பாக்கியலட்சுமி: பாக்யாவை ஜெயித்த கோபி.. ஈஸ்வரி சொன்ன வார்த்தை.. பட்டும் திருந்தாத இனியா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 22 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். ஏற்கனவே இனியா ஸ்கூல் படிக்கும்போது தன்னுடைய நண்பர்களோடு பார்ட்டிக்கு போன இடத்தில் பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். ஆனாலும் அதை மறந்து இப்போது மீண்டும் காலேஜ் நண்பர்களோடு சேர்ந்து பார்ட்டிக்கு போயிருந்த நிலையில் அங்கும் புது பிரச்சனை வந்திருக்கிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவிற்கும் கோபிக்கும் நடந்து முடிந்த சமையல் போட்டியில் கோபி இரண்டு ரவுண்டில் ஜெயித்திருக்கிறார். பாக்யா 3 ரவுண்டில் ஜெயித்திருக்கிறார். இதனால் மீதம் உள்ள இரண்டு ரவுண்டில் ஒருவர் மட்டுமே போட்டியிட உள்ளது என்று கூறுகின்றனர்.

மறுபக்கத்தில் இனியா தன்னுடைய ஃபிரண்ட்ஸுடன் பப்புக்கு போய் இருக்கும் நிலையில் அவருடைய பிரண்ட்ஸ் எல்லோரும் சீனியர்ஸ் உடன் சேர்ந்து பீர் குடிக்க, இனியா அதை பார்த்து பயப்படுகிறார். அப்போது அங்கு வரும் பிரியா இனியவை கூல் செய்து டான்ஸ் ஆட அழைத்து செல்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா இனியாவுக்கு போன் செய்து அங்கிருந்து கிளம்பி விட்டாரா என்று செக் பண்ண இனியா போனை எடுக்கவில்லை.

உடனே பாக்கியா செழியனுக்கு போன் போட்டு இனியா பற்றி விசாரிக்க செழியன் நான் இங்கேதான் இருக்கிறேன் நான் போய் பாத்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு போட்டி பற்றி விசாரிக்க பாக்கியா அங்கு நடந்த விஷயத்தை சொல்கிறார்.

அந்த நேரத்தில் பப்பில் சீனியர்கள் இனியாவை பார்த்து சூப்பராக இருப்பதாக சொல்லி போன் நம்பரை கேட்க அதற்கு இனியாவின் பிரெண்ட்ஸ் கொடுக்க மறுத்து சண்டையில் ஈடுபடுகின்றனர்.

மறுபக்கத்தில் பாக்யா செழியனிடம் போன் பேசிவிட்டு கட் செய்ய அந்த நேரத்தில் ஈஸ்வரி அங்க பாரு அவன் இன்னொருவரை கூட்டிட்டு வந்திருக்கிறான் என்று சொல்லி நடுவர்களிடம் சண்டை போடுகிறார். அதற்கு கோபி நான் நடுவர்களிடம் கேட்டு முறையாக பர்மிஷன் வாங்கி தான் இன்னொரு ஆளை கூட்டிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். அதோடு வேணும்னா நீங்க கூட ஆளை மாத்திக்கலாம் என்று சொல்கிறார்.

அதற்கு பிறகு ஆறாவது போட்டி நடந்து முடிய அப்போது கோபி டீம் பைவ் ஸ்டார் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சமைத்து இருப்பதாக பாராட்டுகின்றனர். பாக்யாவின் சமையல் மண் மணம் மாறாமல் இருப்பதாகவும் சொல்கின்றனர். இறுதியாக கோபி பாக்யாவை விட ஒரு மார்க் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள். இதைக் கேட்டு ஈஸ்வரி பாக்யா எல்லோரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். கோபி சந்தோஷத்தில் பெருமிதத்தோடு சிரிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications