சிறகடிக்க ஆசை: மனோஜிடம் ஜோதிடர் சொன்ன வார்த்தை.. உண்டியலை வைத்து முத்து போடும் பிளான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 30ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் தனக்கு கூட இருப்பவர்களால் பிரச்சனை வரப்போகிறது என்று வந்த மொட்டை கடிதத்தை நம்பி மனோஜ் ஜோதிடர் ஒருவரிடம் சென்று இருக்கிறார். மறுபக்கத்தில் மாடியில் வீடு கட்டுவதற்காக முத்துவும் மீனாவும் புது முயற்சி எடுத்திருக்கின்றனர்.
இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் முத்துவின் நண்பர் கார்த்தியிடம் கார் சாவியை கொடுப்பதற்கு முன்பு மீனா பல கண்டிஷன் போட்டுக் கொண்டிருக்க அதை பார்த்து அவர் ஒரு நிமிடம் பயந்து போகிறார். பிறகு முத்துவிடம் நீ இன்னும் பெருசா வளரனும் என்னை மாதிரி நிறைய பேரு உன்கிட்ட வாழனும். நீ தொழில்ல பெரிய தொழில் அதிபர் ஆக வேண்டும் என்று வாழ்த்தி பேச மனோஜ் இவன் தொழிலதிபரா? என்று கிண்டல் அடிக்கிறார்.

அதற்கு முத்து ஆமா இவன்தான் பெரிய தொழில் அதிபர். 4 லட்சத்தை ஏமாந்துட்டு வந்து நிக்கிறான் என்று கலாய்க்கிறார். ஏற்கனவே மனோஜுக்காக சப்போர்ட் செய்து வீட்டில் மாட்டி பட்ட பிரச்சனை எல்லாம் போதாது என்று மீண்டும் விஜயா மனோஜுக்காக சப்போர்ட் செய்து பேசி முத்துவிடம் பல்பு வாங்குகிறார். பிறகு மனோஜ் இதற்கெல்லாம் முடிவு கட்டுறேன். நான் போய் ஒருத்தரை பார்த்துட்டு வரேன் என்று கிளம்பி போகிறார்.
தன்னுடைய நண்பர் சந்தோஷை கூட்டிக்கொண்டு ஜோதிடர் ஒருவரை பார்த்து தனக்கு வந்த லெட்டரைப் பற்றி பேச அவர் உன்னுடைய முகத்தை பார்த்தால் பிராடு மாதிரி தான் தெரியுது. கண்டிப்பா உனக்கு பிரச்சனை வரும் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அதோடு உனக்கு பிரச்சனை வரக்கூடாது என்றால் நான் சொல்ற மாதிரி தான் டிரஸ் போடணும் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர் டிரஸ் போட வேண்டும் என்று லிஸ்ட் போட்டு சொல்கிறார்.

அதோடு நீ நான் சொல்ற மாதிரி செய்யலன்னா நீ நடுத்தெருவுக்கு வந்து பிச்சை தான் எடுக்கனும் என்று பயம் காட்ட காட்டி மனோஜ் போட்டு இருந்த சட்டையை கழட்ட சொல்லி ஒரு மஞ்சள் கலர் டவலை கொடுத்துக் போர்த்தி கொள்ள சொல்கிறார். மறுபக்கத்தில் மீனா சொன்னது போலவே முத்து ஒரு உண்டியலை வாங்கிக் கொண்டு வருகிறார். அதை பார்த்த விஜயா என்ன ரோடு ரோடா பிச்சை எடுத்து அதுல வர காசை வைத்து ரூம் கட்ட போறீங்களா என்று நக்கலாக பேச மீனா இதுல காசு சேர்த்து வச்சு ரூம் கட்ட போறோம் என்று சொல்கிறார்.
எப்படி ஒரு ரூபாய்.. இரண்டு ரூபாய் வச்சு சேர்க்க போறீங்களா என்று பேச அதற்கு முத்து மீண்டும் விஜயாவிற்கு பதிலடி கொடுத்து ஆப் செய்து விடுகிறார். அந்த நேரத்தில் மனோஜ் வாசலில் வந்து நின்று அம்மா என்று கூப்பிட அவர் நின்ற கோலத்தை பார்த்து முத்து இந்தா பிச்சைக்காரன் வந்துட்டான் என்று கலாய்க்கிறார். விஜயா என்னடா இது கோலம் என்ன என்று போர்த்தியிருந்த டவலை இழுக்க மனோஜ் எனக்கு கவசம் என்று சொல்வதோடு என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடாதீங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதை பார்த்து முத்து விஜய்யாவை கிண்டல் செய்கிறார். பிறகு முத்து அண்ணாமலையை கூப்பிட்டு அந்த உண்டியலில் காசு போட சொல்லாமலே விஜய் அவையும் கூப்பிட்டு காசு போட சொல்கிறார் அந்த நேரத்தில் அங்கு வரும் ரோகிணி மீனா கையில் வைத்திருக்கும் உண்டியலை பார்த்து கிண்டல் அடிக்க அதற்கு முத்து இதை மனோஜ் ரூமில் வைக்கலாம் திருடு போகாம இருக்கும் என்று ரோகிணியை கலாய்த்து வெறுப்பேத்தி கொண்டிருக்க மீனா நீங்க உங்க ரூமுக்குள்ள போய் பாருங்க என்று அனுப்பி வைக்க அங்கு போய் ரூமில் மனோஜ் கெட்டப்பை பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

இது என்ன கோலம் என்று ரோகிணி கேட்க இனிமே இப்படித்தான் நான் இருப்பேன் என்று ஜோசியரிடம் போய் தான் பார்த்ததும் அவர் பேசிய விஷயம் பற்றி சொல்ல இதற்கெல்லாம் காரணம் உன்னுடைய பயம்தான் என்று திட்டினாலும் மனோஜ் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். அதோடு ஒரு வாரத்துக்கு நான் கடைக்கு வரமாட்டேன் நீயே கடையை பார்த்துக்கோ என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications