சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு போன் செய்த கிரிஷ்.. ஒட்டு கேட்ட மனோஜ்.. விஜயா கேட்ட சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 31ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். ரோகிணிக்கு அவருடைய மகன் கிருஷ் போன் செய்து தன்னுடைய பிறந்தநாளுக்கு கூப்பிட்டு இருக்கிறார். அதை மனோஜ் ஒட்டு கேட்டு விடுகிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா பூ கட்டுபவர்களை பார்க்க வந்த இடத்தில் அங்கே இருந்த பெண் தன்னுடைய புருஷனுக்காக ஸ்பெஷல் தோசை செய்து கொடுத்ததாகவும் ஆனால் அவர் அதை பாராட்டவில்லை என்று புலம்பி கொண்டிருக்கின்றார். அப்போது மீனா என்னுடைய புருஷன் நான் என்ன சமைச்சாலும் பாராட்டி சாப்பிடுவாரு நான் செஞ்ச பூரியை அவர் ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போதும் பாராட்டிக்கொண்டே சாப்பாடுவார் என்று பெருமையாக பேசுகிறார்.

Siragadikka aasai serial

அதற்கு அங்கிருந்தவர்கள் ஆசை 60 நாள் மோகம் முப்பது நாள் அவ்வளவு தான் கல்யாண வாழ்க்கை. அப்புறம் எல்லோரும் ஒரே மாதிரி தான் நீ வேணா ஸ்பெஷல் தோசை செஞ்சு கொடு... தோசை நல்லா இருக்கான்னு நீ கேட்கக்கூடாது அவங்களா பாராட்டணும் என்று கண்டிஷன் சொல்லி 50 ரூபாய் பெட்டு கட்ட மீனா என் புருஷன நம்பி 5000 கூட பெட் கட்டுவேன் என்று பில்டப் செய்கிறார்.

அதற்கு அங்கிருந்த பெண் எங்களால் அவ்வளவு பணம் தர முடியாது அதனால 50 ரூபாய்க்கு இருக்கட்டும் என்று சொல்லி விடுகிறார். பிறகு சமையல் குறிப்பையும் அங்கிருந்த பெண் சொல்லிக் கொடுக்கிறார். அடுத்ததாக மனோஜ் விஜயா மற்றும் ரோகிணியை கூட்டிட்டு வந்து தான் வாங்கி வைத்திருக்கும் கலர் கலரான சட்டைகளை காட்டி நான் இனிமேல் இப்படித்தான் டிரஸ் பண்ண போறேன் என்று சொல்ல விஜயா மனோஜை திட்டி விடுகிறார்.

Siragadikka aasai serial

ஆனாலும் மனோஜ் என் வளர்ச்சியை பார்த்து நிறைய பேர் அதை கெடுக்க முயற்சி பண்றாங்க அதனால நான் ஜோசியர் சொல்லுவதுபோல தான் செய்யப் போகிறேன் என்று சொல்லிவிடுகிறார். அதைத் தொடர்ந்து மீனா ஸ்பெஷல் தோசை செய்ய முதலில் சாப்பிடும் அண்ணாமலை ஆஹா ஓஹோ என்று பாராட்டுகிறார். அதை தொடர்ந்து விஜயா சாப்பிட வரும்போது இது என்ன பச்சையா இருக்கு மிளகாய் அரைச்சி ஊத்தி கொல்ல பாக்குறியா என்று திட்ட அண்ணாமலை தோசை பற்றி விளக்கம் கொடுக்கிறார்.

பிறகு சாப்பிட்டு பார்த்துவிட்டு சாப்பிடற மாதிரி தான் இருக்கு என்று சொல்கிறார். வீட்டில் இருக்கும் எல்லோரும் சாப்பிட்டு விட்டு மீனாவை பாராட்டுகின்றனர். ஆனால் முத்து போன் பேசியபடியே நடந்து கொண்டே சாப்பிடுகிறார். ஒவ்வொரு முறையும் மீனாவை கூப்பிட்டதும் மீனா ஆவலுடன் ஓடிப்போய் என்னவென்று கேட்க அவர் தண்ணீர் சட்னி என்று ஒவ்வொன்றாக கேட்டு மீனாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். கடைசியில் முத்து எதுவும் சொல்லாமல் கிளம்பி செல்ல மீனா கவலைப்படுகிறார்.

Siragadikka aasai serial

அடுத்ததாக ரோகிணி கடைக்கு வந்ததும் க்ரிஷ் போன் செய்ய ரோகிணி போனை எடுத்து பேசும்போது எனக்கு பிறந்தநாள் நீ வந்துருவதானம்மா என்று கேட்க, ரோகிணி கண்டிப்பா வருவேன் என்று சொல்லவும் எனக்கு கோட்டு சூட்டு வாங்கிட்டு வாங்க நீங்க கொண்டு வர டிரஸ் தான் நான் போட்டுக்குவேன் என்று சொல்கிறார்.

ரோகிணி நான் வாங்கிட்டு வரேன் என்று பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த மனோஜ் இதை ஒட்டு கேட்டு யாரு கிட்ட நீ வரேன்னு சொல்ற என்று கேட்க அதற்கு ரோகிணி என்னுடைய கிளையண்ட் வீட்ல பர்த்டே பார்ட்டி ஒன்னு இருக்கு அதுக்காக வரேன்னு சொன்னதாக சொல்லி சமாளித்து மகனுக்கு டிரஸ் எடுக்க கடைக்கு செல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+