சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு
சென்னை: விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்து வருகிறது. ஒருபுறம் மனோஜ் - ரோகிணி விவாகரத்து விவகாரம் தீவிரமடைய, மறுபுறம் ரேகாவை மீட்க முத்து போடும் தைரியமான திட்டம் கதையை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
ரோகிணியை சந்திக்க சென்ற மனோஜ், அவரிடம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு பேச ஆரம்பிக்கிறார். அப்போது ரோகிணி, "நாம் இருவரும் தனியாக ஒரு வீட்டில் சந்தோஷமாக வாழலாம்" என்று மீண்டும் உறவை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் மனோஜோ அதிரடியாக, "எனக்கு டைவர்ஸ் வேண்டும்" என்று நேரடியாக கூறிவிடுகிறார்.
இந்த வார்த்தையை கேட்ட ரோகிணி முதலில் அதிர்ச்சியடைந்தாலும், சில நிமிடங்களில் அமைதியாக ஒரு பெரிய கண்டிஷன் போடுகிறார்.
"உன்னை ஜெயிலில் இருந்து வெளியே எடுக்க நான் 5 லட்சம் ரூபாய் செலவழித்தேன். அந்த பணத்தை திருப்பிக் கொடு... உடனே டைவர்ஸ் தருகிறேன்!" என்று ரோகிணி சொன்னதும் மனோஜின் முகமே மாறிப்போகிறது.
வீட்டுக்கு வந்ததும் அதிர்ச்சி
ரோகிணியின் வீட்டிலிருந்து திரும்பிய மனோஜ், வீட்டில் தனியாக அமர்ந்து குழப்பத்துடன் யோசித்து கொண்டிருக்கிறார். அப்போது விஜயா வந்து என்ன நடந்தது என்று கேட்டபோது, ரோகிணி டைவர்ஸ் தர சம்மதித்திருப்பதாக கூறுகிறார்.
அதை கேட்டதும் விஜயாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம். ஆனால் அடுத்த நொடியே 5 லட்சம் ரூபாய் கண்டிஷனை மனோஜ் சொன்னதும் முகம் சுருங்கிவிடுகிறது.
அண்ணாமலையும் அதிரடியாக, "அந்த பணத்தை நீதான் கட்ட வேண்டும். இதிலிருந்து வெளியே வர வழி தேடு!" என்று கூறிவிடுகிறார். இதனால் மனோஜ் இன்னும் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். மனோஜ்க்கு மட்டும் பண பிரச்சனை தீரவே தீராது போல. என்ன பிரச்சனை வந்தாலும் கடைசியில் இப்படித்தான் பணத்தால் மனோஜ்க்கு செக் வருகிறது.
உயிரை பணயம் வைக்கும் முத்து
மறுபுறம் ரேகா திருப்பதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக சத்யா தகவல் தருகிறார். உடனே சத்யா வீட்டிற்கு செல்லும் முத்து, ரேகாவிடம் போனில் பேசுகிறார். அப்போது கண்ணீருடன் பேசும் ரேகா, "எப்படியாவது என்னை இங்கிருந்து கூட்டிட்டு போங்க..." என்று கதறுகிறார். ரேகாவின் குரலை கேட்ட முத்து, அவளை காப்பாற்ற எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள தயார் ஆகிறார்.
முத்துவின் மாஸ்டர் பிளான்
ரேகாவிடம், "நீ மயக்கம் போட்டு விழுந்த மாதிரி நடி. அப்போதுதான் உன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள். அங்கிருந்து நாங்கள் உன்னை மீட்டுவிடலாம்" என்று பிளான் போட்டு குடிக்கிறார் அதற்கு ரேகாவும் சம்மதிக்கிறார்.
பிறகு திட்டமிட்டபடி மயக்கம் போட்டு விழுந்தது போல நடிக்க, குடும்பத்தினர் அவளை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். களவாணி படத்தில் ஓவியா நடித்து ஹாஸ்பிடல் வந்தது போல தான் இந்த காட்சி இருக்கிறது. இதனால் முத்துவின் திட்டம் வெற்றி பெறப் போகிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

சிந்தாமணி மட்டும் ஏமாறவில்லை
ரேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் சிந்தாமணியின் கணவருக்கு தெரியவர, அவர் உடனடியாக சிந்தாமணிக்கு தகவல் தருகிறார். ஆனால் சிந்தாமணி சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.
"இது முத்துவின் வேலைதான். அவன் ரேகாவை அங்கிருந்து தூக்க ஏதாவது பிளான் போட்டிருப்பான்" என்று உடனே சந்தேகப்படுகிறார். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய ஆட்களை மருத்துவமனைக்கு அனுப்புமாறும் கூறுகிறார். இதை கேட்ட ரேகாவின் அப்பா நேரடியாக கிளம்ப முடிவு செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
முத்துவின் திட்டத்தை சிந்தாமணி முறியடிப்பாரா? ரேகா மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முடியுமா? ரோகிணி கேட்ட 5 லட்சத்தை மனோஜ் ஏற்பாடு செய்வாரா? என்ற கேள்விகளுக்கான பதிலை அறிய ரசிகர்கள் அடுத்த எபிசோடைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
மாஸ்டர் மகேந்திரன் பாவம்.. 3 நிமிட வீடியோவால் மாறிய வாழ்க்கை! இனிதான் பிரச்சனை.. சிறகடிக்க ஆசை நடிகர் ஓபன் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு














Click it and Unblock the Notifications