சிறகடிக்க ஆசை: உண்மையை உளறிய பார்வதி! நகை விஷயத்தில் மனோஜ்க்கு விஜயா ஆப்பு .. முத்துவின் அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 11ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் உண்மையை கண்டுபிடிப்பதற்காக முத்து எடுத்த முயற்சியில் மனோஜ் தப்பித்து விட்டார். அதே நேரத்தில் பார்வதி மூலமாக உண்மை தெரியலாம் என்று முயற்சி செய்த முத்துவுக்கு விஜயா அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கவரிங் நகை கடை பெண்ணாக ஸ்ருதி பேசி மனோஜிடம் போட்டு வாங்கிக் கொண்டிருக்க உண்மையை உளற வந்த மனோஜ் திடீரென்று அலர்ட் ஆகி உஷாராகி நான் எதுவும் வாங்கவில்லை. இப்படி போன் பண்ணுனா சைபர் கிரைமில் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் என்று திட்டி விட்டு வைக்கிறார்.

அதைக் கேட்டதும் ரவி உண்மையில் மனோஜ் இந்த நகை விஷயத்தில் திருடலையோ என்னவோ என்று சொல்ல, முத்து அப்படி எல்லாம் இருக்கவே இருக்காதுடா இந்த வீட்டில் மனோஜ் பத்தி தான் உனக்கு தெரியுமே அவன் தான் இந்த தப்பு பண்ணி இருக்கான். ஆனா அந்த உண்மையை சொல்லாமல் உஷார் ஆகிட்டான். முதலில் அவனே ஏதோ சொல்ல வந்தான் பிறகு தான் அவனுக்கு நம்ம மீது சந்தேகம் வந்து கதையை மாற்றி பேசி இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ரோகிணி தன்னுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்போது மனோஜ் நான் ஒரு இடத்திற்கு அவசரமாக போகணும் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு நேராக வீட்டிற்கு வந்து விஜயாவிடம் நடந்தவற்றை சொல்கிறார். இது முத்துவின் வேலையா தான் இருக்கும். உஷாரா இருக்க வேண்டும் என்று சொல்ல, விஜயா அவன் இவ்வளவு முயற்சி எடுத்துட்டான்னா உண்மையை கண்டுபிடிக்காமல் விடமாட்டான்.

அதனால நீ நாலு லட்சத்தை ரெடி பண்ணு என்று சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். அடுத்த கட்டத்தில் முத்து மீனாவுக்கு போன் போட்டு உண்மையை சொல்ல சரியான ஆளு பார்வதி ஆன்ட்டிதான் நீ அங்க வந்துரு நானும் அங்க வந்துடுறேன் என்று பார்வதி வீட்டுக்கு கிளம்பி போகிறார்கள். அங்கு பார்வதிக்கு பழங்களை கொடுத்து விட்டு பேச்சு கொடுத்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது பாட்டியின் பிறந்தநாள் பங்க்ஷனில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது நாங்க பாட்டிக்கு ஒரு ரெட்ட வட சங்கிலி வாங்கலாம்னு இருந்தோம். அதை மீனாவின் நகையை கொடுத்துட்டு தான் வாங்கலாம்னு இருந்தோம் என்று சொல்ல, பார்வதி அதுதான் கவரிங் நகையாச்சே என்று உளற அது உங்களுக்கு எப்படி தெரியும் என்று முத்து கேட்க, அது நடந்த விஷயத்தை விஜயா சொன்னா என்று சமாளிக்கிறார்.

நகை எப்படி மாறுச்சுன்னு ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க மீனா வீட்ல மாறி இருக்கும், உங்க பாட்டி நகை ஊரில் மாரி இருக்கும்னு சொன்னா என்று விஜயா சொன்னதை அப்படியே சொல்லி சமாளிக்கிறார். அதற்கு முத்து இல்லத்த நடுவுல தான் ஏதோ நடந்திருக்கு அம்மாவுக்கு தான் என்ன நடந்துச்சுன்னு தெரியும் என்று சொல்ல பார்வதி ஆமா விஜயாவுக்கு தான் தெரியும் என்று மீண்டும் உண்மையை உளற..
முத்து அதைத் தொடர்ந்து பேசி விஷயத்தை வாங்க முயற்சி செய்யவும் பார்வதி மனம் மாறி உண்மையை சொல்ல வரும்போது விஜயா ஓடி வந்து தடுத்து விடுகிறார். இதனால் இந்த பிளானும் சொதப்ப முத்து கோபத்தில் அங்கிருந்து கிளம்ப மீனாவும் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். மேலும் உண்மை எப்படி கொண்டு வருவது என்று மீனாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் செல்வம் போன் பண்ணி பிரிட்ஜ் வாங்க வருமாறு கூப்பிடுகிறார். ஆனால் நான் வரல என்று முத்து சொல்ல மீனா அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications