சிறகடிக்க ஆசை: பட்டும் திருந்தாத மீனா! ஸ்ருதி போட்ட போடு.. மனோஜ் கடைக்கு வந்த போலீஸ்.. முத்து அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 12ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். விஜயா எத்தனை முறை அவமானப்படுத்தினாலும் இந்த மீனா திருந்தாமல் மீண்டும் மீண்டும் விஜயாவுக்காக பாவப்பட்டு புதுசு புதுசாக சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். ஆனால் மீனா மற்றும் விஜயா முகத்துக்கு நேராகவே ஸ்ருதி செம போடு போட்டு இருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை முத்து மீனாவிடம் மன்னிப்பு கேட்க, அவர்கள் நீங்க எதுக்குப்பா மன்னிப்பு கேக்குறீங்க என்று கலங்குகின்றனர். விஜயா இன்னைக்கு மாறுவா நாளைக்கு மாறுவா என்று நான்தான் இதுவரைக்கும் பொறுமையா இருந்தேன் ஆனால் இப்போ எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. அவ செஞ்ச தப்புக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று மன்னிப்பு கேட்கிறார்.

அதோடு மீனாவின் பொறுமையை பாராட்ட, இதை எல்லாம் கோவிலில் இருந்து வந்த விஜயா படிக்கட்டில் நின்று ஒட்டு கேட்கிறார். பிறகு விஜயா உள்ளே வந்ததும் முத்து மீனாவை கூட்டி சென்று விட அண்ணாமலையையும் விஜயாவும் பேசிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க அண்ணாமலை எதுவும் பேசாமல் மொட்டை மாடிக்கு சென்று விடுகிறார். அடுத்து மீனாவிடம் முத்து வீட்டில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி சமையல் செய் என்று சொல்ல மீனா பூரி, கிழங்கு மசாலாவை செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது விஜயா வந்து உள்ளுக்குள்ள சந்தோஷமா இருக்க போல அதான் பூரி செஞ்சிட்டு இருக்கியா என்று பிரச்சனை செய்ய மீனா நான் எதுவும் சந்தோஷப்படல நான் எல்லாருக்கும் சமைச்சிட்டு தான் இருக்கிறேன் என்று சொல்லி விடுகிறார். பிறகு ரோகிணி விஜயா என ஒவ்வொருவரையாக மீனா சாப்பிட கூப்பிட ரோகிணி நாங்க வெளியே போய் சாப்பிடுகிறோம் என்று கிளம்ப மனோஜ் பூரி கிழங்கு வாசம் வந்ததும் இங்கேயே சாப்பிடலாம் என்று கூறி நாமும் தான் மாசம் காசு தருகிறோமே அப்புறம் எதுக்கு நாம சாப்பிடாம இருக்கணும் என்று சொல்ல ரோகிணி விஜயாவையே கூட்டிக்கொண்டு சாப்பிட சொல்கிறார்.
பாக்கியலட்சுமி: பாக்யாவை ஜெயித்த கோபி.. ஈஸ்வரி சொன்ன வார்த்தை.. பட்டும் திருந்தாத இனியா
அந்த நேரத்தில் சாப்பிட வந்த ஸ்ருதி நீங்க இன்னைக்கு சமைச்சிருக்கே மாட்டீங்கனு என்று நினைச்சேன். ஆண்டி உங்க மேல நகையை தூக்கி வீசியதால் நீங்க இன்னைக்கு வருத்தமா இருப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா நான் மட்டும் உங்க இடத்துல இருந்து இருந்தா கிளம்பி போயிட்டே இருந்திருப்பேன் என்று சொல்ல, முத்து பாத்தியா பல குரலுக்கு தெரிகிறது கூட உனக்கு தெரியல என்று சொல்ல விஜயா ஸ்ருதியை பார்த்து முறைக்கிறார்.
பிறகு அண்ணாமலை வெளியே போயிட்டு வரேன் என்று முத்து, மீனாவிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்ப விஜயா வருத்தப்பட்டு சாப்பிடாமல் எழுந்து போகிறார். அடுத்து ஸ்ருதி வேலைக்கு கிளம்ப மீனா வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை உங்க வீட்ல யாருகிட்டயும் சொல்ல வேண்டாம் அதனால அத்தைக்கு அவமானம் ஆகிடும் என்று சொல்ல ஸ்ருதி தப்பு யார் பண்ணாலும் தப்பு தான்.
ஆனால் உங்களுக்காக இந்த விஷயத்தை வீட்டில் சொல்லாம இருக்கேன் என்று சொல்ல இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விஜயா பணக்கார திமிர் இந்த ஸ்ருதிக்கு என்று ஸ்ருதியை திட்டிக்கொண்டு இந்த மீனா இப்போ நமக்கு நல்லது பண்ணுனாளா இல்ல ஸ்ருதியிடம் நல்ல பேரு வாங்குவதற்காக இப்படி பேசினாளா தெரியலையே என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு மனோஜ் கடையில் இருக்க அங்கு வந்த போலீஸ் உங்ககிட்ட இருந்து திருடினவன் பொருட்களை இவர்கிட்ட தான் வித்திருக்காங்க. இவர் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து இவர் சில பொருட்களை வாங்கி இருக்கிறார். அந்த பொருட்களை எல்லாம் உங்ககிட்ட திருப்பி தரேன்னு சொல்லிட்டாரு என்று சொன்னதும் மனோஜ் சந்தோஷப்படுகிறார். ஆனால் அதற்கான பணத்தை நீங்கள் கொடுக்கணும் என்று போலீஸ் சொன்னதும் மனோஜ் அதிர்ச்சி ஆகிறார்.
பிறகு ரோகிணி அந்த பணத்தை நாங்க தந்து விடுகிறோம் என்று வாக்கு கொடுக்கிறார். பிறகு மனோஜ் பணத்துக்கு என்ன செய்ய என்று கேட்க ஜீவா கொடுத்த பணத்தில் மீதம் கொஞ்சம் இருக்குல்ல அதை முத்துவுக்கு ரெண்டு லட்சம் இவருக்கு ஒரு லட்சம் கொடுத்து விடலாம் இப்போதைக்கு பிரச்சனையை தீர்க்க பார்க்கலாம் என்று ரோகிணி ஐடியா சொல்கிறார்.
அதை தொடர்ந்து அண்ணாமலை வீட்டில் புத்தகத்தை தட்ட அப்போது அதிலிருந்த தூசியால் இருமல் வந்து விடவும் விஜயா ஓடி சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அண்ணாமலை அதை குடிக்காமல் டைனிங் டேபிளுக்கு சென்று அவரே எடுத்துக் குடிக்கிறார். உடனே கோபப்பட்ட விஜயா ரூமுக்குள் சென்றுவிட அண்ணாமலை சோபாவில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications