பேரு மயில் தங்கமயில் தானா? இல்ல அதுவும் பொய்யா? அவ கூட சுத்திக்கிட்டு இருக்கவங்க ரெண்டு பேரும் அந்த பொண்ணோட அப்பா அம்மா தானா? இல்ல அதுவும் கூட ஏமாற்றா என்று கேட்கிறார்.
இப்படியும் மனுசங்க இருக்காங்க என்பது அதிர்ச்சியா இருக்கு. முன்பெல்லாம் செய்திகளில் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இப்போ நம்ம குடும்பத்திலேயே இப்படி ஏமாத்தி இருக்காங்க என்று கேள்விப்படும் போது தான் அதிர்ச்சியா இருக்கு அம்மா சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது பழனி, அக்காவும் மாமாவும் நகை பற்றி பேசி இருக்க மாட்டாங்க, ஆனால் இவங்க எதற்காக இப்படி பொய் சொல்லி ஏமாத்துனாங்கன்னு தெரியல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பிறகு அவர் போனதும் ராஜியின் அம்மாவும், குமாரின் அம்மாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்போ இரண்டு குடும்பமும் ஓரளவுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கிறது. இனி இரண்டு குடும்பமும் சேர்ந்துட்டா நல்லாயிருக்கும். நானும் ராஜியிடம் நல்லபடியா பேசிவாங்கி இருப்பேன். அத்தனையும் அவங்க பொண்ணு கோமதியிடம் பேசுவாங்க.
எதிர் வீட்டில் என் பொண்ணு இருந்தால் கூட இப்போ எப்படி இருக்கன்னு கேட்க முடியாத மாதிரி தான் நிலைமை இருக்கு என்று ராஜியின் அம்மா கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார். அதற்கு குமாரின் அம்மா சமாதானம் சொல்கிறார். மறுபக்கத்தில் பாண்டியன் குடும்பத்தில் எல்லோரும் இருக்கின்றனர்.
அப்போது பாண்டியன் நான் ஒரு முக்கியமான விஷயத்தை முடிவு பண்ணி இருக்கிறேன் என்று சொன்னதும், சரவணன் நீங்க அந்த மயில் கூட சேர்ந்து வாழணும்னு சொல்லாம இருந்தா எனக்கு சந்தோசம் என்று சொல்ல, பாண்டியன் கடைசியில் இனி அந்த பொண்ணு நம்ம குடும்பத்திற்கு வேண்டாம், அவளோட ஒரு பொருள் கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது எல்லாவற்றையும் அனுப்பி விடணும் என்று சொல்ல மொத்த குடும்பமும் நிம்மதி அடைகின்றனர்.
எனக்கு ஆரம்பத்தில் கூட மயில் மீது கொஞ்சம் இரக்கம் இருந்தது. இந்த வீட்டை அனுப்பினால் போதும் என்று நினைத்தேன். ஆனால் இனி அந்த பொண்ணு நம்ம குடும்பத்திற்குள் வரவே கூடாது என்று உறுதியாக இருக்கிறார். அடுத்ததாக மீனா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது இங்கு நடந்த விஷயத்தை எல்லாவற்றையும் உங்க அக்காவுக்கு போன் பண்ணி சொல்லிட்டியா என்று கோமதி குத்தகலாக பேசுகிறார்.
கோமதி போனதும் செந்திலும் வந்து அதே போல மீனாவை குத்தி காட்டி பேச, மீனா தன் மீது தப்பு இல்லை என்பதை இந்த குடும்பத்துக்காரங்க புரிஞ்சிக்கவே மாட்டாங்களா என்று புலம்பி கொண்டிருக்கிறார். கடைசியாக இன்று ஒரு நாள் மட்டும் இந்த வீட்டில் தங்கிக்கலாம் என்று சரவணன் சொல்லிவிட்டு போகிறார்.
அதைத்தொடர்ந்து ராஜியும் கதிரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் நானும் அண்ணன் கூட போய் படுத்து கொள்கிறேன் என்று சொல்லுகிறார். அதற்கு ராஜி இங்க இருந்தா மட்டும் என்ன நடந்திடும்? நான் கட்டிலில் படுப்பேன், நீங்க கீழே படுப்பீங்க, பத்து நிமிஷத்தில் தூங்கி விடுவோம்... இதுதானே நடக்குது என்று பேச, கதிர் அதிர்ச்சியாகி நிற்கிறார். அடுத்ததாக இவர்களுக்கும் தான் ரொமான்ஸ் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications