சிறகடிக்க ஆசை: ரோகிணியின் மகன் பற்றி விஜயாவுக்கு தெரிய வந்த உண்மை.. மனோஜ் சொன்ன அதிர்ச்சி வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் ஜூலை 29ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி தன்னுடைய மகனுக்கு பிறந்தநாளுக்கு துணி எடுக்க போன இடத்தில் விஜயாவிடம் சிக்கி இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே முத்து மற்றும் மீனாவின் நகைகளை மாற்றிய மனோஜ் மற்றும் விஜயா வீட்டில் மாட்டி இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மனோஜ்க்கு மொட்டை கடிதம் ஒன்று வந்து இருக்கிறது. அதில் யார் என்று சொல்லாத நபர் உங்களை சுற்றி இருப்பவர்களால் உங்களுக்கு பிரச்சனை வரப்போகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

அதை நினைத்து மனோஜ் பயத்தில் இருக்கிறார். யாரால் நமக்கு பிரச்சனை வரப்போகிறது? இந்த கடிதத்தை யார் எழுதியிருப்பார்கள்? என்று யோசனையில் இருக்கிறார். அதே நேரத்தில் இதை தெரிந்து கொண்ட ரோகிணி இந்த கடிதத்தை யார் எழுதியிருப்பார்கள் என்று குழப்பத்தில் இருக்கின்றார். இவர்களைப் போல இப்போது விஜயாவை விடவும் மனோஜ் இந்த கடிதத்தை காட்டி இந்த கடிதம் எனக்கு யார் எழுதியிருப்பாங்கன்னு தெரியலையே என்று சொல்ல,
அதற்கு விஜயா நீ மாசா மாசம் வீட்டுக்கு ஐம்பதாயிரம் பணம் கொடுக்கணும் என்பதற்காக புது நாடகம் எதுவும் போடுறியா? என்று மனோஜ் மீதே பழியை போட மனோஜ் எனக்கு யாரால் பிரச்சனை வர போகிறது என்று புரிந்து இருக்கிறது என சொல்லி இருக்கிறார். இதனால் மனோஜுக்கு யார் மீது சந்தேகம் வந்திருக்கிறது என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ரோகிணி தன்னுடைய மகனின் பிறந்தநாளுக்கு போவதற்காக மகனுக்கு ஒரு டிரஸ் எடுத்து இருக்கிறார். அதே கடைக்கு விஜயாவும் பார்வதியும் வந்து டான்ஸ் கிளாஸுக்கு தேவையான டிரஸ் எடுக்க வந்திருக்கின்றனர். அப்போது கடைக்காரர் ரோகிணியிடம் உங்க மகனுக்கு இந்த டிரஸ் ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பில்லை கொடுக்க விஜயா என்னது உன்னுடைய மகனா என்று அதிர்ச்சியாகி கேட்க ரோகிணி தவித்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் அடுத்த வாரத்தில் ரோகிணி மாட்டுவாரா இல்ல வழக்கம் போல இந்த முறையும் தப்பித்து விடுவாரா? என்ற கேள்விகள் தான் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஹைலைட் வைத்து சீரியலில் பல திருப்பங்கள் வைத்தாலும் ரோகிணி எந்த இடத்திலும் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் வரும் வாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications