Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசையில்‌ இனி நடக்கப்போவது இதுதான்! நேரடியாக சவால் விட்ட ரோகிணி! இது அந்த சீரியல் கதையாச்சே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 23ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதை பார்க்கும்போது தெரிகிறது, இது ஏற்கனவே இயக்குனர் குமரன் இயக்கத்தில் வெளியான தெய்வமகள் சீரியலை காப்பியடித்தது போல இருக்கிறது. என்ன நடந்தது என்று பார்ப்போம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் இயக்குனர் குமரன் தான் இயக்கி வருகிறார். அவர் இதற்கு முன்பு தெய்வமகள், தமிழும் சரஸ்வதியும் உட்பட பல சீரியல்களை இயக்கியிருக்கிறார். இவருடைய சீரியலில் கதாநாயகன் ஒரு முரடாகவும் அதே நேரத்தில் குடும்பத்தின் மீது மரியாதை உள்ளவனாகவும் இருப்பான். தன்னுடைய அப்பா அம்மாவிற்கு அதிக சப்போர்ட் செய்வான். எவ்வளவு அசிங்கப்பட்டாலும் பெற்றோர் மீது பாச மழை பொழிவான்.

Siragadikka Aasai serial Vijay TV

அதுபோல குடும்பத்தின் தியாகி அந்த குடும்பத்தின் மருமகள், அதாவது ஹீரோயினி இருப்பார். ஆனால் வில்லி எப்போதுமே ஹீரோவை சீண்டிக்கொண்டிருக்கும் கேரக்டரில் இருப்பார். அந்த வில்லிக்கு ஹீரோ அன்னியாரோ, என்றும் பார்லர் அம்மா என்றும் பெயர் வைத்திருப்பார். அதேபோல ஹீரோயினிக்கு சில நண்பர்கள் இருப்பார்கள், ஹீரோக்கு சில நண்பர்கள் இருப்பார்கள், போதாத குறைக்கு ஹீரோவின் அப்பா அம்மாவுக்கும் கூட நண்பர்கள் இருப்பார்கள்.

அதேபோல இயக்குனர் குமரன் இயக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் வரைக்கும் சில கேரக்டர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை ஆரம்பத்தில் இருந்து பார்க்கும் பல ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். சரி இது இப்படி இருக்க, இப்போ என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து ரோகிணி பற்றிய உண்மை எப்போது தெரியவரும் என்பதுதான் எல்லோருடைய கேள்வியாக இருந்தது. அதற்கான விடை கடந்த வாரத்தில் கிடைத்துவிட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சட்டுபுட்டுனு ரோகிணி உண்மையை உடைத்து விட்டாங்க. இதற்கு முன்பு ரோகிணி பற்றிய உண்மை தெரிய வருமா? என்று 100க்கும் மேற்பட்ட ப்ரோமோ வந்திருக்கும்.

Siragadikka Aasai serial Vijay TV

ஆனால் இப்போது அது பற்றி பெரிய பில்டப் இல்லாமலே முத்துவுக்கு தெரிய வர கடைசியில் அவர் குடும்பத்திடம் சொல்லி விஜயா மூலமாக ரோகிணியை வீட்டை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார். இதே போலத்தான் தெய்வமகள் சீரியலிலும் அண்ணியாருடைய சுயரூபம் எல்லாம் தெரிய வர அவரை வீட்டை விட்டு துரத்தி இருந்தனர். ஆனால் வெளியபோன அண்ணியாருக்கு ஒரு சிலர் உதவி செய்தனர் குறிப்பாக நம்பி என்ற ஒருவர் வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்: உண்மை முகத்தை காட்டிய சக்திவேல்! கோமதிக்கு இது தேவையா? மீண்டும் மயிலால் பிரச்சனை
அதேபோல இப்போது ரோகிணிக்கு சிந்தாமணி உதவி செய்கிறார். ஆனால் அவர் விஜயாவின் வீட்டை கைப்பற்ற வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு தெய்வமகள் சீரியலில் அண்ணியார் தன்னுடைய மாமனார் வீட்டை தான் தன்னுடைய பெயருக்கு மாற்ற வேண்டும் என்று பிளான் போட்டு இருந்தார். தன்னுடைய கணவர் மீது அதிக பாசம் வைத்திருப்பார், ஆனால் வில்லியான அண்ணியார் பற்றிய உண்மைகள் தெரிந்ததும் ஹீரோ பிரகாஷ் அவருடைய அண்ணனுக்கு வேற ஒரு கல்யாணம் பண்ணி வைத்திருப்பார்.

இப்போது ரோகிணி பற்றிய உண்மை தெரிந்ததும் அவரை விவாகரத்து செய்துவிட்டு மனோஜிக்கு வேற கல்யாணம் பண்ண வேண்டும் என்று விஜயா முயற்சி செய்து இருக்கிறார். இதை பார்க்கும் போது நம்முடைய மனதிற்குள் "இது.. அது இல்ல" என்ற சிந்தனை வந்துவிடும்.

சிறகடிக்க ஆசையில் செம சம்பவம்! ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் முத்து, மீனா! கடைசியில் கதையே மாறிப்போச்சு
எது எப்படியோ சீரியலை சீரியலாக பார்ப்போம் என்று பார்த்தாலும் இப்போது ரோகிணியை விவாகரத்து செய்ய மனோஜ் கொடுத்த வழக்கு விசாரணை நடக்கிறது. அதில் ரோகிணி நான் எப்படியும் என்னுடைய புருஷன் கூட சேர்ந்த வாழுவேன், அதற்காக எது வேணாலும் செய்வேன் என்று விஜயாவிடமே சவால் விட்டு இருக்கிறார். இதனால் அடுத்த வாரம் ஏதாவது சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+